Friday, October 31, 2025

2nd Grade Tamil: Small Shape, Big World! | Term 3, Chapter 2

2nd Grade Tamil: Small Shape, Big World! | Term 3, Chapter 2

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : சிறிய உருவம்! பெரிய உலகம்!

சிறிய உருவம்! பெரிய உலகம்!

"ஓ குட்டி எறும்பே! உன்னைவிடப் பெரிய அரிசியை எப்படித் தூக்கிச் செல்கிறாய்?

அடடே!பார்த்துக்கொண்டு இருக்கும்போதே உள்ளே சென்றுவிட்டாயே!

நானும் உன்னைப்போல் சிறியதாக இருந்தால் உன்னுடனேயே வந்திருப்பேனே, என்றாள் கண்மணி.

கண்மணி எறும்பைப் பார்க்கிறாள்

சட்டென்று அவளுடைய உடல் அதிர்ந்தது.

உருவம் சிறியதாகிவிட்டது.

சுற்றிலும் பார்த்தாள். எறும்பின் அளவுக்குத் தானும் சிறியதாகி இருப்பதைக்கண்டு வியப்படைந்தாள்.

கண்மணி சிறியதாகி எறும்புப் புற்றில் நுழைகிறாள்

எறும்பு நுழைந்த புற்றுக்குள் இறங்க முயற்சி செய்தாள். தடுமாறினாள். பொத்தென்று புற்றுக்குள் விழுந்தாள்.

"இந்தப் புற்றுக்குள் இத்தனை அறைகளா? எறும்புகளின் சேமிப்பைக் கண்டாள். எறும்புப் புற்றுக்குள் அங்கும் இங்கும் சென்று பார்த்தாள்.

வியப்பு குறையாமல் புற்றைவிட்டு வெளியே வந்தாள். அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தாள்.

கண்மணி மரத்தடியில் அமர்ந்து தேன்கூட்டைப் பார்க்கிறாள்

மரத்தின் மேலே ஒரு தேன்கூடு இருந்தது,

"தேனீக்கள் எப்படி கூடுகட்டுகின்றன? தேனைச் சிந்தாமல் எப்படிச் சேமிக்கின்றன?

அதையும் பார்க்கவேண்டுமே" என்று நினைத்தாள்.

உடனே அவளுக்குச் சிறகுகள் முளைத்தன.

கண்மணிக்கு சிறகுகள் முளைக்கின்றன

"ஊ ஊய்ய்" மகிழ்ச்சியில் கத்தினாள். பறந்து சென்று தேன்கூட்டுக்குள் புகுந்தாள்.

பலவகை தேனீக்களை ஆர்வமாகப் பார்த்தாள்.

இவ்வளவு சிறிய தேனீ, இத்தனை வேலைகள் செய்கிறதா? வியப்பு தாளவில்லை.

தேன்கூட்டைவிட்டு வரவே மனமில்லை . தயங்கியபடியே வெளியே வந்தாள்.

கண்மணி மரக்கிளையில் அமர்ந்து நீரோடையைப் பார்க்கிறாள்

மரக்கிளையில் அமர்ந்தாள். கீழே அழகான நீரோடை. அதில் மீன்கள் நீந்துவதைப் பார்த்தாள்.

மீன்களைப் போல நீந்த வேண்டுமென்று ஆசை வந்தது.

நீரோடையில் மீன்கள் நீந்துகின்றன

அடுத்து என்ன நடந்திருக்கும்? கதையைத் தொடர்ந்து கூறுக.

2nd Tamil Term 3 Chapter 1: Yaaru Yaaru Yaaru Questions and Answers

2nd Tamil Term 3 Chapter 1: Yaaru Yaaru Yaaru Questions and Answers

2 ஆம் வகுப்பு தமிழ்: பருவம் 3 இயல் 1 - யாரு? யாரு? யாரு?

யாரு? யாரு? யாரு?: கேள்விகள் மற்றும் பதில்கள்

வையம்பட்டி முத்துசாமி எழுதிய "யாரு? யாரு? யாரு?" பாடத்திற்கான புத்தகக் கேள்விகள் மற்றும் பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

யாரு? யாரு? யாரு? பாடம்
பொருத்துக
1. கத்தரிக்காய் முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்டை ஊஞ்சல்
3. பருத்திச்செடி வண்ணம்
4. ஆலமரம் பஞ்சுமிட்டாய்
5. காகிதப்பூ குடை
விடை
1. கத்தரிக்காய் குடை
2. கடலைக்கொட்டை முத்துச்சிப்பி
3. பருத்திச்செடி பஞ்சுமிட்டாய்
4. ஆலமரம் ஊஞ்சல்
5. காகிதப்பூ வண்ணம்
கலந்துரையாடுக

இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?

கலந்துரையாடுக பகுதி

2nd Standard Tamil | Term 3 Chapter 1 | Yaaru Yaaru Yaaru Poem

2nd Standard Tamil | Term 3 Chapter 1 | Yaaru Yaaru Yaaru Poem

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1

யாரு? யாரு? யாரு?

ஆசிரியர்: வையம்பட்டி முத்துசாமி

பாடல்

யாரு? யாரு? யாரு? பாடல் பக்கம்

2 ஆம் வகுப்பு தமிழ் சமச்சீர் கல்வி புத்தகத்திற்கான தீர்வுகள்.

2nd Standard Tamil Term 3: En Ninaivil | Chapter Guide`

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : என் நினைவில்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : என் நினைவில்

என் நினைவில்

2nd Standard Tamil Term 2 | Vantha Pathai | Learning Outcomes

2nd Standard Tamil Term 2 | Vantha Pathai | Learning Outcomes

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : வந்த பாதை

2nd Tamil : Term 2 : Vantha Pathai - Learning Outcomes

கற்றல் விளைவுகள்

1. கேட்டல்

படங்கள், ஓவியங்கள், கதைப்படங்களை நுட்பமாக உற்றுநோக்கியும் சொல்லக்கேட்டும் சுவைப்பர்.

கேட்டறியாத, எளிய சொற்களமைந்த பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.

சிந்தனையைத் தூண்டும் எளிய கதைகளைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.

எளிய வாய்மொழி அறிவுரைகளையும் கட்டளைகளையும் வினாக்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவர். பிறர் பேசுவதைப் பொறுப்புடனும் கவனத்துடனும் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.

2. பேசுதல்

ஓசை நயமிக்க பாடல்களைத் தனியாகவும் குழுவாகவும் உரிய ஒலிப்புடன் பாடுவர்.

படக்கதையைப் பார்த்து நிகழ்வைக் கூறுவர்.

செய்திகளைத் திரட்டும் பொருட்டு வினா எழுப்புவர்.

பார்த்தவை, கேட்டவை பற்றிப் பேசுவர். கேட்டும் படித்தும் அறிந்த பாடல்கள், கதைகளிலிருந்து கேட்கப்படும் எளிய வினாக்களுக்கு முழுமையான சொற்றொடரில் விடை கூறுவர்.

சொற்கள், தொடர்களை முறையாகவும் சரியாகவும் ஒலிப்பர்.

கேட்டறிந்த கதைகள், பாடல்களைத் தம் கற்பனையின் அடிப்படையில் கூறுவர். தமக்குரிய நடையில் பேசுவர்.

கேட்டவற்றுடன் தம் அனுபவங்களைத் தொடர்புபடுத்திப் பொருள் விளங்கும் வகையில் தெளிவாக வெளிப்படுத்துவர்.

3. படித்தல்

தமிழ்மொழியிலுள்ள அனைத்து எழுத்துகளின் ஒலிவடிவ, வரிவடிவத் தொடர்புகளை இனங்கண்டு முறையாக உச்சரிப்பர்.

வடமொழி ஒலிப்புகளுக்குரிய, கிரந்த வரிவடிவங்களை அறிந்து படிப்பர்.

எளிய சொற்கள், சிறுசிறு தொடர்களை உரிய ஒலிப்புடன் உரக்கப் படிப்பர்.

எளிய சந்தப் பாடல்களை உரிய ஓசையுடன் படிப்பர்.

எளிமையான சிறுசிறு படக்கதைகளையும் பாடல்களையும் படிப்பர்.

படிக்கும் பகுதியின் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடையளிப்பர்.

படித்த பகுதியில் கேட்கப்படும் சிறுசிறு வினாக்களுக்கு விடையளிப்பர்.

4. எழுதுதல்

படங்களைப் பார்த்துப் பெயர்கள், சிறுசிறு தொடர்களைத் தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுவர்.

வடமொழி ஒலிப்புகளுக்குரிய, கிரந்த வரிவடிவங்களை அறிந்து எழுதுவர்.

சொற்களையும், சிறுசிறு தொடர்களையும் சொல்லக்கேட்டு எழுதுவர். எளிய பாடல்கள், கதைகள், உரைநடைப் பகுதிகளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முழுமையான தொடர்களில் விடையளிப்பர்.

சிறுசிறு தொடர்களைத் தம்முடைய நடையில் எழுதுவர்.

கேட்டவற்றை படித்தவற்றை / சிந்தித்து உணர்ந்தவற்றைப் படங்களாகவோ, சொற்களாகவோ, தொடர்களாகவோ வெளிப்படுத்துவர்.

5. நடைமுறை இலக்கணம்

ஒலி இயைபுச் சொற்களை உருவாக்குவர்.

ஒருமை, பன்மை விகுதிகளை (கள், க்கள், ங்கள்) அறிந்து பயன்படுத்துவர்.

பெயர்ச்சொற்கள், பதிலிப் பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களை அறிந்து பயன்படுத்துவர்.

6. கற்கக் கற்றல்

படக்கதைகளைப் பார்த்தறிந்து / படித்தறிந்து கதை கூறுவர்.

பெயர்ப்பலகைகள், அறிவிப்புகளைப் படிப்பர்.

விரும்பும் நூல்களைத் தேடிப் படிப்பர்.

7. சொல்லாட்சித் திறன்

கீழ்க்காணும் சொற்களைக் கற்றறிந்து பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவர்.

பெயர்ச்சொற்கள். வினைச்சொற்கள், பதிலிப் பெயர்ச்சொற்கள்

வீடு, பள்ளியில் உள்ள பொருள்களின் பெயர்கள்

குடும்ப உறுப்பினர் பெயர்கள்

தின்பண்டங்களின் பெயர்கள்

எளிய வருணனைச் சொற்கள்

ஆங்கில மாதங்களின் பெயர்கள்

8. படைப்புத் திறன்

முதல் எழுத்தை மாற்றி சொற்களை உருவாக்குவர்.

குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் பல்வேறு சொற்களை எழுதுவர்.

கொடுக்கப்பட்ட சொல்லிலிருந்து பல்வேறு சொற்களை உருவாக்குவர்.

முதல் சொல்லின் இறுதி எழுத்தை அடுத்த சொல்லின் முதல் எழுத்தாகக் கொண்டு சொற்களை உருவாக்குவர்.

9. விழுமியங்கள்

நேரந்தவறாமை.

விதிகளைப் பின்பற்றுவர்.

தூய்மை பேணுவர்.

பொருள்களைப் பாதுகாப்பர்.

பிறருக்கு உதவுவர்.

பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவர்.

10. வாழ்வியல் திறன்

கீழ்க்காணும் வாழ்வியல் திறன்களைப் பெற்று உரிய நேரங்களில் பயன்படுத்துவர்.

தன்னை அறியும் திறன்.

சிக்கல் தீர்க்கும் திறன்.

முடிவெடுக்கும் திறன்.

கூர்சிந்தனைத் திறன்.

படைப்பாக்கச் சிந்தனைத் திறன்.

சிறந்த தகவல் தொடர்புத் திறன்.

உறவுகளை இணக்கத்துடன் பேணும் திறன்.

பிறரை அவர் நிலையிலிருந்து புரிந்துகொள்ளும் திறன்.

உணர்வுகளைக் கையாளும் திறன்.

மன அழுத்தத்தைக் கையாளும் திறன்.

2nd Standard Tamil Term 2 Chapter 6 Aathichudi | Samacheer Kalvi Guide

2nd Standard Tamil Term 2 Chapter 6 Aathichudi | Samacheer Kalvi Guide

பருவம் 2 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ் - ஆத்திசூடி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 2 Chapter 6 : Aathichudi

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆத்திசூடி

ஆத்திசூடி: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆத்திசூடி: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

ஆத்திசூடி பாடப்பகுதி

2 ஆம் வகுப்பு தமிழ் ஆத்திசூடி பாடம் பக்கம் 1 2 ஆம் வகுப்பு தமிழ் ஆத்திசூடி பாடம் பக்கம் 2

2nd Grade Tamil: Term 2 Chapter 6 - Aathichudi | Samacheer Kalvi Guide

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆத்திசூடி

ஆத்திசூடி

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6

ஆத்திசூடி - பக்கம் 1 ஆத்திசூடி - பக்கம் 2 ஆத்திசூடி - பக்கம் 3 ஆத்திசூடி - பக்கம் 4 ஆத்திசூடி - பக்கம் 5

Odi Vilayadu Pappa Questions and Answers | Class 2 Tamil Term 2 Chapter 5 | Subramania Bharatiyar

Odi Vilayadu Pappa Questions and Answers | Class 2 Tamil Term 2 Chapter 5

சுப்பிரமணிய பாரதியார் | பருவம் 2 இயல் 5 | ஓடி விளையாடு பாப்பா: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா - பாடம்

பேசுவோம் வாங்க!

இப்பாடலில் பாரதியார் என்னென்ன கூறுகிறார்?

பாரதியார் கூற்றுகளின் விளக்கம்

2nd Tamil Term 2 Chapter 5: Odi Vilayadu Pappa by Subramanya Bharathiar

2nd Tamil Term 2 Chapter 5: Odi Vilayadu Pappa by Subramanya Bharathiar

2 ஆம் வகுப்பு தமிழ்: பருவம் 2 இயல் 5

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா

ஆசிரியர்: சுப்பிரமணிய பாரதியார்

இயல் 5 ஓடி விளையாடு பாப்பா - பாடம்

கூடுதல் தகவல்கள்

Tags : by Subramanya bharathiar | Term 2 Chapter 5 | 2nd Tamil சுப்பி்ரமணிய பாரதியார் | பருவம் 2 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ். 2nd Tamil : Term 2 Chapter 5 : Odi vilayadu pappa : Odi vilayadu pappa by Subramanya bharathiar | Term 2 Chapter 5 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : ஓடி விளையாடு பாப்பா : ஓடி விளையாடு பாப்பா - சுப்பி்ரமணிய பாரதியார் | பருவம் 2 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

2nd Standard Tamil Term 2 Chapter 4 | Valthalam Vanka Questions and Answers

2 ஆம் வகுப்பு தமிழ் - பருவம் 2 இயல் 4: வாழ்த்தலாம் வாங்க - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 4: வாழ்த்தலாம் வாங்க

2 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள்

வாழ்த்தலாம் வாங்க பாடம் தலைப்பு

பொருத்துக

1. வண்ணம் தீட்டியது

2. மயில் வரைந்தது

3. பிறந்தநாள்

4. ஆங்கில மாதங்கள்

- பர்வீன்

- நினைவூட்டி

- பன்னிரண்டு

- அஜ்மல்

விடை:

1. வண்ணம் தீட்டியது - அஜ்மல்

2. மயில் வரைந்தது - பர்வீன்

3. பிறந்தநாள் - நினைவூட்டி

4. ஆங்கில மாதங்கள் - பன்னிரண்டு

வாய்மொழியாக விடை தருக

1. அஜ்மலும் பர்வீனும் பிறந்தநாள் நினைவூட்டியை எப்படியெல்லாம் உருவாக்கினார்கள்?

விடை எழுதுக

1. ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது?

ஜனவரி

2. நீ பிறந்த ஆங்கில மாதம் எது?

நவம்பர்

3. ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் எது?

டிசம்பர்

இதோ உங்கள் வகுப்புக்கான பிறந்தநாள் நினைவூட்டி

ஆங்கில மாதங்களையும் அம்மாதங்களில் பிறந்த நண்பர்களின் பெயர்களையும் எழுதுக.

பிறந்தநாள் நினைவூட்டி மாதிரி

2nd Grade Tamil | Term 2 Chapter 4: Vazhthalam Vanga | Samacheer Kalvi

2nd Grade Tamil | Term 2 Chapter 4: Vazhthalam Vanga | Samacheer Kalvi

பருவம் 2 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்த்தலாம் வாங்க

2nd Tamil : Term 2 Chapter 4 : Valthalam Vanka

வாழ்த்தலாம் வாங்க

பர்வீன் மயில் படம் வரைதல்

வாழ்த்தலாம் வாங்க

பர்வீன் படம் வரைந்துகொண்டு இருந்தாள். அப்போது அஜ்மல் வந்தான்.

"ஐ! மயில். அழகாக உள்ளது, அக்கா" என்றான் அஜ்மல்.

"வா! வா! உனக்குப் பிடிக்குமே.... வண்ணம் தீட்டுகிறாயா?" என்றாள் பர்வீன்.

"ஓ!" ஆர்வத்துடன் அமர்ந்தான் அஜ்மல்.

"இறகின் நடுவில் எழுத இடம் விட்டு வண்ணம் தீட்டு அஜ்மல்" என்றாள் பர்வீன்.

"ஏன் அக்கா?" என்று கேட்டான் அஜ்மல்.

அஜ்மல் மயிலுக்கு வண்ணம் தீட்டுதல்

"அந்த இடங்களில் ஆங்கில மாதங்களின் பெயர்களை எழுதப் போகிறேன்" என்றாள் பர்வீன்.

"இது நாள்காட்டியா அக்கா?" என்று கேட்டான் அஜ்மல்.

"இல்லை. இது நினைவூட்டி" என்றாள் பர்வீன்.

"நினைவூட்டியா.... புரியும்படி சொல்லேன் அக்கா" சிணுங்கினான் அஜ்மல்.

"இதை ஆசிரியரிடம் தருவேன். அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களின் பெயர்களை எழுதுவோம்." என்றாள் பர்வீன்.

"எதற்காக அக்கா?" என்றான் அஜ்மல்.

"மறக்காமல் வாழ்த்து சொல்லத்தான் இந்தப் பிறந்தநாள் நினைவூட்டி" என்றாள் பர்வீன்.

"நன்றாக இருக்கிறதே. எங்கள் வகுப்புக்கும் ஒன்று செய்யலாமா அக்கா?" என்றான் அஜ்மல்.

"ஓ, செய்யலாமே! இனி எல்லாரின் பிறந்தநாளிலும் மறக்காமல் வாழ்த்தலாம்".

முடிக்கப்பட்ட பிறந்தநாள் நினைவூட்டி மயில்

2nd Tamil Term 2 Chapter 3 Poomvandi | Samacheer Kalvi Book Back Answers

2 ஆம் வகுப்பு தமிழ் - பருவம் 2 இயல் 3: பூம்வண்டி | Samacheer Kalvi

பூம்வண்டி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் - பூம்வண்டி | 2nd Tamil : Term 2 Chapter 3 : Poomvandi

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பூம்வண்டி

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பூம்வண்டி: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்.

இயல் 3 பூம்வண்டி

கூடுதல் தகவல்கள்

Tags : Term 2 Chapter 3 | 2nd Tamil பருவம் 2 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ்.

2nd Tamil : Term 2 Chapter 3 : Poomvandi : Poomvandi: Questions and Answers Term 2 Chapter 3 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பூம்வண்டி : பூம்வண்டி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

2nd Tamil Term 2 Chapter 3 Poomvandi | வகுப்பு 2 தமிழ் பருவம் 2 இயல் 3 பூம்வண்டி

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பூம்வண்டி

பருவம் 2 இயல் 3: பூம்வண்டி | 2 ஆம் வகுப்பு தமிழ்

பூம்வண்டி

2 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் உள்ள பருவம் 2, இயல் 3, "பூம்வண்டி" பாடத்திற்கான பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Tags: Term 2 Chapter 3 | 2nd Tamil பருவம் 2 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ்.

2nd Tamil : Term 2 Chapter 3 : Poomvandi : Poomvandi Term 2 Chapter 3 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பூம்வண்டி : பூம்வண்டி - பருவம் 2 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

Featured Post

Complete Guide to HSC Class 12 English Writing Skills (Sets 7-10) with Solutions

📥 Download Complete Guide PDF Complete Guide to HSC Class 12 English Writing Skills (Question Sets 7-10) Target Audience: Cl...

Popular Posts