1. உயிரினும் ஒம்பப்படுவது எது? ஏன்? (இயல் - 1)
உயிரினும் ஒம்பப்படுவது ஒழுக்கம். அ.து அனைத்துச் சிறப்புகளையும் தரவல்லது.
2. நன்றிக்கு வித்தாவது எது? (இயல் - 1)
நன்றிக்கு வித்தாவது நல்ல ஒழுக்கம்.
3. என்றும் இடும்பை தருவது எது? (இயல் - 1)
என்றும் இடும்பை தருவது தீய ஒழுக்கம்.
4. ஞாலம் கருதினும் கைகூடும் எப்போது? (இயல் - 1)
காலமும் இடமும் அறிந்து செயல்பட வேண்டும். அப்போது உலகத்தை ஆளக் கருதினாலும் கைகூடும்.
5. குகன் இராமனைக் கண்டு எவ்வாறு பணிந்து வணங்கினான்? (இயல் - 3)
கரிய தலைமுடி மண்ணில் படிய வணங்கினான், எழுந்து அடக்கமாய் வாய்பொத்தி வளைந்து நின்றான்.
6. அப்பூதியடிகள் எத்தகைய பண்பாளர்? (இயல் - 5)
அப்பூதியடிகள் களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்கள் நீங்கியவர், சிவபக்தி உடையவர்.
7. பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது எது? (இயல் - 7)
மதிக்கத்தகாதவரையும் மதிக்கச் செய்வது பொருள் ஆகும்.
8. வேந்தர்க்குரிய பொருள்கள் யாவை? (இயல் - 7)
அரசுரிமையால் வந்த பொருள், மக்கள் வரியாகத் தந்த பொருள், பகைவரை வென்று சேர்த்த பொருள்.
9. ஆற்றுதல் என்பது யாது? (இயல் - 9)
வறுமையில் வாடுபவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுத
10. நந்திவர்மன் வீரம் எத்தகையது? (இயல் - 9)
நந்திவர்மனை எதிர்க்கும் அறிவற்ற மன்னர்கள் தம் உயிரை இழந்து தேவர் உலகத்தை ஆள்வர்.
(கீழ்க்காணும் வினாக்களுக்கு எளிமையான முறையில் விடை தயார் செய்து பயிற்சியளிக்கவும்)
11. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை? (இயல் - 1)
12. பாரதிதாசன் திருவள்ளுவரை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?(இயல் - 1)
13. ஏலாதி-நூற்குறிப்பு எழுதுக. (இயல் - 1)
14. கையுறைப் பொருள்களாகக் குகன் கொண்டு சென்றன எவை? யாருக்குக் கொண்டு சென்றான்?(இயல் - 3)
15. குகனின் வேண்டுகோள் யாது? (இயல் - 3)
16. "அன்புள இனி நாம் ஒர் ஐவர்கள் உளரானோம்" - யார் யாரிடம் கூறியது? (இயல் - 3)
17. அப்பூதியடிகள் எவ்வெவற்றுக்கெல்லாம் திருநாவுக்கரசு எனப் பெயர் வைத்தார்?(இயல்5)
18. திருநாவுக்கரசர் அப்பூதியடிகளிடம் வினவியதென்ன? (இயல் - 5)
19. "இப்போது இங்கு அவன் உதவான்" யார், யாரிடம் கூறியது? (இயல் - 5)
20. வயலின் வரப்புகளாகக் கூறப்படுபவை யாவை? (இயல் - 6)
21. வயல் தரும் விளைவுகளாகக் தமிழ்விடு துாது கூறுவன யாவை? (இயல் - 6)
22. போலிப் புலவர்களைத் தண்டிப்போர் யாவர்?(இயல் - 6)
23. வன்மையுள் எல்லாந் தலையாயது எது? (இயல் - 7)
24. கெடுப்பார் இலானுங் கெடுபவர் யார்?(இயல் - 7) 25. பண்பு எனப்படுவது யாது? (இயல் - 9)