OMTEX AD 2

3rd Std Maths Term 2 Unit 1: Number Operations in Daily Life

3 ஆம் வகுப்பு கணக்கு: இரண்டாம் பருவம் அலகு 1 - எண்கள்

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

அன்றாட வாழ்வியல் சூழலில் எண் செயல்கள்

எண்கள் - தலைப்பு

எடுத்துக்காட்டுகளுடன் கூடிய கணக்குகளுக்கான தீர்வுகள்

எடுத்துக்காட்டு 1

ஓர் அழிப்பானின் விலை ₹4 எனில், 2 அழிப்பான்களின் விலை என்ன?

இரண்டு அழிப்பான்கள்

4 + 4 = 8

2 × 4 = 8

இரண்டு அழிப்பான்களின் விலை = 2 × 4 = 8

எடுத்துக்காட்டு 2

ஒரு பெட்டியில் 6 முட்டைகள் இருக்குமெனில், 5 பெட்டிகளில் எத்தனை முட்டைகள் இருக்கும்?

முட்டை பெட்டிகள்

பெட்டிகளின் எண்ணிக்கை = 5

ஒரு பெட்டியிலுள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 6

மொத்த முட்டைகளின் எண்ணிக்கை = 5 × 6 = 30

பயிற்சி

1. ஒரு பெட்டியில் 4 பொம்மைகள் உள்ளதெனில், 9 பெட்டிகளில் உள்ள பொம்மைகளின் எண்ணிக்கை எத்தனை?

பொம்மை பெட்டிகள்

பெட்டிகளின் எண்ணிக்கை = 9

ஒரு பெட்டியிலுள்ள பொம்மைகளின் எண்ணிக்கை = 4

பொம்மைகளின் மொத்த எண்ணிக்கை = 9 × 4 = 36

2. ஒரு பையில் 3 வண்ண எழுதுகோல்கள் இருக்குமெனில், 9 பைகளில் வண்ண எழுதுகோல்கள் எத்தனை இருக்கும்?

வண்ண எழுதுகோல்கள்

பைகளின் எண்ணிக்கை = 9

ஒரு பையிலுள்ள வண்ண எழுதுகோல்களின் எண்ணிக்கை = 3

வண்ண எழுதுகோல்களின் மொத்த எண்ணிக்கை = 9 × 3 = 27

3. பின்வரும் பெருக்கற்பலனுக்கு பெருக்கல் கூற்றினை எழுதுக.

பெருக்கல் கூற்று

24

3 × 8 ; 12 × 2 ; 2 × 12 ; 1 × 24 ; 24 × 1

45

15 × 3 ; 3 × 15 ; 45 × 1 ; 1 × 45

36

3 × 12 ; 18 × 2 ; 2 × 18 ; 36 × 1 ; 1 × 36

16

2 × 8 ; 4 × 4 ; 8 × 2 ; 16 × 1 ; 1 × 16

பயிற்சி தாள்