OMTEX AD 2

சூர்யாவின் பதிலடி அறிக்கை! சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்:


சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன், சூர்யாவின் பதிலடி அறிக்கை!


ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன் என நடிகர் சூர்யா தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



கல்வி என்பது ஒரு சமூக அறம், பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது. 

OMTEX CLASSES AD