Showing posts with label எண்கள். Show all posts
Showing posts with label எண்கள். Show all posts

3rd Maths: Term 2 Unit 1 - Symbol of Multiplication | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

பெருக்கல் குறி

பெருக்கல் குறி

‘×’ என்ற குறியீட்டை பெருக்கலை குறிப்பிட பயன்படுத்துகிறோம்.

பெருக்கல் குறிக்கான எடுத்துக்காட்டு

5 குழுக்களில் 4 மரங்கள் என மொத்தம் 20 மரங்கள் உள்ளன. இதனை நாம் 4 × 5 = 20 என எழுதலாம்.

பெருக்கல் முறைகள்

ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம்

(i) புள்ளி பெருக்கல்

(ii) மீள் கூட்டல்

(iii) மறு குழுவாக்கம்

(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி

(v) லாட்டிஸ் பெருக்கல்

3rd Grade Maths: Numbers (Term 1, Unit 2) - Reading and Writing Three-Digit Numbers

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

அனைத்து மூன்றிலக்க எண்களையும் மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக.

3rd Maths : Term 1 Unit 2 : Numbers

ஆசிரியர் குறிப்பு : குழந்தைகளை, கணித உபகரணங்கள் (Maths Kit) பயன்படுத்தி 3 இழக்க எண் பலவற்றைக் கண்டுபிடித்து ஆராய்ச் சொல்ல வேண்டும்.

அனைத்து மூன்றிலக்க எண்களையும் மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக.

ஆணிமணிச்சட்டத்தில் எண் 100 ஐக் குறிப்போமா?

Abacus showing number 100

ஒன்றுகளில் மணிகள் இல்லாததால் 0 ஒன்றுகள்.

பத்துகளில் மணிகள் இல்லாததால் 0 பத்துகள்.

நூறுகளில் 1 மணி இருப்பதால் 1 நூறு.

நூறின் இடமதிப்பு ஆனது பத்தின் இடமதிப்பை விட அதிகம்.

நூறு (அல்லது) 100 என்பது மிகச்சிறிய மூன்றிலக்க எண்.

எடுத்துக்காட்டுகள்

Examples of three-digit numbers

செயல்பாடு 1

10 ஒன்றுகள் = 1 பத்து

10 பத்துகள் = 1 நூறு

10 நூறுகள் = 1 ஆயிரம்

Activity 1 - Place Value Chart

ஆசிரியர் குறிப்பு : குழந்தைகளை, கணித உபகரணங்கள் (Maths Kit) பயன்படுத்தி 3 இழக்க எண் பலவற்றைக் கண்டுபிடித்து ஆராய்ச் சொல்ல வேண்டும்.

101 முதல் 200 வரை எண்களை வாசித்து எழுதுக.

Number grid from 101 to 200

எண் பெயர்கள்

101 என்ற எண் உருவிற்கான எண் பெயரை நூறுடன் ஒன்று சேர்த்து நூற்றி ஒன்று என எழுதலாம். 199 இன் எண் பெயரை நூற்றி தொண்ணூற்றி ஒன்று என எழுதலாம்.

செயல்பாடு 2

கொடுக்கப்பட்ட எண்பெயருக்கு எண் உருக்களை எழுதுக.

Activity 2 - Write numerals for number names

செயல்பாடு 3

கீழ்க்காணும் எண்களுக்கு எண் பெயர் எழுதுக.

Activity 3 - Write number names for numerals

செயல்பாடு 4

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி மூன்றிலக்க எண்களை உருவாக்குக.

Activity 4 - Form three-digit numbers

எண்ணுருவிலிருந்து எண் விரிவாக்கம்

அடிக்கோடிட்ட இலக்கத்தின் எண் பெயர்.

Place value of underlined digit

I. ஆணிமணிசட்டத்தில் குறிக்கப்பட்ட எண்களை அவற்றின் இடமதிப்பினை எழுதி கண்டறிக.

Abacus Example 1

Abacus problem 1

3 – நூறுகள்

4 – பத்துகள்

2 – ஒன்றுகள்

300 + 40 + 2

விடை : 342

Abacus Example 2

Abacus problem 2

4 – நூறுகள்

2 – பத்துகள்

1 – ஒன்றுகள்

400 + 20 + 1

விடை : 421

Abacus Example 3

Abacus problem 3

1 – நூறுகள்

5 – பத்துகள்

3 – ஒன்றுகள்

100 + 50 + 3

விடை: 153

II. கொடுக்கப்பட்ட எண்களை ஒன்றுகள், பத்துகள் மற்றும் நூறுகளாக விரித்தெழுதுக.

Expand numbers into place values

III. கொடுக்கப்பட்ட எண்களின் விரிவாக்கங்களுக்கான சுருக்கிய வடிவங்களை எழுதுக.

Write short form for expanded numbers

கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து தாவி எண்ணுதல்

எடுத்துக்காட்டு

Example of skip counting

1. 10 11 12 13 14 15 → ஒன்றுகளில் எண்ணவும்

2. 62 64 66 68 70 72 → இரண்டுகளில் எண்ணவும்

பின்வருவனவற்றை 5, 10 மற்றும் 100 களால் தாவி எண்ணி நிரைவு செய்க.

1. 250 255 260 265 270

2. 500 510 520 530 540

3. 100 200 300 400 500 600

Skip counting practice chart

3rd Grade Maths Term 1 Unit 2: Number Sequence up to 1000 | Samacheer Kalvi

எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - எண்களின் வரிசை 1000 வரை | 3rd Maths : Term 1 Unit 2 : Numbers

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

எண்களின் வரிசை 1000 வரை

• எண்கள் 0,1,2,3,4,5,6,7,8 மற்றும் 9 என்பன ஓரிலக்க எண்கள் ஆகும்.

• எண்கள் 10 முதல் 99 முடிய உள்ள எண்கள் ஈரிலக்க எண்கள் ஆகும்.

எண்களின் வரிசை 1000 வரை.

நாம் அறிவோம்.

• எண்கள் 0,1,2,3,4,5,6,7,8 மற்றும் 9 என்பன ஓரிலக்க எண்கள் ஆகும்.

• எண்கள் 10 முதல் 99 முடிய உள்ள எண்கள் ஈரிலக்க எண்கள் ஆகும்,

மிகப்பெரிய ஈரிலக்க எண் 99 ஆகும்,

மிகச்சிறிய ஈரிலக்க எண் 10 ஆகும்,

9 உடன் 1 ஐ கூட்டும் போது நமக்கு 10 கிடைக்கிறது.

பின்வருபவை என்னவென்று உன்னால் கூறமுடியுமா ஆம் எனில் இவை

3 ஆம் வகுப்பு கணக்கு: முதல் பருவம் அலகு 2: எண்கள் - உதாரணம் 1

எண்ணுரு 100, “நூறு என்ற எண்ணைக் குறிக்கிறது. இது மிகச்சிறிய மூன்றிலக்க எண். இதைப் போன்று. நீங்கள் இதை முயற்சி செய்யவும்.

3 ஆம் வகுப்பு கணக்கு: முதல் பருவம் அலகு 2: எண்கள் - உதாரணம் 2

எண்ணுரு 1000, என்பது “ஆயிரம்” என்ற எண்ணைக் குறிக்கிறது. இதுவே மிகச்சிறிய நான்கிலக்க எண் ஆகும்.

Tags : Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.

3rd Maths : Term 1 Unit 2 : Numbers : Numbers sequence upto 1000 Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள் : எண்களின் வரிசை 1000 வரை - எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

Subtraction with Regrouping up to 99 | Class 2 Maths Term 2 Unit 2

99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம் செய்து கழித்தல்

கலைச் சொற்கள் : கழித்தல், வேறுபாடு, மீதி, வித்தியாசம்

நினைவு கூர்தல்

(i) கீழே உள்ள ஈரிலக்க எண்களைக் கழிக்க.

ஈரிலக்க எண்களைக் கழித்தல் பயிற்சி

(ii) 2 அணில்கள் மரப்பொந்தில் கொட்டைகளைச் சேர்த்துவைத்தன. அவற்றின் உரையாடலைக் கவனிக்கவும்.

அணில்களின் உரையாடல்

நாம் 58 கொட்டைகள் சேர்த்து வைத்துள்ளோம்.

ஆனால், முதல் நாளில் நாம் 12 கொட்டைகளைச் சாப்பிட்டோமே.

இரண்டாம் நாள் 10 கொட்டைகளைச் சாப்பிட்டோம்.

மூன்றாம் நாள் 16 கொட்டைகளைச் சாப்பிட்டோம்.

இப்போது மீதம் எத்தனை உள்ளன எனத் தெரியவில்லையே!

மீதம் எத்தனை கொட்டைகள் உள்ளன என்பதைக் கண்டறிய நீங்கள் உதவ முடியுமா?

மொத்தக் கொட்டைகள் .......... 58

முதல் நாளிற்குப் பிறகு மீதம் உள்ள கொட்டைகளின் எண்ணிக்கையை அறிய நாம் 58 இலிருந்து 12 ஐக் கழிக்கவேண்டும்.

58 கழித்தல் 12

இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாளில் மீதமுள்ள கொட்டைகளின் எண்ணிக்கையை அறிய நாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கழித்தல் வழிமுறைப்படிக் கழித்துக் கண்டறியலாம்.

பயணம் செய்வோம்

கவின், கவினி, திருமகன் மற்றும் சுடர் ஆகிய 4 நண்பர்களும் புளியங்கொட்டைகளைச் சேகரித்து வந்து வடிவியல் உருவங்கள் மீது வைத்து உருவங்களை உருவாக்கினர்.

கலைச் சொற்கள் : கழித்தல், வேறுபாடு, மீதி, வித்தியாசம்

நண்பர்கள் புளியங்கொட்டைகளை வைத்து விளையாடுகிறார்கள்

அவர்கள் பயன்படுத்திய கொட்டைகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

பயன்படுத்திய கொட்டைகள் அட்டவணை

கவின் 22 புளியங்கொட்டைகளை எடுத்து முக்கோணம் செய்வதற்கு 9 புளியங்கொட்டைகளைப் பயன்படுத்தினான் எனில் அவனிடம் மீதமுள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கையைக் கண்டறிக? 13 புளியங்கொட்டைகள் மீதமுள்ளன

சுடர் 54 புளியங்கொட்டைகளை எடுத்து 38 புளியங்கொட்டைகளைச் செவ்வகம் செய்வதற்குப் பயன்படுத்தினாள் எனில், அவளிடம் மீதமுள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை எண்ணிக்கையைக் கண்டுபிடி? 16 புளியங்கொட்டைகள் மீதமுள்ளன

ஆசிரியருக்கான குறிப்பு

ஆசிரியர் நிறைய வினாக்களை வினவி மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலைக் கொண்டு விடைகாண உதவ வேண்டும்.

கற்றல்

மணிகளைக் கொண்டு கழித்தல்

கவின் தான் திரட்டிய புளியங்கொட்டைகளைக் கொண்டு முக்கோணம் அமைத்தான். அட்டவணையை உற்றுநோக்கிக் கழித்தல் கூற்றினை எழுதி அவனிடம் மீதமுள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.

கவினிடம் மீதமுள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கையை அறிய அவன் திரட்டிய புளியங்கொட்டைகளிலிருந்து அவன் பயன்படுத்திய புளியங்கொட்டைகளின் எண்ணிக்கையைக் கழிக்கவேண்டும்.

புளியங்கொட்டைகளைப் பயன்படுத்திக் கழிக்கவும் பின்பு கணிதக் கழித்தல் முறையிலும் 22 இலிருந்து 9 ஐக் கழிக்கலாம். 22 புளியங்கொட்டைகளைப் பத்துகளாகவும், ஒன்றுகளாகவும் பிரிக்கலாம்.

படி 1: ஒன்றுகளைக் கழித்தல் : 22 என்பதை 2 பத்துகள் மற்றும் 2 ஒன்றுகளாகக் குறிப்பிடலாம். ஒன்றுகளில் 9 மணிகளை நீக்க வேண்டும்.

மணிகளைக் கொண்டு கழித்தல் படி 1

படி 2: பத்துகளை ஒன்றுகளாகக் குழு பிரித்தல் : 9 புளியங்கொட்டைகளை எடுக்கவேண்டும். எனவே ஒன்றுகளைக் கழிப்போம். 2 ஒன்றுகளிலிருந்து 9 ஒன்றுகளைக் கழிக்க இயலாது. எனவே புளியங்கொட்டைகள் குறைவதைச் சரி செய்ய மறு குழுவாக்கம் செய்வோம். அதற்குப் பத்துகளில் ஒரு சரத்தை எடுத்து ஒன்றுகளாக மறுகுழுவாக்கம் செய்வோம்.

மணிகளைக் கொண்டு கழித்தல் படி 2

படி 3 : ஒன்றுகளைக் கழித்தல் : 12 ஒன்றுகளில் இருந்து 9 ஒன்றுகளை நீக்குக.

மணிகளைக் கொண்டு கழித்தல் படி 3

படி 4 : பத்துகளைக் கழித்தல் : பத்துகளின் குழுவைக் கழிக்க பத்துகள் இடத்தில் கழிப்பதற்கு எண்கள் இல்லை என்பதால் பத்து என்பதை அப்படியே எழுதலாம்.

மணிகளைக் கொண்டு கழித்தல் படி 4

எனவே, கவினிடம் மீதமுள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை 13.

கற்றல்

ஆணி மணிச் சட்டத்தைக் கொண்டு கழித்தல்

செவ்வகம் அமைக்கச் சுடர் எடுத்த 54 கொட்டைகளில் 38 கொட்டைகளைப் பயன்படுத்தினால் மீதம் உள்ள கொட்டைகள் எத்தனை?

சுடரிடம் மீதமுள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கையை அறிய 54 இலிருந்து 38 ஐக் கழிப்போம். 54 இலிருந்து 38 ஐ ஆணி மணிச் சட்டத்தைக் கொண்டும் கழித்தல் முறைமையைப் பயன்படுத்தியும் கழிப்போம். 54 இல் 5 பத்துகளும் 4 ஒன்றுகளும் உள்ளன. எனவே பத்துகளின் இடத்தில் 5 பச்சை மணிகளையும் ஒன்றுகளின் இடத்தில் 4 சிவப்பு மணிகளையும் போடுவோம்.

38 ஐ 54 இலிருந்து கழிப்பதற்கு 5 பத்துகள் மற்றும் 3 ஒன்றுகளிலிருந்து 3 பத்துக்கள் 8 ஒன்றுகளைக் கழிப்போம்.

ஆணி மணிச் சட்டத்தைப் பயன்படுத்தி 54 - 38 ஐக் கழிக்கலாம்.

ஆணி மணிச் சட்டத்தில் 54

படி 1: ஒன்றுகளைக் கழிக்க.

4 ஒன்றுகளில் இருந்து 8 ஒன்றுகளைக் கழிக்க இயலாது. எனவே பத்தை எடுத்து 10 ஒன்றுகளாக மறுகுழுவாக்கம் செய்வோம்.

ஆணி மணிச் சட்டத்தில் மறுகுழுவாக்கம்

படி 2: 14 ஒன்றுகளில் 8 ஒன்றுகளை நீக்குக.

இப்போது நாம் 14 ஒன்றுகளிலிருந்து 8 ஒன்றுகளை நீக்கலாம்.

ஆணி மணிச் சட்டம் - ஒன்றுகளை நீக்குதல்

படி 3 : பத்துகளைக் கழிக்க.

4 பத்துகளில் 3 பத்துகளைக் கழிக்க.

ஆணி மணிச் சட்டம் - பத்துகளை நீக்குதல்

எனவே, சுடரிடம் மீதமுள்ள புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை 16 ஆகும்.

பயிற்சி

1. செவ்வகம் மற்றும் முக்கோணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கொட்டைகளின் வித்தியாசம் என்ன?

பயிற்சி கணக்கு 1

2. திருமகன் 24 கொட்டைகளை எடுத்து அவற்றில் 16 ஐப் பயன்படுத்தினான். அவனிடம் மீதம் உள்ளவை எத்தனை?

பயிற்சி கணக்கு 2

24 – 16 = 8

3. கவினி 30 கொட்டைகளில் 18 ஐப் பயன்படுத்தினாள் எனில், என்ன வித்தியாசம்?

பயிற்சி கணக்கு 3

30 – 18 = 12

4. கவின் மற்றும் கவினி பயன்படுத்திய கொட்டைகளின் வித்தியாசம் எத்தனை?

கவினி: 18 கொட்டைகள்

கவின்: 9

வித்தியாசம் : 18 – 9 = 9

பயிற்சி கணக்கு 4

பயிற்சி

கீழே உள்ள ஈரிலக்க எண்களைக் கழிக்க.

ஈரிலக்க கழித்தல் பயிற்சி

32 – 28 = 4

94 – 59 = 35

72 – 46 = 26

46 – 17 = 29

50 – 36 = 14

85 – 67 = 18

நீயும் கணிதமேதை தான்

கீழே உள்ள கட்டங்களில் விடுபட்ட கட்டங்களை நிரப்புக.

விடுபட்ட கட்டங்களை நிரப்புக

29 + 0 = 29,

29 − 0 = 29

முயற்சி செய்க

ஒவ்வொரு கழித்தல் கூற்றிலும் விடுபட்ட எண்களைக் கண்டறிக.

விடுபட்ட எண்களைக் கண்டறிக

மேலும் அறிக

(i) கழித்தல் வழிமுறையை இரு வழிகளில் சரிபார்க்கலாம். 53 - 36 = 17 என்ற கழித்தல் கூற்றினைக் கருத்தில் கொள்வோம்.

(1) கூட்டல் வழியாக 36 + 17 = 53

(2) கழித்தல் வழியாக 53 - 17 = 36

53 மற்றும் 36 என இரு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 54 இலிருந்து 36 ஐக் கழித்தால் விடை 17 கிடைக்கும். இந்த விடையைச் சரிபார்க்க 36 மற்றும் 17 ஐக் கூட்டி 53 ஐப் பெறலாம். அல்லது 54 இலிருந்து 17 ஐக் கழித்து 36 ஐப் பெறலாம்.

ii) எந்த ஓர் எண்ணிலிருந்து 0 ஐக் கழித்தாலும் நமக்கு அதே எண்தான் விடையாகக் கிடைக்கும்.

பூஜ்யத்தைக் கழித்தல்

அதாவது நாம் அந்த எண்ணிக்கையிலிருந்து எதையும் எடுக்கவில்லை என்று பொருள்.

(iii) எந்த ஓர் எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்தாலும் நமக்கு விடையாக நமக்கு 0 கிடைக்கும்.

அதே எண்ணைக் கழித்தல்

அதாவது நாம் அந்த எண்ணிக்கையிலிருந்து முழுமையையும் எடுத்துவிட்டோம் என்று பொருள்.

மனக்கணக்கு

1. கமல் ஒருவிழா நிகழ்விடத்தில் 56 குழல் விளக்குகளைப் பொருத்தினார். அவற்றில் 18 விளக்குகள் எரியவில்லை எனில் எத்தனை விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன?

விடை :

மனக்கணக்கு 1

56 – 18 = 38 குழல் விளக்குகள்

2. ஒரு தொழிற்சாலையில் 1 நாளில் 95 மகிழுந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றில் 37 விற்பனையாகிவிட்டால் மீதம் உள்ள மகிழுந்துகள் எத்தனை?

மனக்கணக்கு 2

95 – 37 = 58 மகிழுந்துகள்

3. கருணா, ஓர் அங்காடியில் உள்ள 90 படிகளில் 23 படிகள் ஏறிவிட்டான். இன்னும் எத்தனை படிகள் உள்ளன?

மனக்கணக்கு 3

90 – 23 = 67 படிகள்

4. கமலி, தன்னிடம் 31 ரூபாய் வைத்திருந்தாள். அவள் ரூபாய் 15 க்கு ஒரு எழுதுகோல் வாங்கிவிட்டு மீதமுள்ள பணத்தை சேமித்தாள். எனில், அவள் சேமித்த பணம் எவ்வளவு?

மனக்கணக்கு 4

31 – 15 = 16 ரூபாய்கள்

5. ஒரு வகுப்பில் 42 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 26 பேர் பெண்கள் எனில், ஆண்கள் எத்தனை பேர்?

மனக்கணக்கு 5

42 – 26 = 16 மாணவர்கள்

1st Grade Maths Term 3 Unit 2 Guide: Subtracting Zero | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

பூச்சியத்தைக் கழித்தல்

ஓர் எண்ணிலிருந்து, அதே எண்ணைக் கழிக்க பூச்சியம் கிடைக்கும்.

பூச்சியத்தைக் கழித்தல்

பயணம் செய்வோம்

இயற்கையை நேசிப்போம்!

அட்டா. எவ்வளவு அழகான பூக்கள்!

நான் எப்பொழுதும் பூக்களைப் பறிக்க மாட்டேன்

பூக்கள் உள்ள செடி

செடியிலுள்ள பூக்களின் எண்ணிக்கை 3

சிறுமி பறித்த பூக்களின் எண்ணிக்கை 0

செடியில் மீதமுள்ள பூக்களின் எண்ணிக்கை 3

கற்றல்

கதை மூலம் கழித்தல்

எந்த ஓர் எண்ணிலிருந்தும் பூச்சியத்தைக் கழிக்க அதே எண் தான் கிடைக்கும்.

கழித்தல் உதாரணம்

செய்து பார்

கழித்தல் கூற்றை நிறைவு செய்க.

கழித்தல் பயிற்சி

செய்து பார்

கழித்தல்

கழித்தல் கணக்குகள்

2 - 0 = 2

4 - 0 = 4

5 - 0 = 5

9 - 0 = 9

1 - 0 = 1

6 - 0 = 6

8 - 0 = 8

முயன்று பார்

பொருத்தமான படங்கள் வரைந்து, கழித்தல் கூற்றை நிறைவு செய்க.

படங்கள் வரைந்து கழித்தல் பயிற்சி

கூடுதலாக அறிவோம்

ஓர் எண்ணிலிருந்து, அதே எண்ணைக் கழிக்க பூச்சியம் கிடைக்கும்.

6 - 6 = 0

முயன்று பார்

கீழ்க்காணும் கழித்தல் கணக்குகள் சரியா, தவறா எனக் காரணத்துடன் கூறுக.

8 – 8 = 0 [சரி]

7 - 0 = 0 [சரி]

4 - 4 = 4 [தவறு]

நினைவு கூர்க

கூட்டல் (எண்கள் 20 வரை)

கூட்டுக.

கூட்டல் பயிற்சி மற்றும் வண்ணமிடுதல்

கூட்டல் கணக்குகளின் விடைகளுக்கு ஏற்றவாறு அட்டவணையில் கொடுத்துள்ள வண்ணங்களைத் தீட்டி, மேலே உள்ள படத்தில் மறைந்துள்ள உருவத்தினைக் கண்டுபிடி.

வண்ணமிடுதல் வழிகாட்டி

கூடுதலாக அறிவோம்

ஒரு கூட்டல் கூற்றிலிருந்து இரண்டு கழித்தல் கூற்றுகளை உருவாக்கலாம்.

கூட்டல் மற்றும் கழித்தல் தொடர்பு

முயன்று பார்!

கழித்தல் பயிற்சி கணக்குகள்