TNPSC - All General Question And Answer ( 1093 Pages )

Tamil Eligibility Test - 2023 (SSLC Standard)

COMPUTER BASED TEST - 2023

PAPER - II / தாள் - II

COMPULSORY TAMIL LANGUAGE ELIGIBILITY TEST (SSLC standard) and GENERAL STUDIES (Degree standard)

கட்டாய தமிழ்மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு தரம்) மற்றும் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

பகுதி-அ (தமிழ் தகுதி தேர்வு)
Part-A (Tamil Eligibility Test)

வினாக்கள் : 1–100

மொத்த மதிப்பெண்கள் : 150

Questions : 1–100

Total Marks : 150

1.

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

  • (A)மனிதன் வாழமுடியாது இல்லாத உலகில் பறவை.
  • (B)மனிதன் இல்லாத உலகில் வாழமுடியாது பறவை.
  • (C)பறவை உலகில் மனிதன் வாழமுடியாது இல்லாத.
  • (D)பறவை இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது.
  • (E)விடை தெரியவில்லை
2.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

  • (A)குடும்பை, கொம்பை, கூலம், கோட்டான்
  • (B)குடும்பை, கூலம், கொம்பை, கோட்டான்
  • (C)கூலம், கோட்டான், குடும்பை, கொம்பை
  • (D)கொம்பை, கோட்டான், கூலம், குடும்பை
  • (E)விடை தெரியவில்லை
3.

கீழ்க்காணும் பெயர்ச்சொற்களில், சரியான அகர வரிசையினைத் தேர்வு செய்க.

  • (A)தையல், மான், கிளி, மனிதன், பூனை
  • (B)கிளி, மனிதன், பூனை, தையல், மான்
  • (C)மான், கிளி, பூனை, தையல், மனிதன்
  • (D)கிளி, தையல், பூனை, மனிதன், மான்
  • (E)விடை தெரியவில்லை
4.

இரு பொருள் தருக.
மறை

  • (A)வேதம், மறைத்தல்
  • (B)மறைத்துவை, காட்டாதே
  • (C)நோவு, வலிமை
  • (D)வேதம், உலகம்
  • (E)விடை தெரியவில்லை
5.

இரு பொருள் தருக.
பிடி

  • (A)பிடித்தல், வெட்கம்
  • (B)பிடித்தல், பெண் யானை
  • (C)பாட்டு, இனிய ஒலி
  • (D)யானை, களிறு
  • (E)விடை தெரியவில்லை
6.

இருபொருள் கொண்ட ஒரு சொல்
உழவர்கள் நாற்று ________ வயலுக்குச் செல்வர்
குழந்தையை பொதுவாக ________ என்போம்.

  • (A)நடத்தல்
  • (B)நட
  • (C)நடுதல்
  • (D)நடவு
  • (E)விடை தெரியவில்லை
7.

இருபொருள் கொண்ட ஒரு சொல்
நீதி மன்றத்தில் தொடுப்பது ________
‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு ________

  • (A)தொடுத்தல்
  • (B)பழக்கம்
  • (C)வாதம்
  • (D)வழக்கு
  • (E)விடை தெரியவில்லை
8.

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(குழந்தைகள் தினம்)

  • (A)காமராசர் பிறந்தநாள்
  • (B)அப்துல் கலாம் பிறந்தநாள்
  • (C)விவேகானந்தர் பிறந்தநாள்
  • (D)ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்
  • (E)விடை தெரியவில்லை
9.

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(கரு)

  • (A)குரலில் இருந்து பேச்சு எனில் விரலில் இருந்து ________
  • (B)கல் சிலை ஆகுமெனில், நெல் ________ ஆகும்
  • (C)நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ________
  • (D)விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ________
  • (E)விடை தெரியவில்லை
10.

அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க.
கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் (எழுத்துகள்)

  • (A)ஓவியம்
  • (B)வட்டெழுத்து
  • (C)தமிழெழுத்து
  • (D)கண்ணெழுத்துகள்
  • (E)விடை தெரியவில்லை
11.

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைக் கண்டறி.

  • (A)உபசரித்தல் - ஓம்புதல்
  • (B)உபசரித்தல் - விருந்தோம்பல்
  • (C)உபசரித்தல் - பெருஞ்செல்வன்
  • (D)உபசரித்தல் - பணியாளன்
  • (E)விடை தெரியவில்லை
12.

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
சரியான இணையைத் தேர்ந்தெடு.

  • (A)உஷார் - விளிமை
  • (B)உஷார் - விளிஞ்சல்
  • (C)உஷார் - விளக்கம்
  • (D)உஷார் - விழிப்பு
  • (E)விடை தெரியவில்லை
13.

வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியாக வரிசைப்படுத்துக.
பறவைகள் இடம்பெயர்தல் எனப்படும் வலசைபோதல்.

  • (A)இடம்பெயர்தல் வலசைபோதல் பறவைகள் எனப்படும்.
  • (B)பறவைகள் இடம்பெயர்தல் வலசைபோதல் எனப்படும்.
  • (C)வலசைபோதல் எனப்படும் இடம்பெயர்தல் பறவைகள்.
  • (D)வலசைபோதல் பறவைகள் இடம்பெயர்தல் எனப்படும்.
  • (E)விடை தெரியவில்லை
14.

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.

  • (A)ஐதிகம் - ஜாதகம்
  • (B)ஐதிகம் - ஐவர்
  • (C)ஐதிகம் - உலக வழக்கு
  • (D)ஐதிகம் - உலக போக்கு
  • (E)விடை தெரியவில்லை
15.

சரியான இணையைத் தேர்க.

  • (A)Ornament – விழிப்புணர்வு
  • (B)Awareness – நிறுத்தற்குறி
  • (C)Translation – மொழிபெயர்ப்பு
  • (D)Punctuation – அணிகலன்
  • (E)விடை தெரியவில்லை
16.

அலுவல் சார்ந்த சொற்கள்
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • (A)பண்டம் - பாண்டம்
  • (B)கலப்படம் - காலப்படம்
  • (C)நுகர்வோர் - நுகர்வோர்
  • (D)கடற்பயணம் - கடல்பயணம்
  • (E)விடை தெரியவில்லை
17.

சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல். (ஒலி மரபு)
புலி

  • (A)முழங்கும்
  • (B)உறுமும்
  • (C)கதறும்
  • (D)பிளிறும்
  • (E)விடை தெரியவில்லை
18.

சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல். (ஒலி மரபு)
ஆடு

  • (A)உறுமும்
  • (B)பிளிறும்
  • (C)கதறும்
  • (D)கத்தும்
  • (E)விடை தெரியவில்லை
19.

சரியான இணையைத் தேர்ந்தெடு.

  • (A)நான் கோவிலுக்குச் செல்வேன் (இறந்த காலம்)
  • (B)மேடை மீது ஏறினான் (எதிர் காலம்)
  • (C)நேற்று ஊருக்குச் சென்றேன் (நிகழ் காலம்)
  • (D)வள்ளி புத்தகம் கேட்டாள் (இறந்த காலம்)
  • (E)விடை தெரியவில்லை
20.

கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ________ மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.

  • (A)எனவே
  • (B)ஏனெனில்
  • (C)ஆகையால்
  • (D)மேலும்
  • (E)விடை தெரியவில்லை
21.

குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக.
வளி - வாளி

  • (A)பாதை - தொண்டு
  • (B)காற்று - பாத்திரம்
  • (C)கோடு - குறியீடு
  • (D)விலங்கு - தேசம்
  • (E)விடை தெரியவில்லை
22.

சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

  • (A)கோல் - மீன்
  • (B)விண் - மீன்
  • (C)வெளி - மீன்
  • (D)எழுது - கண்
  • (E)விடை தெரியவில்லை
23.

காலையில் சேவல் ________

  • (A)கத்தியது
  • (B)கூவியது
  • (C)கொக்கரித்தது
  • (D)அகவியது
  • (E)விடை தெரியவில்லை
24.

சரியான எழுத்துவழக்குத் தொடரைக் கண்டறிக.

  • (A)எண்ணெய் தேய்த்து குளித்தேன்
  • (B)எண்ணை தேச்சு குளித்தேன்
  • (C)எண்ணை தேய்த்து குளிச்சேன்
  • (D)எண்ணெய் தேச்சு குளிச்சேன்
  • (E)விடை தெரியவில்லை
25.

சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

  • (A)வலதுபக்க சுவற்றில் எழுதாதே
  • (B)வலதுபக்க சுவரில் எழுதாதே
  • (C)வலப்பக்க சுவற்றில் எழுதாதே
  • (D)வலப்பக்க சுவரில் எழுதாதே
  • (E)விடை தெரியவில்லை
26.

சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

  • (A)பாவக்கா வத்தல் வாங்கிட்டு வந்தேன்
  • (B)பாகற்காய் வற்றல் வாங்கி வந்தேன்
  • (C)பாகற்காய் வத்தல் வாங்கி வந்தேன்
  • (D)பாவக்காய் வற்றல் வாங்கி வந்தேன்
  • (E)விடை தெரியவில்லை
27.

நிறுத்தற்குறிகளை அறிதல்.
சரியான நிறுத்தற்குறியிட்ட தொடரைக் கண்டறிக.

  • (A)தமிழின் 'இனிமைதான் என்னே'
  • (B)தமிழின் இனிமைதான் என்னே!
  • (C)தமிழின் இனிமைதான் என்னே?
  • (D)தமிழின் இனிமைதான் “என்னே”
  • (E)விடை தெரியவில்லை
28.

நிறுத்தற்குறிகளை அறிதல்.
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்ட சொற்றொடரைக் கண்டறிக

  • (A)“உனக்குப் பாவு ஓடணுமா, வேண்டாமா?” என்றான் ரகு
  • (B)“உனக்குப் பாவு ஓடணுமா? வேண்டாமா?” என்றான் ரகு
  • (C)உனக்குப் பாவு ஓடணுமா வேண்டாமா? என்றான் ரகு.
  • (D)“உனக்குப் பாவு ஓடணுமா வேண்டாமா” என்றான் ரகு
  • (E)விடை தெரியவில்லை
29.

சரியான நிறுத்தற்குறிகளைக் கண்டறிக

  • (A)“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று ஔவையார் பாடியுள்ளார்
  • (B)மருந்தே ஆயினும், விருந்தொடு உண்; என்று ஔவையார் பாடியுள்ளார் !
  • (C)‘மருந்தே ஆயினும், விருந்தொடு உண்' என்று ஔவையார் பாடியுள்ளார்
  • (D)மருந்தே ஆயினும், விருந்தொடு உண். என்று ஔவையார் பாடியுள்ளார்
  • (E)விடை தெரியவில்லை
30.

வினாவகையைக் கண்டறி.
பாடலைப் பாடுவது “கமலாவா”? “விமலாவா”? என வினவுவது

  • (A)ஐயவினா
  • (B)ஏவல்வினா
  • (C)கொளல்வினா
  • (D)அறியாவினா
  • (E)விடை தெரியவில்லை
31.

சொற்களை ஒழுங்குபடுத்துக
“உணர்ந்தபடி கூறுவது உள்ளதை கவிதை”

  • (A)உள்ளதை கூறுவது உணர்ந்தபடி கவிதை
  • (B)உள்ளதை உணர்ந்தபடி கவிதை கூறுவது
  • (C)உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை
  • (D)கூறுவது கவிதை உணர்ந்தபடி உள்ளதை
  • (E)விடை தெரியவில்லை
32.

வினாவகையைக் கண்டறிக.
“கடைக்குச் சென்று சிலப்பதிகாரம் புத்தகம் இருக்கிறதா”? என்று “கடைக்காரரிடம்” வினவுது

  • (A)கொடைவினா
  • (B)ஏவல்வினா
  • (C)அறியாவினா
  • (D)கொளல்வினா
  • (E)விடை தெரியவில்லை
33.

ஊர்ப்பெயரின் மரூஉ
சரியான இணையைத் தெரிவு செய்க.

  • (A)கும்பகோணம் – குடந்தை
  • (B)நாகர்கோவில் – நாகை
  • (C)புதுக்கோட்டை – புதுவை
  • (D)புதுச்சேரி – புதுகை
  • (E)விடை தெரியவில்லை
34.

பிறமொழிச் சொற்களற்ற தொடரைக் கண்டறிக

  • (A)என் முதல் பிரச்சினை அன்று என்முன் நின்றது
  • (B)என் முதல் சிக்கல் அன்று என்முன் நின்றது
  • (C)என் பஸ்ட் சிக்கல் அன்று என் முன் நின்றது
  • (D)என் பஸ்ட் ப்ராப்ளம் அன்று என் முன் நின்றது
  • (E)விடை தெரியவில்லை
35.

வழூஉச் சொல்லற்ற தொடர் எது

  • (A)சுப்பையாவின் புஞ்சை சாலையோரத்தில் இருந்தது
  • (B)சுப்பையாவின் பூஞ்சை சாலையோரத்தில் இருந்தது
  • (C)சுப்பையாவின் புஞ்சை ரோட்டோரத்தில் இருந்தது
  • (D)சுப்பையாவின் புன்செய் சாலையோரத்தில் இருந்தது
  • (E)விடை தெரியவில்லை
36.

பொருந்தாத சொல்லைக் கண்டறிக
கேண்மை

  • (A)நட்பு
  • (B)பிரிவு
  • (C)உறவு
  • (D)தோழமை
  • (E)விடை தெரியவில்லை
37.

பொருந்தாத சொல்லை எடுத்தெழுதுக.
சுரதா இயற்றிய நூல்களுள் இல்லாதது ________

  • (A)அமுதும் தேனும்
  • (B)துறைமுகம்
  • (C)தமிழ்ச்சிட்டு
  • (D)தேன்மழை
  • (E)விடை தெரியவில்லை
38.

ஓரினம் சார்ந்த சொற்களுள் பொருந்தாத தொடரைக் காண்க.

  • (A)முத்து, பவளம், சங்கு, கிளிஞ்சல்
  • (B)குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
  • (C)நிற்பன, ஊர்வன, பறப்பன, நடப்பன
  • (D)நிலம், காற்று, வானம், மலை
  • (E)விடை தெரியவில்லை
39.

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
ஒருமை - எதிர்ச்சொல் தருக.

  • (A)ஒன்று
  • (B)ஒற்றுதல்
  • (C)பன்மை
  • (D)பண்ணுதல்
  • (E)விடை தெரியவில்லை
40.

பிரித்தெழுதுதல்
பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

  • (A)பசி + இன்றி
  • (B)பசி + யின்றி
  • (C)பசு + இன்றி
  • (D)பசு + யின்றி
  • (E)விடை தெரியவில்லை
41.

சேர்த்தெழுதுதல்
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  • (A)உள்ளுவதுஎல்லாம்
  • (B)உள்ளுவதெல்லாம்
  • (C)உள்ளுவத்தெல்லாம்
  • (D)உள்ளுவதுதெல்லாம்
  • (E)விடை தெரியவில்லை
42.

சேர்த்தெழுதுதல்
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

  • (A)வான்ஒலி
  • (B)வானொலி
  • (C)வாவொலி
  • (D)வானெலி
  • (E)விடை தெரியவில்லை
43.

சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
'Dairy Farm'

  • (A)தோல் பதனிடுதல்
  • (B)பால் பண்ணை
  • (C)சாயம் ஏற்றுதல்
  • (D)ஆயத்த ஆடை
  • (E)விடை தெரியவில்லை
44.

'Knitting' என்னும் சொல்லுக்குரிய சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

  • (A)பின்னுதல்
  • (B)முடைதல்
  • (C)வனைதல்
  • (D)புனைதல்
  • (E)விடை தெரியவில்லை
45.

கீழ்க்காணும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

  • (A)சிற்பக்கலை வடிவமைப்புகள் ஐந்து வகைப்படும்.
  • (B)மாமல்லபுரம் சிற்பங்கள் மூன்று தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை.
  • (C)‘பஞ்ச பாண்டவர் ரதம்' முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது.
  • (D)மாமல்லருக்கு குன்றின் நிழல் யானை போல் தெரிந்தது.
  • (E)விடை தெரியவில்லை
46.

செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.

  • (A)குமரன் ஓவியம் வரையவில்லை
  • (B)குமரன் ஓவியம் வரைந்தான்
  • (C)ஓவியம் குமரனால் வரையப்பட்டது
  • (D)ஓவியம் குமரன் வரைந்தது.
  • (E)விடை தெரியவில்லை
47.

‘கவிதா நேற்று வந்தாள்' என்பது எவ்வகைத் தொடர்?

  • (A)தன்வினைத் தொடர்
  • (B)பிறவினைத் தொடர்
  • (C)வினாத் தொடர்
  • (D)உணர்ச்சித் தொடர்
  • (E)விடை தெரியவில்லை
48.

செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

  • (A)அமுதா உரையைப் படித்தாள்
  • (B)அமுதா உரையைப் படிப்பித்தாள்
  • (C)உரை அமுதாவால் படிக்கப்பட்டது
  • (D)அமுதா உரையைப் படி.
  • (E)விடை தெரியவில்லை
49.

பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு

  • (A)செல்வி நேற்று வந்தாள்
  • (B)செல்வி நேற்று வருவித்தாள்
  • (C)செல்வி நேற்று வரவில்லை
  • (D)செல்வி வா
  • (E)விடை தெரியவில்லை
50.

இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக
கல்வியின் சிறப்பை மாணவன் ________.
சக மாணவர்களுக்கு ________ சென்றான்.

  • (A)உணர்த்தி, உணர்த்தி
  • (B)உணர்ந்த, உணர்த்தி
  • (C)உணர்த்தி, உணர்ந்த
  • (D)உணர்ந்த, உணர்த்தி
  • (E)விடை தெரியவில்லை
51.

இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக
கண்ணன் ________ நிலையில் பானைகளை ________.

  • (A)வனைந்தான், வளைத்த
  • (B)வளைந்தான், வளைத்த
  • (C)வனைந்த, வளைத்த
  • (D)வளைந்த, வனைந்தான்
  • (E)விடை தெரியவில்லை
52.

சொற்களை ஒழுங்குபடுத்துக.

  • (A)அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை
  • (B)அகத்திணை இடையிலான அன்புடைய தலைவன் தலைவி உறவுநிலைகளைக் கூறுவது
  • (C)அன்புடைய தலைவன் இடையிலான தலைவி உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை
  • (D)தலைவன், தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அன்புடைய அகத்திணை
  • (E)விடை தெரியவில்லை
53.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
'Cosmic rays'

  • (A)புறஊதாக் கதிர்கள்
  • (B)அகச்சிவப்புக் கதிர்கள்
  • (C)அணுக்கதிர்கள்
  • (D)விண்வெளிக் கதிர்கள்
  • (E)விடை தெரியவில்லை
54.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக.
TERMINOLOGY.

  • (A)பருவம்
  • (B)கலைச்சொல்
  • (C)கலைப் படைப்பு
  • (D)முருகியல்
  • (E)விடை தெரியவில்லை
55.

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிக.
E - mail

  • (A)இ அஞ்சல்
  • (B)மின்னஞ்சல்
  • (C)விரைவு அஞ்சல்
  • (D)கணினி அஞ்சல்
  • (E)விடை தெரியவில்லை
56.

பிழையற்ற தொடரை எழுதுக:
செழியன்

  • (A)வந்தது
  • (B)வந்தான்
  • (C)வருகின்றது
  • (D)வருவாள்
  • (E)விடை தெரியவில்லை
57.

வாக்கிய பிழையை நீக்குக:-
சென்னை என்ற நகரம்

  • (A)சென்னை என் நகரம்
  • (B)சென்னை எனும் நகரம்
  • (C)சென்னை நகரம்
  • (D)சென்னை என்னும் நகரம்
  • (E)விடை தெரியவில்லை
58.

தொல்காப்பியம் கடற்பயணத்தை ________ வழக்கம் என்று கூறுகிறது.

  • (A)நன்னீர்
  • (B)தண்ணீர்
  • (C)முந்நீர்
  • (D)கண்ணீர்
  • (E)விடை தெரியவில்லை
59.

பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
'ஆறப்போடுதல்' - தொடர் கூறும் பொருள் தெளிக

  • (A)தாமதித்தல்
  • (B)ஏமாற்றம்
  • (C)தவித்தல்
  • (D)போற்றுதல்
  • (E)விடை தெரியவில்லை
60.

பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
சரியான இணையைத் தேர்ந்தெடு

  • (A)கறை – அழுக்கு
  • (B)அலை – கூப்பிடு
  • (C)பணி – குளிர்
  • (D)தாள் – உயர்
  • (E)விடை தெரியவில்லை
61.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
"விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்."

  • (A)புதுமை என்பது என்ன?
  • (B)விருந்து என்றால் என்ன?
  • (C)விருந்தே புதுமை என்று கூறியவர் யார்?
  • (D)தொல்காப்பியர் என்பவர் யார்?
  • (E)விடை தெரியவில்லை
62.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
மாணவர்கள் ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?' என்று மாணவர்கள் கேட்கும் வினா

  • (A)அறிவினா
  • (B)அறியா வினா
  • (C)கொடைவினா
  • (D)ஏவல் வினா
  • (E)விடை தெரியவில்லை
63.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

  • (A)இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எங்கே இயற்றினார்?
  • (B)சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
  • (C)சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஏன் இயற்றினார்?
  • (D)சிலப்பதிகாரத்தை எப்போது இயற்றினார்?
  • (E)விடை தெரியவில்லை
64.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
ஸ்டீபன் ஹாக்கிங் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுகிறார்.

  • (A)தற்காலத்தின் ஸ்டீபன் ஹாக்கிங் என்று புகழப்படுபவர் யார்?
  • (B)தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர் யார்?
  • (C)ஸ்டீபன் ஹாக்கிங் ஐன்ஸ்டைன் என அழைக்கப்பட காரணம் யாது?
  • (D)ஸ்டீபன் ஹாக்கிங், ஐன்ஸ்டைன் ஒற்றுமை யாது?
  • (E)விடை தெரியவில்லை
65.

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

  • (A)பொக்கிஷம் – செல்வம்
  • (B)சாஸ்தி – மிகுதி
  • (C)விஸ்தாரம் – பெரும் பரப்பு
  • (D)சிங்காரம் – விகாரம்
  • (E)விடை தெரியவில்லை
66.

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘பசு மரத்து ஆணி போல' - உவமை கூறும் பொருள் தெளிக.

  • (A)எதிர்பாரா நிகழ்வு
  • (B)எளிதில் மனத்தில் பதிதல்
  • (C)பயனற்ற செயல்
  • (D)ஒற்றுமையின்மை
  • (E)விடை தெரியவில்லை
67.

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘மடை திறந்த வெள்ளம் போல்' – உவமை கூறும் பொருள் தெளிக.

  • (A)பலவாக
  • (B)தடையின்றி மிகுதியாக
  • (C)குறைவாக
  • (D)மிகுதியாக
  • (E)விடை தெரியவில்லை
68.

மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

  • (A)யா
  • (B)
  • (C)
  • (D)
  • (E)விடை தெரியவில்லை
69.

"வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் - எவ்வினா?

  • (A)ஏவல் வினா
  • (B)அறியா வினா
  • (C)கொடை வினா
  • (D)ஐய வினா
  • (E)விடை தெரியவில்லை
70.

பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.

  • (A)அறிவினா
  • (B)கொளல் வினா
  • (C)ஏவல் வினா
  • (D)ஐய வினா
  • (E)விடை தெரியவில்லை
71.

பொருத்தமான காலம் அமைத்தல்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
நட

  • (A)நடந்தாள் - நடக்கிறாள் - நடப்பாள்
  • (B)நடக்கிறாள் - நடந்தாள் - நடப்பாள்
  • (C)நடப்பாள் - நடக்கிறாள் - நடந்தாள்
  • (D)நடந்தாள் - நடப்பாள் - நடக்கிறாள்
  • (E)விடை தெரியவில்லை
72.

நிறுத்தற்குறிகளை அறிதல். எது சரியானது?

  • (A)"ஐயா, என் பெயர் ம.தி.கயல்.”
  • (B)ஐயா? என் பெயர் மதிகயல்
  • (C)"ஐயா என் பெயர் மதிகயல்.”
  • (D)ஐயா! என் பெயர் மதிகயல் !
  • (E)விடை தெரியவில்லை
73.

நிறுத்தற்குறிகளை அறிதல். எது சரியானது?

  • (A)“இதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய மாமல்லபுரம்.”
  • (B)இது, தான். தமிழகத்தின், மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய, மாமல்லபுரம்.”
  • (C)இது தான் ! தமிழகத்தின் ! மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய மாமல்லபுரம்.
  • (D)இது தான்? தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய மாமல்லபுரம்.
  • (E)விடை தெரியவில்லை
74.

பொருத்தமான காலம் அமைத்தல்
சரியான தொடரைத் தேர்ந்தெடு.

  • (A)பாடம் படித்து முடித்தான் (எதிர் காலம்)
  • (B)பாடம் படித்தான் (இறந்த காலம்)
  • (C)பாடம் படிக்கிறான் (எதிர் காலம்)
  • (D)பாடம் படிப்பான் (இறந்த காலம்)
  • (E)விடை தெரியவில்லை
75.

சரியான சொல்லை அறிக.

  • (A)துணர் – சீராக
  • (B)புழை - துளை
  • (C)துய்ப்பது – மலர்கள்
  • (D)லயத்துடன் – தருதல்
  • (E)விடை தெரியவில்லை
76.

பொருத்துக :-

(a) சிலம்புச் செல்வர் 1. உமா மகேஸ்வரி
(b) ஏர் புதிதா 2. கிரந்தையார்
(c) பூத்தொடுத்தல் 3. கு.ப. ராஜ கோபாலன்
(d) பரிபாடல் 4. ம.பொ.சிவஞானம்
  • (A)(a)-1 (b)-2 (c)-4 (d)-3
  • (B)(a)-2 (b)-4 (c)-1 (d)-3
  • (C)(a)-4 (b)-3 (c)-1 (d)-2
  • (D)(a)-4 (b)-1 (c)-3 (d)-2
  • (E)விடை தெரியவில்லை
77.

பொருத்துக - சரியான விடை தருக

  • (A)நெடில் தொடர்க் குற்றியலுகரம் – பாக்கு, பத்து, உப்பு
  • (B)வன்றொடர்க் குற்றியலுகரம் – ஆடு, காடு, காது
  • (C)உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் – அழகு, அரசு, மரபு
  • (D)மென்றொடர்க் குற்றியலுகரம் – செய்து, சால்பு, மார்பு
  • (E)விடை தெரியவில்லை
78.

பிழை திருத்துதல் (ஒரு - ஓர்) கீழ்க்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியான அமைந்த தொடர் எது?

  • (A)ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
  • (B)ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஓர் நாள்
  • (C)ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
  • (D)ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
  • (E)விடை தெரியவில்லை
79.

பிழையான தொடரைக் கண்டறிக.

  • (A)மரத்தின் கிளையில் ஒரு பறவை இருந்தது.
  • (B)காட்டின் நடுவே ஓர் ஆலமரம் இருந்தது.
  • (C)வீட்டின் எதிரே ஒரு உரல் இருந்தது.
  • (D)ஓர் ஊரின் நடுவே தாமரைக்குளம் இருந்தது.
  • (E)விடை தெரியவில்லை
80.

"இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்றார் காந்தியடிகள். காந்தியடிகள் குறிப்பிடும் பெரியவர் ஆவார்.

  • (A)உ.வே. சாமிநாதர்
  • (B)கவிமணி தேசிக விநாயகர்
  • (C)கால்டுவெல்
  • (D)வீரமாமுனிவர்
  • (E)விடை தெரியவில்லை
81.

'செம்மல்' என்பதன் பொருள் தருக.

  • (A)பூ வாடின நிலை
  • (B)பூவின் தோற்ற நிலை
  • (C)பூவின் மலர்ந்த நிலை
  • (D)பூவின் விரியத் தொடங்கும் நிலை
  • (E)விடை தெரியவில்லை
82.

குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப்பயன்பட்ட பொருள்களில் ஒன்று ________ ஆகும்.

  • (A)மண்துகள்
  • (B)நீர்வண்ணம்
  • (C)எண்ணெய் வண்ணம்
  • (D)கரிக்கோல்
  • (E)விடை தெரியவில்லை
83.

வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க.
நட

  • (A)நடந்து
  • (B)நடத்தல்
  • (C)நடந்தது
  • (D)நடந்த
  • (E)விடை தெரியவில்லை
84.

வேர்ச்சொல்லின் வினைமுற்று தேர்க.
"நட"

  • (A)நடந்தான்
  • (B)நடந்தது
  • (C)நடந்த
  • (D)நடத்தல்
  • (E)விடை தெரியவில்லை
85.

வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க –
'காண்'

  • (A)காண்தல்
  • (B)காணல்
  • (C)காண்பவன்
  • (D)காண்கின்ற
  • (E)விடை தெரியவில்லை
86.

படித்தான் - வேர்ச் சொல்லைத் தருக

  • (A)பாடம்
  • (B)படி
  • (C)படு
  • (D)பாடு
  • (E)விடை தெரியவில்லை
87.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
இலைக்கு வேறு பெயர்

  • (A)தளை
  • (B)தழை
  • (C)களை
  • (D)தலை
  • (E)விடை தெரியவில்லை
88.

ஒரு பொருள் தரும் பல சொற்களைக் கண்டறிக. “சொல்”

  • (A)பகுபதம், பகாபதம்
  • (B)பதம், மொழி
  • (C)கிளவி, கிழவி
  • (D)இயற்சொல், திரிசொல்
  • (E)விடை தெரியவில்லை
89.

ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைக் கூறு.
பறவையிடம் இருப்பது

  • (A)இலகு
  • (B)இறகு
  • (C)இரகு
  • (D)இளகு
  • (E)விடை தெரியவில்லை
90.

ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக.
மனம் – மணம்

  • (A)வாசனை – உள்ளம்
  • (B)உள்ளம் – வாசனை
  • (C)திருமணம் – நெஞ்சம்
  • (D)அழகு – மணத்தல்
  • (E)விடை தெரியவில்லை
91.

ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து தவறான இணையைக் கண்டறிக.

  • (A)குரங்கிடம் இருப்பது – வால்
  • (B)மன்னரிடம் இருப்பது – வால்
  • (C)மன்னரிடம் இருப்பது – வாள்
  • (D)பறவையிடம் இருப்பது – இறகு
  • (E)விடை தெரியவில்லை
92.

தவறான இணையைக் கண்டறிக.

  • (A)சொல் – சொற்கள்
  • (B)புல் – புட்கள்
  • (C)படம் – படங்கள்
  • (D)கை – கைகள்
  • (E)விடை தெரியவில்லை
93.

பிழையற்ற தொடரைக் காண்க.

  • (A)அவை பறந்து சென்றது.
  • (B)அதுகள் பறந்து சென்றன.
  • (C)அதுகள் பறந்து சென்றது.
  • (D)அவை பறந்து சென்றன.
  • (E)விடை தெரியவில்லை
94.

ஒருமை பன்மை பிழையற்ற தொடரை அறிக.

  • (A)உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன.
  • (B)உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தது.
  • (C)உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையதாக இருந்தது.
  • (D)உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையதாக இருந்தன.
  • (E)விடை தெரியவில்லை
95.

கலைச் சொல்லைப் பொருத்துக.

(a) Vowel1. மெய்யெழுத்து
(b) Consonant2. உயிரெழுத்து
(c) Conversation3. கலந்துரையாடல்
(d) Discussion4. உரையாடல்
  • (A)(a)-2 (b)-1 (c)-4 (d)-3
  • (B)(a)-1 (b)-3 (c)-4 (d)-2
  • (C)(a)-3 (b)-4 (c)-2 (d)-1
  • (D)(a)-4 (b)-2 (c)-1 (d)-3
  • (E)விடை தெரியவில்லை

உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடு (96-100):

தமிழ்நாட்டின் தேசியப் பறவையாக மரகதப்புறா விளங்குகிறது. இப்பறவை மழைக்காடுகளிலும், அடர்ந்த ஈரமான இடங்களிலும் வாழ்கின்றது. இப்பறவையின் இறக்கைகள் மரகதப்பச்சை நிறத்தில் இருக்கும்.

மரகதப்புறா, பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்புகிறது. இப்பறவை விதைகள், பழங்கள், பல்வேறு வகையான தாவரங்களை விரும்பி உண்ணும். இப்பறவை மரங்களில் கூடுகட்டி, முட்டையிடுகிறது. இப்பறவையின் முட்டை மஞ்சள் கலந்த வெண்ணிறத்தில் காணப்படும். இப்பறவை எளிதாகப் பழகக்கூடிய வகையில் உள்ளது.

96.

தமிழ்நாட்டின் தேசியப்பறவை

  • (A)மயில்
  • (B)காகம்
  • (C)மைனா
  • (D)மரகதப்புறா
  • (E)விடை தெரியவில்லை
97.

தமிழ்நாட்டின் தேசியப்பறவை வாழுமிடங்கள்

  • (A)மலை
  • (B)மழைக்காடு
  • (C)பள்ளத்தாக்கு
  • (D)பாலைவனம்
  • (E)விடை தெரியவில்லை
98.

இதன் முட்டையின் நிறம்

  • (A)சிவப்பு
  • (B)மஞ்சள்
  • (C)நீலநிறம்
  • (D)மஞ்சள் கலந்த வெண்மை நிறம்
  • (E)விடை தெரியவில்லை
99.

இப்பறவை முட்டையிடும் இடங்கள்

  • (A)நீரில்
  • (B)மரங்களில்
  • (C)நிலத்தில்
  • (D)திறந்த வெளி
  • (E)விடை தெரியவில்லை
100.

இப்பறவையின் இறக்கைகளின் நிறம்

  • (A)சிவப்பு
  • (B)மரகதப்பச்சை
  • (C)நீலம்
  • (D)கருமை
  • (E)விடை தெரியவில்லை

OMTEX CLASSES TNPSC - All General Question And Answer ( 1093 Pages )