OMTEX AD 2

3rd Grade Maths: Term 3 Unit 2 - Numbers Exercise | Samacheer Kalvi

3rd Grade Maths: Term 3 Unit 2 - Numbers Exercise | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்

பயிற்சி

அ. 8 பந்துகளை 2 பந்துகள் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும்.

8 பந்துகளை 2 பந்துகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரித்தல்

8 ÷ 2 = 4

ஆ. 15 ஆரஞ்சுப் பழங்களை 3 பழங்கள் கொண்ட கூறுகளாகப் பிரிக்கவும்.

15 ஆரஞ்சுப் பழங்களை 3 பழங்கள் கொண்ட 5 கூறுகளாகப் பிரித்தல்

15 ÷ 3 = 5

இ. 20 குவளைகளை 5 குவளைகள் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும்.

20 குவளைகளை 5 குவளைகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரித்தல்

20 ÷ 5 = 4

செயல்பாடு

(i) கைநிறைய புளியங்கொட்டைகளை ஒரு குழந்தையிடம் கொடுத்துவிட்டுச் சில எண்கள் கொண்ட சீட்டுகளை ஒரு பெட்டியில் வைக்கவும். பின்பு ஒரு மாணவனை அழைத்து ஏதேனும் ஒரு சீட்டினைத் தேர்ந்தெடுக்கச் செய்யவும்.

(ii) பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட எண் சீட்டுகளிலுள்ள எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் குழுக்களாகப் பிரிக்கவும்.

(iii) புளியங்கொட்டைகளை குழுக்களாகப் பிரித்தவுடன் அவற்றின் வகுத்தல் கூற்றைக் கரும்பலகையில் குழந்தைகளை எழுதச் செய்க.