3rd Maths Term 3 Unit 2 Numbers: Equal Grouping | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு: மூன்றாம் பருவம் அலகு 2 எண்கள் - சமக் குழுவாக்கம்

அறிமுகம்: சமக் குழுவாக்கம்

சமக் குழுவாக்கம் வழியாகவும் வகுத்தலைச் செய்யலாம்.

இது இரங்கம்மாவின் கடை.

அவள் காய்கறிகளை விற்பனை செய்வதற்குக் 'கூறு' எனப்படும் சமக் குழுக்களாகப் பிரித்து அடுக்கினார்.

இரங்கம்மாவின் காய்கறிக் கடை

பயிற்சி 1

1. இரங்கம்மா 40 எலுமிச்சைகளை வைத்திருந்தார். ஒரு கூறில் 5 எலுமிச்சைகள் வீதம் என அடுக்கி வைத்தார். எலுமிச்சைகளைக் குழுக்களாக அடுக்கிக் குழுக்களின் எண்ணிக்கையைக் காண்போம்.

40 எலுமிச்சைகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது

கொடுக்கப்பட்டுள்ள எண்கோட்டில் இதனைக் குறிப்போம்.

எண்கோட்டில் 40 ஐ 5 ஆல் வகுத்தல்

எண் கூற்று முறையில் இதனை 40 ÷ 5 = 8 என எழுதலாம்.

பயிற்சி 2

2. இரங்கம்மாவிடம் 36 தேங்காய்கள் இருந்தன. அவற்றை ஒரு கூறில் 4 தேங்காய்கள் என இருக்குமாறு அடுக்கினார் எனில் அவர் எத்தனை கூறுகள் அடுக்கியிருப்பார்?

36 தேங்காய்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது

எண்கோட்டை வரைக.

எண்கோட்டில் 36 ஐ 4 ஆல் வகுத்தல்

எண் கூற்று முறையில் இதனை 36 ÷ 4 = 9 என எழுதலாம்.

பயிற்சி 3

3. இரங்கம்மாவிடம் 48 நெல்லிகனிகள் இருந்தன. அதனை ஒரு கூறில் 6 கனிகள் என இருக்குமாறு அடுக்கினார். எனில் கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.

48 நெல்லிக்கனிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது

எண்கோட்டை வரைக

எண்கோட்டில் 48 ஐ 6 ஆல் வகுத்தல்

எண் கூற்று முறையில் இதனை 48 ÷ 6 = 8 என எழுதலாம்.

பயிற்சி 4

4. இரங்கம்மா அந்த 48 நெல்லிக்கனிகளைக் கூறுகளாக அடுக்கக்கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அதன் எண் கூற்றுகளை எழுதுக.

(i) 48 ÷ 1 = 48

(ii) 48 ÷ 2 = 24

(iii) 48 ÷ 3 = 16

(iv) 48 ÷ 4 = 12

(v) 48 ÷ 6 = 8

(vi) 48 ÷ 8 = 6

(vii) 48 ÷ 12 = 4

(viii) 48 ÷ 16 = 3

(ix) 48 ÷ 24 = 2

(x) 48 ÷ 48 = 1