Advertisement

பின்னணி பாடகர்கள் பாடும் போது எதற்கு ஹெட்செட் பயன்படுத்துகிறார்கள்? அதன் பயன் என்ன?

பொதுவாக record செய்யப்படும் பாடல்களின் background track (அதாவது, பாடுபவரின் குரல் தவிர்த்து இசைக்கருவிகள், beat, chords... இவை சேர்ந்த audio) ஐ recording room இற்கு வெளியே இருக்கும் கணினியிலிருந்து play பண்ணுவார்கள். அது வெளியிலிருப்பவர்களுக்குக் கேட்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் Recording room இற்குள் அப்படி சத்தமாகக் கேட்டால், உள்ளே இருக்கும் mic மூலமாக பாடகரின் குரல் மட்டும் record செய்யப்படாமல் அந்த background track உம் சேர்ந்தவாறு record செய்யப்பட்டுவிடும்.

அப்படி record செய்யப்பட்டுவிட்டால் இதில் சில சிக்கல்கள் உள்ளன:

  • Background track இல் எந்தவித மாற்றமும் அதற்குப் பின் செய்ய முடியாது.
  • பாடகரின் குரலுக்கு தனியாக effects (reverb, panning, etc.) சேர்க்க முடியாது.
  • சில பாடல்களில் பல version கள் வரும், ஒரே குரல், வேறு வேறு instruments + arrangements (எ.கா: முகமூடி திரைப்படத்தில் வரும் "வாயமூடி சும்மா இரு டா". இதன் male version ஒன்றுக்கு மேற்பட்ட arrangements உடன் வெவ்வெறு tracks ஆக வரும்). இப்படியான விஷயங்களுக்கு பாடகர் பாடி record செய்ததை re-use பண்ண முடியாது.

(பாடகரின் குரலை துல்லியமாகப் பிரித்தெடுக்க முடியாது)

Recording room இற்குள் இருக்கும் பாடகர் சரியாகப் பாடுவதற்கு, அவருக்கு மட்டும் அந்த இசை கேட்டால் போதும். அதற்காகத் தான் headset போடுகிறார்கள்.

பாடகர்கள் மட்டும் என்று இல்லை, mic வைத்து record செய்யும் (புல்லாங்குழல் போன்ற) இசைக்கருவிகள் இசைப்பவர்களும் headset அணிவார்கள்.