Tamil Creative Writing Answer Key: Katchiyai Kandu Kavinura Ezhuthuga (Iyal 3 - Anbu)

Kaatchiyai Kandu Kavinura Ezhuthuga: A Poem on Love and Compassion

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 3

தாய் தன் குழந்தைக்கு அன்புடனும் வறுமையிலும் உணவு ஊட்டும் காட்சி

தலைப்பு: அன்பு

ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்...

ஒருவேளைக் கூழே உண்டாலும்...

உள்ளம் நிறைய அன்புடனே...

ஒருகை நீயும் அளித்தாயே!

கசங்கிய உடையை அணிந்தாலும்...

கலங்கா உள்ளம் படைத்தாயே!

இல்லா நிலையை அடைந்தாலும்...

இரங்கிய உள்ளம் படைத்தாயே!

உன்போல் ஒருவரைக் கண்டாலே...

ஊக்கத்தால் உள்ளம் துளிர்த்திடுமே!!

விளக்கம்

ஒருவேளைக் கூழே உண்டாலும்- ஒரு வேளைதான் உணவு கிடைக்கிறது. அதுவும் கூழ்தான்.

உள்ளம் நிறைய அன்புடனே ஒருகை நீயும் அளித்தாயே- ஒரு கை அளவுதான் உணவு என்றாலும் நீ அளித்தது உள்ளம் நிறைய அன்புடன்... அந்த உணவு இவ்வுலகில் விலைமதிப்பற்றது.

கலங்கா உள்ளம் படைத்தாயே- தனது ஏழ்மை நிலையைக் கண்டு மனம் சிறிதும் கலங்கவில்லை.

உன்போல் ஒருவரை காணும்போதெல்லாம் அத்தகைய இரங்கிய உள்ளம் தனக்கும் வர வேண்டும் என்ற எண்ணமும் பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கும் உள்ளத்தில் துளிர்க்கிறது. இது, ஒரு தீக்குச்சி ஓராயிரம் விளக்குகளை ஏற்றுவதற்குச் சமமானது.

-Omtex Classes