Kaatchiyai Kandu Kavinura Ezhudhuga - Maram Valarthidu | 10th Tamil Iyal 2

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக - மரம் வளர்த்திடு | 10 ஆம் வகுப்பு தமிழ்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 2

மரம் நடுதலின் அவசியத்தை விளக்கும் படம் - ஒருபுறம் வறண்ட நிலம், மறுபுறம் பசுமையான நிலம்.

தலைப்பு: மரம் வளர்த்திடு

ஆறறிவு படைத்த மானிடா!

புல்லறிவு கொண்டது ஏனடா?!

சூழல் கெடுத்து சூனியம் வைத்தாய்!

முற்றும் மறந்து உற்றவை அழித்தாய்!

ஓரறிவு கொண்டது தானடா!

உலகிற்கு உயிரென்று ஆனதடா!

மழை தந்து வாழ வைக்கும்!

மன்னுயிர்க் கெல்லாம் உரமாய் நிற்கும்!

தவமிருந்து மரங்கள் வளர்த்திடு!

தலைமுறை தனைக் காத்திடு!

விளக்கம்

புல்லறிவு - கீழான அறிவு

முற்றும் மறந்து உற்றவை அழித்தாய் - கீழான அறிவினால் எல்லாவற்றையும் மறந்து தனக்கு நன்மை செய்கின்ற மரங்கள் , செடிகள் , கொடிகள் , விலங்கினங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை அழித்தாய்.

சூழல் கெடுத்து சூனியம் வைத்தாய் - சுற்றுச் சூழலை அழித்து, தான் வாழ்வதற்கான வழிகளை அடைத்தாய்.

- Omtex Classes.