Advertisement

5th Standard 1st Term Tamil Book Solution | New Syllabus 2023 – 2024

5th Standard 1st Term Tamil Book Solution | New Syllabus 2023 – 2024

5th Standard 1st Term Tamil Book Solution

Tamil Nadu 5th Standard 1st Term Tamil Book Answers are available here. You can get the answer to Tamil 1st Term New Book.

பொருளடக்கம்

1. மொழி

2. கல்வி

3. இயற்கை

இயல்-1: மொழி

1.1 தமிழின் இனிமை!

I. சொல்பொருள்

  • கனி – பழம்

  • கழை – கரும்பு

  • நனி – மிகுதி

  • நல்கிய- வழங்கிய

II. சரியானச்சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. கழை இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ________

  1. கரும்பு

  2. கறும்பு

  3. கருப்பு

  4. கறுப்பு

விடை : கரும்பு

2. கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. கனி + யிடை

  2. கணி + யிடை

  3. கனி + இடை

  4. கணி + இடை

விடை : கனி + இடை

3. பனி + மலர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. பனிம்மலர்

  2. பனிமலர்

  3. பன்மலர்

  4. பணிமலர்

விடை : பனிமலர்

III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. கழையிடை = கழை + இடை

  2. என்னுயிர் = என் + உயிர்

IV. சொற்களைப் பொருத்தி மகிழ்க


1. பால்

கரும்பு

2. சாறு

வெல்லம்

3. இளநீர்

பசு

4. பாகு

தென்னை



விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ


V. இப்பாடலில் வரும் ஒரே ஓசையுடைய சொற்களை எடுத்து எழுதுக

  1. கனியிடை – கழையிடை

  2. சாறும் – சுவையும்

  3. பாலும் – நீரும்

  4. தேனும் – பாலும்

VI. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் உள்ள சொற்களை எடுத்து எழுதுக

  1. னியிடை – பனிமலர்

  2. னிபசு – இனியன

  3. னியன – எனினும்

  4. ன்பேன் – என்னுயிர்

VII. பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக

  • கனியிடை

  • கழையிடை

  • பனிமலர்

  • பாகிடை

  • நனிபசு

VIII. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்? 

  • பலாச்சுளை

  • கரும்புச்சாறு

  • தேன்

  • பாகு

  • பசுவின் பால்

  • இளநீர்

2. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?

பாரதிதாசன் தமிழே என் உயிர் என்று கூறுகிறார்

1.2 கவிதைப் பட்டிமன்றம்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. நற்றமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. நல் + தமிழ்

  2. நற் + றமிழ்

  3. நன்மை + தமிழ்

  4. நல்ல + தமிழ்

விடை : நன்மை + தமிழ்

2. உலகம் என்னும் பொருளைக் குறிக்காத சொல் ________

  1. வானம்

  2. அண்டம்

  3. செகம்

  4. அகிலம்

விடை : வானம்

3. அறிவு + ஆயுதம் என்பதை சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் ________

  1. அறவாயுதம்

  2. அறிவாயுதம்

  3. அறிவு ஆயுதம்

  4. அறிவாய்தம்

விடை : அறிவாயுதம்

4. புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல் ________

  1. இகழ்

  2. மகிழ்

  3. திகழ்

  4. சிமிழ்

விடை : இகழ்

5. வெளிச்சம் இச்சொல்லைக் குறிக்காத சொல் ________

  1. ஒளி

  2. தெளிவு

  3. விளக்கு

  4. இருள்

விடை : இருள்

II. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. செந்தமிழ் = செம்மை + தமிழ்

  2. கவியரங்கம் = கவி + அரங்கம்

III. வினாக்களுக்கு விடையளிக்க.

1. அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?

அப்துல்கலாம், தாமஸ் ஆல்வா எடிசன்

2. பண்பால் சிறந்தவர்களாக மதியொளி எவரைெயல்லாம் குறிப்பிடுகிறார்?

புத்தர், திருவள்ளுவர்

3. உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார், யாருக்குக் கொடுத்தார்?

உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்தார்.

4. நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக.

அறிவும் பண்பும் கண்ணின் இரு விழிகள் போன்றவை. ஐம்பொறிகள் பண்பாகவும், உலகம் முழுவதும் அறிவாகவும் கொண்டு சுற்றி வரும் எனவே இவை இரண்டுமே சிற்பு என்று நடுவர் தீர்ப்பு கூறினார்.

5. ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கையும் எழுதுக.

கண், _______, _______, _______, _______,

கண், காது, வாய், மூக்கு, மெய் (உடல்)

6. தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் பாடப்பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.

செந்தமிழ், நறுந்தேன், முத்தமிழ், நற்றமிழ், செகம் போற்றும் செந்தமிழ்

1.3 என்ன சத்தம்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. செழியன் ஆடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்லக் காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன்  தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு ஓட்டிச் சென்றான்.

2. செழியன் செய்தவற்றை உமது சொந்த நடையில் கூறுக.

காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டு இருந்தான். திடீரென ஆடுகள் கத்தத் தொடங்கின. செழியன் எழுந்து சென்று பார்த்தான். புதர் அருகே நரி ஒன்று ஆடுகளை கொன்று தின்ன நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது. செழியன் அருகில் இருந்த குச்சியை வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான். அடிபட்டு நரி ஓடிவிட்டது.

1.4 மரபுச்சொற்கள்

ஒலி மரபுச் சொற்கள்


குரங்கு அலப்பும்

புலி உறுமும்

குயில் கூவும்

யானை பிளிறும்

ஆடு கத்தும்

ஆந்தை அலறும்

சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும்

மயில் அகவும்

நாய் குரைக்கும்

பாம்பு சீறும்


விலங்குகளின் இளமைப்பெயர் மரபுச் சொற்கள்


ஆட்டுக் குட்டி

யானைக் கன்று

கோழிக் குஞ்சு

சிங்கக் குருளை

குதிரைக் குட்டி

புலிப் பறழ்

குரங்குக் குட்டி

கீரிப் பிள்ளை

மான் கன்று

அணிற்பிள்ளை


வினைமரபுச் சொற்கள்


அம்பு எய்தார்

சோறு உண்டான்

ஆடை நெய்தார்

கூடை முடைந்தார்

பூ பறித்தாள்

சுவர் எழுப்பினார்

மாத்திரை விழுங்கினான்

முறுக்கு தின்றாள்

நீர் குடித்தான்

பால் பருகினான


தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்

  • மா, பலா, வாழை – இலை

  • ஈச்சம், தென்னை, பனை – ஓலை

  • கம்பு, கேழ்வரகு, சோளம் – தட்டை

  • நெல், புல், தினை – தாள்

  • அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி – பிஞ்சு

பூச்சிகள், பறவைகள், விலங்குகள் – இருப்பிட மரபுச் சொற்கள்


கரையான் புற்று

ஆட்டுப் பட்டி

மாட்டுத் தொழுவம்

குதிரைக் கொட்டில்

கோழிப் பண்ணை

குருவிக் கூடு

சிலந்தி வலை

எலி வளை

நண்டு வளை

யானைக்கூடம்


I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது _________

  1. பழைமை

  2. புதுமை

  3. மரபு

  4. சிறப்பு

விடை : மரபு

2. யானை __________

  1. கத்தும்

  2. பிளிறும்

  3. கூவும்

  4. அலறும்

விடை : பிளிறும்

3. ஆந்தை அலறும் என்பது __________

  1. ஒலிமரபு

  2. வினை மரபு

  3. இளமைப் பெயர் மரபு

  4. இருப்பிடப் பெயர் மரபு

விடை : ஒலிமரபு

4. புலியின் இளமைப் பெயர் __________

  1. புலிப்பறழ்

  2. புலிக்குட்டி

  3. புலிக்கன்று

  4. புலிப்பிள்ளை

விடை : புலிப்பறழ்

5. பூப்பறித்தாள் என்பது __________

  1. வினை மரபு

  2. பெயர் மரபு

  3. ஒலி மரபு

  4. இளமைப் பெயர் மரபு

விடை : வினை மரபு

II. ஒலி மரபுகளைப் பொருத்துக.


1. சிங்கம்

கூவும்

2. அணில்

அலப்பும்

3. மயில்

முழங்கும்

4. குயில்

கீச்சிடும்

5. குரங்கு

அகவும்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 -அ, 5 – ஆ




III. உயிரினங்களின் உரிய ஒலி மரபை வட்டமிடுக.

1. மயில் – கூவும், அகவும், பிளிறும், கத்தும்

விடை : அகவும்

2. கிளி – அலப்பும், பேசும், கூவும், கீச்சிடும்

விடை : பேசும்

2. குரங்கு – அகவும், கீச்சிடும், சீறும், அலப்பும்

விடை : அலப்பும்

3. ஆடு – பேசும், கத்தும், பிளிறும், கூவும்

விடை : கத்தும்

4. குயில் – அலப்பும், பிளிறும், அகவும், கூவும்

விடை : கூவும்

5. யானை – கத்தும், கர்ச்சிக்கும், உறுமும், பிளிறும்

விடை : பிளிறும்

IV. வினை மரபுகளைப் பொருத்துக.


1. நீர்

பறித்தாள்

2. முறுக்கு

எய்தான்

3. உணவு

குடித்தான்

4. அம்பு

தின்றான்

5. பூ

உண்டான்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – அ




V. ஒலிமரபுச் சொற்களை எழுதுக


1. பூனை

கரையும்

2. எலி

சீறும்

3. சேவல்

குரைக்கும்

4. காகம்

கீச்சிடும்

5. நாய்

கூவும்

விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – உ, 4 -அ , 5 – இ




VI. வினாக்களுக்கு விடையளிக்க

1. மரபு என்றால் என்ன?

நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.

2. பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச்சொற்கள் இடம் பெற்றுள்ளன?

பாடப்பகுதியில் ஒலிமரபு, இளமைப்பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப்பெயர் மரபு, இருப்பிட மரபு என ஐந்து வகையான மரபுச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.

3. ஒலி மரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  1. புலி உறுமும்

  2. குயில் கூவும்

  3. யானை பிளிறும்

  4. ஆடு கத்தும்

மொழியை ஆள்வோம் 

I. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. நல்லறிவு :

விடை : ராமு நல்லறிவு கொண்டவனாய் விளங்கினான்.

2. தென்னை மரம் :

விடை : தென்னை மரம் உயரமாக வளரும் மரம்.

3. கவியரங்கம் :

விடை : எங்கள் பள்ளில் கவியரங்கம் “அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் நடைபெற்றது.

4. நன்றி :

விடை : நாய் நன்றி உள்ள விலங்கு

II. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.

(மேரி ஆடினாள், ஈ பறந்தது, புலி உறுமியது, பாட்டி தும்மினார், குழந்தை சிரித்தது, பூனை தூங்கியது)

1. குழந்தை என்ன செய்தது?

விடை : குழந்தை சிரித்தது

2. மேரி என்ன செய்தாள் ?

விடை : மேரி ஆடினாள்

3. பாட்டி என்ன செய்தார்?

விடை : பாட்டி தும்மினார்

4. எது பறந்தது?

விடை : ஈ பறந்தது

5. தூங்கியது எது?

விடை : பூனை தூங்கியது

6. புலி என்ன செய்தது?

விடை : புலி உறுமியது

III. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு. உலகமே வியந்து பார்க்கும் வளமான சொற்கள் உடையது நம் அன்னைத் தமிழ்மொழி.

1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?

தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்

2. உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லை பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.

கேளிர்

3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?

தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது

4. தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?

யாதும் ஊரே யாவரும் கேளிர்

5. பிரித்து எழுதுக. 

தமிழிலக்கணம் – தமிழ் + இலக்கணம்

IV. எடுத்துக்காட்டில் உள்ளது போல் மாற்றி எழுதுக.

எ.கா.

ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது.

விடை : கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது.

1. ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது

விடை : முதல் காலம் தமிழ் வகுப்பு நடந்தது.

2. நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன்

விடை : நான் ஓவிய நோட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்

V. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க .

(உண்மை , பயிற்சி, பொறுமை, கல்லாமை, ஊக்கம், கல்வி, பொறாமை, முயற்சி)

1. ________ உடையவன் மாணவன் ________ அற்றவன் மாணவன்

விடை : பொறுமை / பொறாமை

2. _________ கற்பவன் மாணவன் _______ தவிர்ப்பவன் மாணவன்

விடை : கல்வி / கல்லாமை

3. _________ பெறுபவன் மாணவன் ________ செய்பவன் மாணவன்

விடை : பயிற்சி / முயற்சி

4. _________ பேசுபவன் மாணவன் _______ கொள்பவன் மாணவன;

விடை : உண்மை / ஊக்கம்

VI. பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக

  • பனிமலர்

  • பாகிடை

  • நனிபசு

  • கனியிடை

  • கழையிடை

VII. கீழ்வரும் குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடி.

கீழிருந்து மேல்

1. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்

விடை : தொல்காப்பியம்

2. பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்திருந்தார்

விடை : பாரதியார்

3. புதுவையில் தோன்றிய புதுமைப்

விடை : பாரதிதாசன்

மேலிருந்து கீழ்

1. பாரதிதாசனின் தந்தையின் பெயர்

விடை : கனகசபை

2. பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று

விடை : பாப்பா பாட்டு

3. முத்தமிழ் என்பது இயல், இசை

விடை : நாடகம்

இடமிருந்து வலம்

1. உடலுக்கு குளிர்ச்சி தருவது

விடை : இளநீர்

2. உலகின் முதன் மொழி மூத்த மொழி

விடை : தமிழ்

3. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்

விடை : இனிமை

XIII. சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்குக.

1. காஞ்சிபுரம்

விடை : – கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்

2. புதுக்கவிதை

விடை : – விதை, கவிதை, கவி, புதை

3. நெல்லிக்கனி

விடை : – நெல், கனி, கலி, கல்

4. கற்குவியல்

விடை : – குவியல், குவி, கவி, கல், வில்

XIV. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.

(அகிலா – படித்தாள் – நான் – பாடம் – வீட்டிற்கு – சென்றாள் – படித்தேன் – சென்றேன் – வந்தாள் – பள்ளிக்கு)

  1. அகிலா பள்ளிக்கு வந்தாள்

  2. அகிலா வீட்டிற்கு சென்றேன்

  3. நான் பள்ளிக்கு சென்றேன்

  4. நான் பாடம் படித்தேன்

  5. அகிலா பாடம் படித்தாள்

XV. குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி.

1. உருண்டோடும் பெரிய தேரைக் காப்பது அதன் சிறிய _______ ஆகும்.

விடை : அச்சாணி

2. இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது.

விடை : காந்தம்

3. அம்மா – வேறு சொல் .

விடை : அன்னை

4. ஆத்திசூடி எழுதிய பெண்பாற் புலவர்.

விடை : ஒளவையார்

5. மேடு – எதிர்ச்சொல் தருக.

விடை : பள்ளம்

6. காகம் தனக்குக் கிடைத்த உணவைப் பிற காகங்களோடு ________ உண்ணும்.

விடை : மகிழ்ந்து

7. உன் விடைகளின் மூன்றாவது எழுத்துகளை வரிசைப்படுத்தி. எதிர்காலத்தில் நீ யாராக இருப்பாய் எனத் தெரியும். ________

விடை : சாதனையாளர்

இயல்-2: கல்வி

2.1 மூதுரை

சொல்பொருள்

  • அடக்கம் – பணிவு 

  • அறிவிலர் – அறிவு இல்லாதவர்

  • கடக்க – வெல்ல 

  • கருதவும் – நினைக்கவும்

  • மடைத்தலை – நீர் பாயும் வழி

  • உறுமீன் – பெரிய மீன்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. என்றெண்ணி என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

  1. என் + றெண்ணி

  2. என்று + எண்ணி

  3. என்றெ + எண்ணி

  4. என்று + றெண்ணி

விடை : என்று + எண்ணி

2. மடை + தலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. மடைதலை

  2. மடைத்தலை

  3. மடத்தலை

  4. மடதலை

விடை : மடைத்தலை

3. வரும் + அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. வருமளவும்

  2. வருஅளவும்

  3. வரும்மளவும்

  4. வரும்அளவும்

விடை : வருமளவும்

4. அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல் _________

  1. அறிவில்லாதவர்

  2. படிக்காதவர்

  3. அறியாதார்

  4. அறிவுடையவர்

விடை : அறிவுடையவர்

5. எண்ணுதல் இச்சொல்லுக்குரிய பொருள் _________

  1. வாடுதல்

  2. வருந்துதல்

  3. நனைத்தல்

  4. நினைத்தல்

விடை : நினைத்தல்

II. இப்பாடலில் இரண்டாம் எழுத்து (எதுகை) ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

  1. க்கம் – கக்க

  2. டைத்தலை – உடையார்

  3. ருதவும் – வருமளவும்

  4. ருமளவும் – இருக்குமாம்

III. மடைத்தலை இச்சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.

  1. மடை

  2. தலை

  3. மலை

  4. தடை

IV. பொருத்துக.


1. உறுமீன்

நீர் பாயும் வழி

2. கருதவும்

பணிவு

3. அறிவிலர்

நினைக்கவும்

4. மடைத்தலை

பெரிய மீன்

5. அடக்கம்

அறிவு இல்லாதவர்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ





V. வினாக்களுக்கு விடையளிக்க.

1. கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?

கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும்.

2. யாரை அறிவில்லாதவராக எண்ணக் கூடாது என ஔவையார் குறிப்பிடுகிறார்?

தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டாம் என ஒளவையார் குறிப்பிடுகிறார்.

2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள் _________

  1. இப்பிறப்பு

  2. மறுபிறப்பு

  3. பிறப்பு

  4. முற்பிறப்பு

விடை : இப்பிறப்பு

2. காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது _________

  1. காரண + மாகின்றது

  2. காரண + ஆகின்றது

  3. காரணம் + மாகின்றது

  4. காரணம் + ஆகின்றது

விடை : காரணம் + ஆகின்றது

3. வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் _________

  1. செழுமை

  2. இன்மை

  3. செம்மை

  4. ஏழ்மை

விடை : ஏழ்மை

4.  பொருள் + செல்வம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

  1. பொருள்செல்வம்

  2. பொருள்ச்செல்வம்

  3. பொருட்செல்வம்

  4. பொருட்ச்செல்வம்

விடை : பொருட்செல்வம்

5. பொருள் + இல்லார்க்கு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பொருளில்லார்க்கு

  2. பொருள்ளில்லார்க்கு

  3. பொருலில்லார்க்கு

  4. பொருள்இல்லார்க்கு

விடை : பொருளில்லார்க்கு

II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  1. பழைமை + மொழி = பழமொழி

  2. நன்மை + வழி = நல்வழி

III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. பணமென்றால் = பணம் + என்றால்

  2. தொலைக்காட்சி = தொலை + காட்சி

IV. தொடரை முழுமை ஆக்குக

(பத்தும், வளம், கல்வி)

1. பசி வந்திடப் __________ போகும்.

விடை : பத்தும்

2. கேடில் விழுச்செல்வம் __________

விடை : கல்வி

3. பொருளால் நம் வாழ்வு __________ பெறும்.

விடை : வளம்

V. கூடையிலுள்ள சொற்களுக்கு உரிய எதிர்ச் சொற்களைத் தொட்டியிலிருந்து கண்டறிந்து எழுதுக

  1. இம்மை x மறுமை

  2. வருத்தம் x மகிழ்ச்சி

  3. புதுமை x பழைமை

  4. நன்மை x தீமை

  5. நல்வழி x தீயவழி

  6. நேற்று x இன்று

  7. வறுமை x செழுமை

VI. வினாக்களுக்கு விடையளிக்க.

1. களர்நிலத்துக்கு ஒப்பாவர் – யார்?

கல்வி கற்காதவரே களர்நிலத்துக்கு ஒப்பானவர் ஆவார்.

2. கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது எது?

பொருட்செல்வம் கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது ஆகும்.

3. ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்‘ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை உம் சொந்தநடையில் எழுதுக.

  • கல்வி கற்காதவன் ”களர்நிலத்திற்கு ஒப்பாவான்

  • கல்வி கற்றவருக்கு மட்டுமே பாதிப்பு கிடைக்கும்.

  • பொருட்செல்வம் கொடுத்தால்குறையும். கள்வர்களால் கவர்ந்து செல்லக் கூடியது. ஆனால் கல்விச் செல்வம் குறையாது. திருடவும் முடியாது.

  • கல்விச் செல்வமே ‘இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது’

ஆகியவை கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்‘ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்கள் ஆகும்.

4. பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்களைத் தொகுத்து எழுதுக

  • திருவள்ளுவர் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றே கூறியிருக்கிறார்.

  • கல்வி கற்க பணம் தேவை

  • பணமில்லாதவன் பிணம்’, ‘பணமென்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்’

ஆகியவை பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்கள் ஆகும்.

2.3 வறுமையிலும் நேர்மை 

வினாக்களுக்கு விடையளிக்க.

1. பசியால் வாடிய ஊர்மக்களுக்குப் பணக்காரர் எவ்வாறு உதவினார்?

பஞ்சம் காரணமாக ஊரில் உள்ளவர்கள் நல்ல உள்ளம் படைத்த ஒருவரிடம், பசியால் வாடும் தங்கள் குழந்தைகளுக்கு உதவும் படி வேண்டினர். ஊரில் பசியால் குழந்தைகள் யாரும் வாடக்கூடாது என்பதற்காகப் பணக்காரர். ஆளுக்கு ஒரு கொழுக்கட்டை கிடைக்குமாறு தன் வீட்டிற்கு வெளியே தினமும் கடையில் தேவையான அளவு கொழுக்கட்டைகளை வைத்தார்.

2. சிறுமியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு யாது?

கொழுக்கட்டைக் கூடையில் இருந்து இறுதியாக என்ன கிடைக்கின்றதோ அதைத்தான் தினமும் சிறுமி இளவேனில் எடுப்பாள். ஆறாம் நாள் வழக்கமான கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள். கொழுக்கட்டையை இரண்டாகப் பிளந்த போது தங்கக்காசு கிழே விழந்தது. அம்மா அவளிடம் கொழுக்கட்டைய கொடுத்தவர்களிடம் கொண்டுபோய் கொடுக்கச் சொன்னார். அவளும் பணக்காரரிடம் சென்று நடந்ததைக் கூறி பொற்காசைக் கொடுத்தாள். உனது பொறுமைக்கும் நற்பண்புக்கும் நான் கொடுக்கும் பரிசு இது, எடுத்துச் செல் என்றார்.

2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

பெயர்ச்சொல், வினைச்சொல்.

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல்  எனப்படும்.

எடுத்துக்காட்டு:- சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன்.

ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டு:- ஓடினான், விழுந்தது, எழுதினான்.


கீழுள்ள தொடர்களைக் கவனியுங்கள்.

1. இராமன் பாடம் படித்தான்.

இத்தொடரில் ,

  • இராமன், பாடம் – பெயர்ச்சொற்கள்

  • படித்தான் – வினைச்சொல்

2. மாடு புல் மேய்ந்தது.

இத்தொடரில் ,

  • மாடு, புல் – பெயர்ச்சொற்கள்

  • மேய்ந்தது – வினைச்சொல்


  • ஒன்றன் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல்

  • ஒரு செயலைக் குறிப்பது வினைச்சொல்

I. கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என வகைப்படுத்துக.

(பாடினாள், வருணன், எழுதினான், வரைந்தாள், இசைவாணி, உண்டான், கண்ணன், சம்சுதீன், ஜெனிபர், கட்டினார், ஓடியது, முயல்)

பெயர்ச்சொல்

வினைச்சொல்

வருணன்

உண்டான்

இசைவாணி

வரைந்தாள்

முயல்

ஓடியது

சம்சுதீன்

எழுதினான்

ஜெனிபர்

பாடினாள்




II. பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்லை எடுத்து எழுதுக.

  1. மயில் தோகையை விரித்து ஆடியது

  2. வாணி கட்டுரை எழுதினாள்

  3. இளம்பிறை உணவு சமைத்தாள்

  4. ஆதிரை மரக்கன்றை நட்டாள்

  5. கொத்தனார் வீடு கட்டினார்


பெயர்ச்சொல்

வினைச்சொல்

மயில்

விரித்து ஆடியது

வாணி

எழுதினாள்

இளம்பிறை

சமைத்தாள்

ஆதிரை

நட்டாள்

கொத்தனார்

கட்டினார்




III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. முன்னேற்றம்

விடை : வாழ்வில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பு தேவை

2. புதுமை

விடை :  நம் வாழ்வில் ஏற்படும் அனுபவம் ஒவ்வொன்றும் புதுமை

3. வாழ்க்கை

விடை :  மனித வாழ்க்கை எந்திர வாழ்க்கையாக மாறி விட்டது

4. தொலைக்காட்சி

விடை :  தொலைக்காட்சி என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும்

IV. கலைந்துள்ள சொற்களை வரிசைப்படுத்தித் தொடர்களாக எழுதுக.

1. கண்கள் நாட்டின் பெண்கள்.

விடை : பெண்கள் நாட்டின் கண்கள்.

2. முதுகெலும்பு நாட்டின் விவசாயமே

விடை : நாட்டின் முதுகெலும்பு விவசாயமே!

3. தரும் உழைப்பே உயர்வு

விடை : உழைப்பே உயர்வு தரும்.

4. போன்றது பொன் காலம்

விடை : காலம் பொன் போன்றது.

5. துளி வெள்ளம் பெரு சிறு

விடை : சிறு துளி பெரு வெள்ளம்

மீன்பிடிப்போம் வாருங்கள்

V. கொக்குக்கு ஏற்ற மீன்களைப் பிடித்து கூடையில் போடுக (ஒரு பொருள் பல சொல்)

1. நெருப்பு 

விடை : அனல், தணல், கனல், தீ

2. கதிரவன்

விடை : பகலவன், ஆதவன், சூரியன்

3. சந்திரன்

விடை : திங்கள், நிலா, மதி, அம்புலி

சொல் ஏணி அமைப்போம்

VI. சொல்லின் இறுதியில் முடியும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அமையும் மற்றொரு சொல்லை எழுதிச் சொல்லேணி அமைக்க.

வருணிப்போம்

VII. படத்தைப் பார்த்து வருணனைச் சொல்லுடன் படத்தில் காணும் உயிரினங்களின் பெயரை எழுதுக

எ.கா: வண்ண வண்ண மலர்கள்

தாவி ஓடும் முயல்

  1. முயலை துரத்தும் நரி

  2. அழகாய் பறக்கும் பட்டாம்பூச்சி

  3. வானில் பறக்கும் கொக்கு

  4. துள்ளி துள்ளி குதிக்கும் அணில்

  5. தண்ணீர் குடிக்கும் மான்

இயல்-3: இயற்கை

3.1 கடல்

சொல் பொருள்

  • அலுப்பு – களைப்பு

  • புரவி – குதிரை

  • மகரம் – மீன்

  • திரைகள் – அலைகள்

  • மகிமை – பெரும்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. பெருமைகடல்

  2. பெருங்கடல்

  3. பெரியகடல்

  4. பெருமைக்கடல்

விடை : பெருங்கடல்

2. கருங்கடலே என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. கருமை + கடலே

  2. கருங் + கடலே

  3. கரும் + கடலே

  4. கரு + கடலே

விடை : கருமை + கடலே

3. திரை என்ற சொல்லின் பொருள் _________

  1. மலை

  2. அலை

  3. வலை

  4. சிலை

விடை : அலை

4. மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது ______

  1. வானம்

  2. பூமி

  3. கடல்

  4. நெருப்பு

விடை : கடல்

II. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. எல்லை – அல்லும்

  1. லைகடலே – இலையோ

  2. திரைகளோ – நிரைதாமோ

  3. லையை – விலைகொள்

  4. பொங்கு- எங்கும்

III. முதலெழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. ல்லும் – லுப்பும்

  1. ரவும்- லையோ

  2. விலைகொள் – விளையாட

  3. லையை – கர

  4. ழுத்து – யிற்றடக்கம்

IV. வினாக்களுக்கு விடையளிக்க.

1. கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?

அலைகள், மீன்கள், முத்துகள்

2. பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.

  • பெருங்கடலே! நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய்.

  • அலைகள், குதிரைகள் அணிவகுத்து வருவதைப் போல் உள்ளது.

  • அலையோசையா? இடியோசையா? என்று ஐயம் எழுகிறது.

  • அலைகள், மீன்கள், முத்துகள், ஆகியவை கொண்டது கடல்

  • நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும், பூமியில் மழை பெய்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய்.

  • பூமியில் மழைபெய்யவும், மழைநீரைச் சேமித்து வைக்கும் பெரிய கலனாகவும் விளங்குகின்றது.

ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைக்க வல்லவர்கள் இங்கு எவரும் இலர்.

3.2 படம் இங்கே! பழமொழி எங்கே?

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. மரப்பொந்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. மரம் + பொந்து

  2. மர + பொந்து

  3. மரப் + பொந்து

  4. மரப்பு + பொந்து

விடை : மரம் + பொந்து

2. அக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. அக் + கரை

  2. அந்த + கரை

  3. அ + கரை

  4. அ + அரை

விடை : அ + கரை

3. சூறை + காற்று இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. சூறைகாற்று

  2. சூற்காற்று

  3. சூறக்காற்று

  4. சூறைக்காற்று

விடை : சூறைக்காற்று

4. கண் + இமைக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. கண்ணிமைக்கும்

  2. கண்இமைக்கும்

  3. கண்மைக்கும்

  4. கண்ணமைக்கும்

விடை : கண்ணிமைக்கும்

5. நானூறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________ 

  1. நான்கு + நூறு

  2. நா + நூறு

  3. நான்கு + னூறு

  4. நான் + நூற

விடை : நான்கு + நூறு

6. அமர்ந்து + இருந்த இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

  1. அமர்ந்திருந்த

  2. அமர்ந்துஇருந்த

  3. அமர்திருந்த

  4. அமர்ந்துதிருந்த

விடை : அமர்ந்திருந்த

II. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. மணியோசை = மணி + ஓசை

  2. தேனிசை = தேன் + இசை

III. பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:

(புத்தி, அடி, காலை, பயிர், வளையாதது)

1. யானைக்கும் _______ சறுக்கும்

விடை : அடி

2. விளையும் _______ முளையிலே தெரியும்

விடை : பயிர்

3. ஐந்தில் _______ ஐம்பதில் வளையாது

விடை : வளையாதது

4. ஆத்திரக்காரனுக்குப் _______ மட்டு

விடை : புத்தி

5. ஆழம் தெரியாமல் _______ விடாதே

விடை : புத்தி

IV. சொல்லை இடம் மாற்றிப் பழமொழியைக் கண்டுபிடிக்க.

1. உழுவதை அகல விட உழு ஆழ

விடை : அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

2. வளையாதது வளையாது ஐம்பதில் ஐந்தில்

விடை : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

3. மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு அமிழ்தமும்

விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு

4. குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை

விடை : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

5. வருத்தம் சோம்பல் முதுமையில் இளமையில்

விடை : இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்

V. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பழமொழி என்பது யாது?

நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள் பழமொழிகள் ஆகும்.

2. கிளி, யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?

தான் காட்டும் படத்திற்குரிய பழமொழியைக் கூறுபவர்களுக்கு கிளி, மாம்பழம் தருவதாகக் கூறியது

3. கிளியைப் ‘பழமொழிக் கிளி’ என அழைக்கக் காரணம் என்ன?

மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப் பொந்திலிருந்து எடுத்துக் காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால், அதைப் ‘பழமொழிக் கிளி’ என்றும் ஆசையாக அழைப்பார்கள் .

4. இப்பாடத்தில் நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடு.

  • யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!

  • இக்கரைக்கு அக்கரை பச்சை

  • ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

  • அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

  • அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

3.3 தப்பிப் பிழைத்த மான்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. நரி, காகத்திடமிருந்து ஏன் மானைப் பிரிக்க எண்ணியது? 

காகமும் மானும் இணைபிரியா நண்பர்கள், அவர்களை பிரித்த மானை எப்படியாவது கொன்று தின்றுவிட வேண்டும் என எண்ணி நரி, காகத்திடமிருந்து மானைப் பிரிக்க எண்ணியது

2. நரியை நண்பனாக ஏற்றுக்கொண்ட மானிடம் காகம் கூறியதென்ன?

நரியை நண்பனாக ஏற்றக்கொண்ட மானிடம் “நண்பா, யாரையும் நம்பி விடாதே! அது நமக்கு ஆபத்து.” என்று காகம் கூறியது. மேலும் “கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்றது.

3. நரி, மானை எங்கு அழைத்துச் சென்றது? 

நரி, மானை ஒருவரின் விளைச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றது.

4. வேலியில் மாட்டிக்கொண்ட மானைக் காகம் எவ்வாறு காப்பாற்றியது? 

விவசாயி அருகில் வரும் வரை நீ இறந்ததுபோல் அசையாமல் இரு விவசாயி உன்னை வேலியிலிருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து கா கா கா என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்து விடு என்றது காகம். அதன் படி மான் நடித்தது. வேடன் விடுவித்தவுனட் காகரம் கரைய மான் ஓடியது.

5. ‘தப்பிப் பிழைத்த மான்‘ கதையிலிருந்து நீங்கள் அறிந்துகொண்ட நீதி யாது?

“ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்”

3.4 சொற்றொடர் அமைப்பு முறை

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. எழுவாய் எப்போதும் _________ லாகவே இருக்கும்.

  1. வினைச்சொல்

  2. இடைச்சொல்

  3. பெயர்ச்சொல்

  4. உரிச்சொல்

விடை : பெயர்ச்சொல்

2. பாடல் பாடினாள் இத்தொடரில் _________ இல்லை.

  1. எழுவாய்

  2. பயனிலை

  3. செயப்படுபொருள்

  4. சொல்

விடை : எழுவாய்

3. அமுதன் ஓடினான் இத்தொடரில் _________ உண்டு

  1. பயனிலை

  2. செயப்படுபொருள்

  3. இடைச்சொல்

  4. உரிச்சொல்

விடை : செயப்படுபொருள்

II. எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.

  1. மாதவி சித்திரம் தீட்டினாள்

  2. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

  3. அன்பழகன் மிதிவண்டி ஓட்டினான்

  4. கிளி பழம் தின்றது.


எழுவாய்

(யார், எது, எவை, யாவர்)

செயப்படுபொருள்

(யாரை, எதனை, எவற்றை)

பயனிலை

(முடிந்த செயல்)

மாதவி

சித்திரம்

தீட்டினாள்

இளங்கோவடிகள்

சிலப்பதிகாரத்தை

இயற்றினார்

அன்பழகன்

மிதிவண்டி

ஓட்டினான்

கிளி

பழம்

தின்றது








III. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ள தொடர்கள் நான்கு எழுதுக.

  1. முருகன் வள்ளியை மணந்தான்

  2. மாதவி சித்திரம் தீட்டினாள்

  3. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

  4. தென்றல் நடனம் ஆடினாள்

IV. எழுவாய், பயனிலை மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

  1. தென்றல் ஆடினாள்

  2. ராமு ஓடினான்

  3. யானை தின்றது

V. பயனிலை, செயப்படுபொருள் மட்டும் உள்ள தொடர்கள் மூன்று எழுதுக.

  1. படம் பார்த்தான்

  2. பாடம் படித்தான்

  3. ஓட்டம் ஓடினாள்

VI. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. அமைதியாக

விடை: வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக இருந்தனர்

2. தருகிறேன்

விடை: நன்றாக படி பரிசு தருகிறேன் என்றார் ஆசிரியர்

3. சிறுவர்கள்

விடை: சிறுவர்கள் பள்ளிக்கு சென்றனர்

4. முழக்கம்

விடை: இடி முழக்கம் பயம் தரும்

5. தங்கம்

விடை: பெண்களுக்கு தங்கம் மிகவும் பிடிக்கும்

6. விளைவு

விடை: கற்பதன் விளைவு நன்மதிப்பை தரும்

II. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

என் உடல் ஏழு நிறங்களால் ஆனது ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் இளஞ்சிவப்பு சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும் எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம் பின்பகுதி என் வடிவம் என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா

விடை:

என் உடல் ஏழு நிறங்களால் ஆனது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் அமைந்திருக்கும். எனது பெயரின் முன்பகுதி என் இருப்பிடம். பின்பகுதி என் வடிவம். என் பெயரைக் கண்டுபிடித்துவிட்டாயா?

III. பொருத்தமான சொற்களால் நிரப்புக.

(உறுதியாக, சொத்தையாக, பல்வலி, பல்துலக்க)

மருத்துவர்: விமலா உன் உடம்புக்கு என்ன?

விமலா: எனக்கு பல்வலி ஐயா,

மருத்துவர்: எங்கே வாயைத் திற, பல்லெல்லாம் சொத்தையாக இருக்கிறதே.

விமலா: அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?

மருத்துவர்: இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடக்கூடாது. தினமும் இருமுறை காலையிலும், இரவிலும் பல்துலக்க வேண்டும். அப்பொழுதுதான் பற்கள் உறுதியாகஇருக்கும்.

விமலா: நீங்கள் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் ஐயா.

IV. தடித்த சொல் விடையாக வருமாறு வினா அமைக்க.

1. என் நண்பனின் பெயர் தேனமுதன்.

விடை: என் நண்பனின் பெயர் என்ன?

2. பாட்டி எனக்குக்கதைகூறுவார்.

விடை: பாட்டி எனக்குக் என்ன கூறுவார்?

3. தினமும் மாலையில் விளையாடுவேன்

விடை: தினமும் எப்போது விளையாடுவேன்?

4. எனக்குமட்டைப் பந்துவிளையாட மிகவும் பிடிக்கும்.

விடை: எனக்கு எது விளையாட மிகவும் பிடிக்கும்?

5. உயிர்களிடத்தில் அன்பாகநட ந்துகொள்வேன்.

விடை: உயிர்களிடத்தில் எவ்வாறு நடந்துகொள்வேன்?

மொழியோடு விளையாடு

I. கண்டுபிடித்து எழுதுக.

1. மணம் மிக்க மலர்

விடை: மல்லிகை

2. சிலந்திக்கு எத்தனை கால்கள்?

விடை: எட்டு

3. பந்தை அடிக்க உதவுவது

விடை: மட்டை

4. பசுவின் உணவு

விடை: புல்

5. மீன் பிடிக்க உதவும்

விடை: வலை

6. ஒரு தின்பண்டம்

விடை: வடை

II. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எழுதுக.

  • Seashore – கடற்கரை

  • Morning – காலை

  • Field – வயல்

  • Mango tree – மாமரம்

  • Cyclone – புயல்

  • Nature – இயற்கை

  • Pearl – முத்து

  • Farmer – உழவர்

  • Project – செயல்திட்டம்

  • Circus – வித்தை

III. கலங்கரை விளக்கம் – இச்சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக.

  • கலம்

  • கலகம்

  • கரை

  • கலக்கம்

  • விளக்கம்

IV. கடல் வளங்களைக் கண்டுபிடிப்போம்

  1. சிப்பி

  2. மீன்

  3. முத்து

  4. பவளம்

  5. சங்கு

  6. ஆமை

V. சரியான சொற்களை எடுத்துப் பொருத்துக

1. வீட்டுக்கு ஒரு …………………… வளர்ப்போம். (மறம் / மரம்)

விடை: மரம்

2. உயிர் கொடுப்பான் …………………… (தோழன் / தோலன்)

விடை: தோழன்

3. நேர்மை எப்போதும் …………………… தரும். (நண்மை / நன்மை)

விடை: நன்மை

4. கொடுத்து …………………. இன்பம். (மகிழ்வது / மகிள்வது)

விடை: மகிழ்வது

5. …………………. இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் (குழந்தை / குலந்தை)

விடை: குழந்தை

VI. பின்வரும் சொற்களைக் கொண்டு சொற்றொடர் உருவாக்கலாமா!

மழை = மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்
மலை = உயர்ந்து நிற்பது மலை

கரி = யானையின் மறுபெயர் கரி
கறி = காரத்துடன் செய்யப்பட்ட ஒரு பதார்த்தம் கறி ஆகும்

தவளை = நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு விலங்கு தவளை ஆகும்
தவலை = தவலை என்பது தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரவகை

வழி = பாதையை குறிப்பது வழி
வலி = உடல் காயத்தினால் ஏற்படுவது வலி

அரை = ஒன்றில் பாதி அரை
அறை = கட்டிடத்தின் ஒரு பகுதி அறை

மனம் = உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு மனம்
மணம் = மல்லிகையின் வாசனையை குறிப்பது மணம்

அகர முதலி

  • அம்மி – அரைக்கும் கல்

  • அலுப்பு – களைப்பு

  • ஆல் – ஆலமரம்

  • இளகிய – இரக்கமுள்ள

  • இம்மை – இப்பிறப்பு

  • இன்னல் – துன்பம்

  • எஞ்சியிருந்த – மீதியிருந்த

  • கலகம் – சண்டை

  • களர்நிலம் – பயிர் செய்ய உதவாத நிலம்

  • கழை – கரும்பு

  • குயவர் – மண்பாண்டம் செய்பவர்

  • குளிரிள – குளிர்ச்சியான

  • சாதம் – சோறு

  • செருக்கு – தலைக்கனம்

  • நனிபசு – மிகுதியாகப் பால் தரும் பசு

  • நெசவாளர் – துணி நெய்பவர்

  • பஞ்சம் – வறட்சி

  • பாண்டம் – பாத்திரம்

  • புரவி – குதிரை

  • மகரம் – மீன்

  • முற்றல் – முற்றிய காய்

  • விவாதம் – சொற்போர்


Prepared By Azaz Tuition Centre.









PDF FILE TO YOUR EMAIL IMMEDIATELY PURCHASE NOTES & PAPER SOLUTION. @ Rs. 50/- each (GST extra)

SUBJECTS

HINDI ENTIRE PAPER SOLUTION

MARATHI PAPER SOLUTION

SSC MATHS I PAPER SOLUTION

SSC MATHS II PAPER SOLUTION

SSC SCIENCE I PAPER SOLUTION

SSC SCIENCE II PAPER SOLUTION

SSC ENGLISH PAPER SOLUTION

SSC & HSC ENGLISH WRITING SKILL

HSC ACCOUNTS NOTES

HSC OCM NOTES

HSC ECONOMICS NOTES

HSC SECRETARIAL PRACTICE NOTES

2019 Board Paper Solution

HSC ENGLISH SET A 2019 21st February, 2019

HSC ENGLISH SET B 2019 21st February, 2019

HSC ENGLISH SET C 2019 21st February, 2019

HSC ENGLISH SET D 2019 21st February, 2019

SECRETARIAL PRACTICE (S.P) 2019 25th February, 2019

HSC XII PHYSICS 2019 25th February, 2019

CHEMISTRY XII HSC SOLUTION 27th, February, 2019

OCM PAPER SOLUTION 2019 27th, February, 2019

HSC MATHS PAPER SOLUTION COMMERCE, 2nd March, 2019

HSC MATHS PAPER SOLUTION SCIENCE 2nd, March, 2019

SSC ENGLISH STD 10 5TH MARCH, 2019.

HSC XII ACCOUNTS 2019 6th March, 2019

HSC XII BIOLOGY 2019 6TH March, 2019

HSC XII ECONOMICS 9Th March 2019

SSC Maths I March 2019 Solution 10th Standard11th, March, 2019

SSC MATHS II MARCH 2019 SOLUTION 10TH STD.13th March, 2019

SSC SCIENCE I MARCH 2019 SOLUTION 10TH STD. 15th March, 2019.

SSC SCIENCE II MARCH 2019 SOLUTION 10TH STD. 18th March, 2019.

SSC SOCIAL SCIENCE I MARCH 2019 SOLUTION20th March, 2019

SSC SOCIAL SCIENCE II MARCH 2019 SOLUTION, 22nd March, 2019

XII CBSE - BOARD - MARCH - 2019 ENGLISH - QP + SOLUTIONS, 2nd March, 2019

HSC Maharashtra Board Papers 2020

(Std 12th English Medium)

HSC ECONOMICS MARCH 2020

HSC OCM MARCH 2020

HSC ACCOUNTS MARCH 2020

HSC S.P. MARCH 2020

HSC ENGLISH MARCH 2020

HSC HINDI MARCH 2020

HSC MARATHI MARCH 2020

HSC MATHS MARCH 2020


SSC Maharashtra Board Papers 2020

(Std 10th English Medium)

English MARCH 2020

HindI MARCH 2020

Hindi (Composite) MARCH 2020

Marathi MARCH 2020

Mathematics (Paper 1) MARCH 2020

Mathematics (Paper 2) MARCH 2020

Sanskrit MARCH 2020

Sanskrit (Composite) MARCH 2020

Science (Paper 1) MARCH 2020

Science (Paper 2)

Geography Model Set 1 2020-2021


MUST REMEMBER THINGS on the day of Exam

Are you prepared? for English Grammar in Board Exam.

Paper Presentation In Board Exam

How to Score Good Marks in SSC Board Exams

Tips To Score More Than 90% Marks In 12th Board Exam

How to write English exams?

How to prepare for board exam when less time is left

How to memorise what you learn for board exam

No. 1 Simple Hack, you can try out, in preparing for Board Exam

How to Study for CBSE Class 10 Board Exams Subject Wise Tips?

JEE Main 2020 Registration Process – Exam Pattern & Important Dates


NEET UG 2020 Registration Process Exam Pattern & Important Dates

How can One Prepare for two Competitive Exams at the same time?

8 Proven Tips to Handle Anxiety before Exams!

BUY FROM PLAY STORE

DOWNLOAD OUR APP

HOW TO PURCHASE OUR NOTES?

S.P. Important Questions For Board Exam 2022

O.C.M. Important Questions for Board Exam. 2022

Economics Important Questions for Board Exam 2022

Chemistry Important Question Bank for board exam 2022

Physics – Section I- Important Question Bank for Maharashtra Board HSC Examination

Physics – Section II – Science- Important Question Bank for Maharashtra Board HSC 2022 Examination

Important-formula



THANKS