3rd Grade Maths Term 2 Unit 1: Lattice Multiplication Method Explained | Samacheer Kalvi

3rd Grade Maths Term 2 Unit 1: Lattice Multiplication Method Explained | Samacheer Kalvi

லாட்டிஸ் பெருக்கல்: 3 ஆம் வகுப்பு கணக்கு (பருவம் 2, அலகு 1)

அறிமுகம்

இரண்டு இலக்கங்களை விட அதிகமாக கொண்ட எண்களை பெருக்க லாட்டிஸ் பெருக்கல் முறை உதவியாக இருக்கும்.

ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம்:

(i) புள்ளி பெருக்கல்

(ii) மீள் கூட்டல்

(iii) மறு குழுவாக்கம்

(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி

(v) லாட்டிஸ் பெருக்கல்

லாட்டிஸ் பெருக்கல் விளக்கம்

இரண்டு இலக்கங்களை விட அதிகமாக கொண்ட எண்களை பெருக்க லாட்டிஸ் பெருக்கல் முறை உதவியாக இருக்கும். லாட்டிஸ் பெருக்கல் முறையில் பின்வரும் படிகளை பின்பற்றுகிறோம்.

படி 1: பெருக்க வேண்டிய எண்களை பின்வருமாறு எழுதவும்.

Step 1 of Lattice Multiplication

படி 2: சதுர கட்டங்களின் மூலைவிட்டங்களை வரையவும்.

Step 2 of Lattice Multiplication

படி 3: எண்களை பெருக்கி கட்டங்களில் கீழே காட்டியுள்ளதைப் போல் எழுதவும்.

Step 3 of Lattice Multiplication

படி 4: ஒவ்வொரு மூலைவிட்டத்திற்கும் கீழேயுள்ள எண்களை கூட்டி பின்வருமாறு எழுதவும்.

Step 4 of Lattice Multiplication

படி 5: விடையைகாண கூடுதல்களை பின்வருமாறு வரிசையாக எழுதவும்.

Step 5 of Lattice Multiplication

பயிற்சி

1. படிநிலைகள் வழியாக பெருக்கற்பலன் காண்க.

(i) 20 × 2 =

(ii) 21 × 4 =

(iii) 65 × 5 =

(iv) 14 × 3 =

(v) 26 × 10 =

விடைகள் (Solutions)

i) 20 × 2 = 40

ii) 21 × 4 = 84

iii) 65 × 5 = 325

iv) 14 × 3 = 42

v) 26 × 10 = 260

Worked solution for question 1

2. பின்வரும் அட்டவணையை நிரப்புக.

(i) ஓர் எழுதுகோலின் விலை ₹5 எனில், 8 எழுதுகோல்களின் விலை என்ன?

8 × 5 = 40

(ii) ஒரு பையில் 6 பந்துகள் உள்ளதெனில், 5 பைகளில் எத்தனை பந்துகள் இருக்கும்?

6 × 5 = 30

(iii) ஒரு புத்தகத்தின் விலை ₹10 எனில், 7 புத்தகங்களின் விலை என்ன?

7 × 10 = 70

(iv) ஒரு சட்டையில் 6 பொத்தான்கள் இருந்தால், 3 சட்டைகளில் 4 பொத்தான்கள் இருக்கும்.

3 × 6 = 18

3. பின்வரும் எண்களின் பெருக்கற்பலனை லாட்டிஸ் பெருக்கல் முறையில் காண்க.

(i) 22 × 25

(ii) 34 × 51

(iii) 45 × 24

தீர்வு (Solution)

Worked solutions for lattice multiplication problems