Advertisement

தமிழ் பழமொழிகள் - Tamil Proverbs

* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

* அடியாத மாடு படியாது.

* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

* அகத்தினழகு முகத்தில் தெரியும்

* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

* அகல உழுகிறதை விட ஆழ உழு.

* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

* அடக்கமே பெண்ணுக்கு அழகு.

* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

* அடாது செய்தவன் படாது படுவான்.

* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .

* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

* அழுத பிள்ளை பால் குடிக்கும்.

* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்

* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன

* அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்

* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்

* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

* அறுவடை காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

* அற்ப அறிவு அல்லற் கிடம்

* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும்சொல்லுக்குறுதி.

* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

* ஆழம் தெரியாமல் காலை விடாதே.

* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.´

* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

* இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

* இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு..

* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.

* இல்லாது பிறாவது அள்ளாது குறையாத

* இளங்கன்று பயமறியாது

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இளமையிற்கல்வி கல்மேல் எழுத்து.

* இளமையில்சோம்பல் முதுமையில்வருத்தம்.

* இறங்கு பொழுதில் மருந்து குடி

* இறுகினால் களி , இளகினால் கூழ்.

* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

* உடல் உள்ள வரையில் கடல்கொள்ளாத கவலை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

* உண்ணாச்சொத்து மண்ணாய்ப்போகும்.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

* உலோபிக்கு இரட்டை செலவு.

* உளவு இல்லாமல் களவு இல்லை.

* உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல,

* உள்ளது போகாது இல்லது வாராது.

* உள்ளம் தீயெரிய உதடு பழஞ்சொரிய..

* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

* ஊசியைக் காந்தம் இழுக்கும் *உத்தமனைச்சிநேகம் இழுக்கும்.

* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப்பிந்துவான்.

* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

* எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

* எதார்த்தவாதி வெகுசன விரோதி.

* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

* எதை அடக்காவிட்டாலும் நாக்கைஅடக்கவேண்டும்.

* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

* எரிகிறதைப்பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எருமை வாங்கும் முன்னே நெய்க்குவிலை கூறாதே.

* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்

* எலி வளையானாலும் தனிவலை வேண்டும்.

* எலும்புகடிக்கிற நாய் இரும்பைக்கடிக்குமா?

* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்

* எள்ளூ என்கிறதற்குமுன்னே எண்ணெய்கொண்டு வருகிறான்.

* எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான்முறை கொண்டாடும்.

* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத்தலைச்சுமை.

* ஏழை அமுதகண்ணீர் கூரியவாளை ஓக்கும்.

* ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

* ஐயர் வரும் அமாவாசை நிற்குமா?

* ஒரு காசுபேணின் இரு காசுதேறும்.

* ஒரு குடம்பாலுக்கு ஒரு துளிஉறை.

* ஒரு கைதட்டினால் ஓசைஎழும்புமா?

* ஒரு நன்றிசெய்தவரை உள்ள அளவும் நினை.

* ஒரு நாள்கூத்துக்கு மீசையைச்சிரைக்கவா?

* ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.

* ஒரு பொய்யைமறைக்க ஒன்பது பொய்சொல்லுதல்.

* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்குஅட்டமத்திலே சனி.

* ஓடுகிறவனைக்கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்.

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கடலைத்தாண்ட ஆசையுண்டு கால்வாயைத்தாண்டக்கால் இல்லை.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்

* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

* கடன் வாங்கிக்கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக்கைவிட்டனும் கெட்டான்.

* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.

* கடுங்காற்று மழைகூட்டும் கடுஞ்சிநேகம் பகைகூட்டும்.

* கடுஞ்சொல் தயவைக்கெடுக்கும்.

* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

* கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

* கண் கண்டது கை செய்யும்.

* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

* கரணம் தப்பினால் மரணம்.

* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல

* கல்லாதவரே கண்ணில்லாதவர்.

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்

* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

* கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

* கள்ள மனம் துள்ளும்.

* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

* கனிந்த பழம் தானே விழும்.

* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

* காணி ஆசை கோடி கேடு.

* காப்பு சொல்லும் கை மெலிவை.

* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்

* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை

* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்

* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்

* காற்றில்லாமல் தூசி பறக்குமா?

* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

* கிட்டாதாயின் வெட்டென மற.

* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

* கீறி ஆற்றினால் புண் ஆறும்.

* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

* குணத்தை மாற்றக் குருவில்லை.

* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

* குப்பை உயரும் கோபுரம் தாழும்.

* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே

* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்:

* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

* குப்பையிற்கிடந்தாலும் குன்றிமணி நிறம்போகுமா?

* குரங்கின் கைப் பூமாலை.

* குரைக்கிற நாய் கடிக்காது.

* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது

* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது. 

* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

* கெடுவான் கேடு நினைப்பான்

* கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

* கேடு வரும்பின்னே, மதி கெட்டுவரும்முன்னே.

* கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?

* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்

* கையிலே காசு வாயிலே தோசை

* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

* கொடிக்கு காய் கனமா?

* கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

* கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.

* கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

* கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

* கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.

* கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

* கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

* கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

* கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி

* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

* சாண் ஏற முழம் சறுக்கிறது.

* சாது மிரண்டால் காடு கொள்ளாது.

* சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

* சுக துக்கம் சுழல் சக்கரம்.

* சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

* சுட்ட சட்டி அறியுமா சுவை.

* சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

* சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

* சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

* சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

* சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே

* சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

* செயவன திருந்தச் செய்.

* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

* சேற்றிலே செந்தாமரை போல.

* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

* சொல் அம்போ வில் அம்போ?

* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்..

* சொல்வல்லவனை வெல்லல் அரிது.

* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

* தனிமரம் தோப்பாகாது.

* தன் வினை தன்னைச் சுடும்.

* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?

* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

* தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

* தருமம் தலைகாக்கும்.

* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

* தலை இருக்க வால் ஆடலாமா ?

* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன

* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

* தவளை தன் வாயாற் கெடும்.

* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல். 

* நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !

* நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

* நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

* நயத்திலாகிறது பயத்திலாகாது.

* நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

* நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.

* நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா

* நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

* நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

* நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

* நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.

* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

* நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

* நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.

* நாள் செய்வது நல்லார் செய்யார்.

* நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

* நித்திய கண்டம் பூரண ஆயிசு.

* நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

* நித்திரை சுகம் அறியாது.

* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

* நிறைகுடம் தளம்பாது.

* நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

* நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

* நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

* நீர் மேல் எழுத்து போல்.

* நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.

* நெருப்பு இல்லாமல் புகை எழும்புமா?

* நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

* நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

* நொறுங்கத் தின்றால் நூறு வயது.

* நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

* நோய் கொண்டார் பேய் கொண்டார்.

* பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

* பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

* பகைவர் உறவு புகை எழு நெருப்பு.

* பசியுள்ளவன் ருசி அறியான்.

* பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்

* பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

* படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

* பணம் பத்தும் செய்யும்.

* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

* பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

* பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

* பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

* பதறாத காரியம் சிதறாது.

* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

* பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

* பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

* பலநாள் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

* பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.

* பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

* பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

* பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

* பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

* பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி

* புத்திமான் பலவான்.

* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

* பெண் என்றால் பேயும் இரங்கும்..

* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

* பேராசை பெருநட்டம்.

* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.

* பொறுமை கடலினும் பெரிது.

* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

* போரோடுதின்கிற மாட்டுக்கு பிடுங்கி போட்டுக் கட்டுமா?

* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

* மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

* மண்டையுள்ள வரை சளி போகாது.

* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

* மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

* மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

* மலிந்த சரக்குக் கடைத்தெருவுக்கு வரும்.

* மவுனம் கலக நாசம்

* மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

* மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

* மனமுரண்டிற்கு மருந்தில்லை.

* மனம் உண்டானால் இடம் உண்டு.

* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

* மாரடித்த கூலி மடி மேலே.

* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

* முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா

* முதல் கோணல் முற்றுங் கோணல்

* முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

* முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

* முன் வைத்த காலைப்பின் வைக்கலாமா?

* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

* மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

* மைத்துணன் உதவி மலைபோல

* மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

* மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

* மொழி தப்பினவன் வழி தப்பினவன்

* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

* மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

* வட்டி ஆசை முதலுக்கு கேடு.

* வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

* வெளுத்ததெல்லாம் பாலல்ல.

* வேலிக்கு ஓணான் சாட்சி.

* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை?

* விதி எப்படியோ மதி அப்படி.

* விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

* விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

* விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமா?

* விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

* விளையும் பயிரை முளையிலே தெரியும்.

* விரலுக்குத் தக்கதே வீக்கம்.

* வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

* வைக்கோற் போர் நாய் போல.

* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

PDF FILE TO YOUR EMAIL IMMEDIATELY PURCHASE NOTES & PAPER SOLUTION. @ Rs. 50/- each (GST extra)

SUBJECTS

HINDI ENTIRE PAPER SOLUTION

MARATHI PAPER SOLUTION

SSC MATHS I PAPER SOLUTION

SSC MATHS II PAPER SOLUTION

SSC SCIENCE I PAPER SOLUTION

SSC SCIENCE II PAPER SOLUTION

SSC ENGLISH PAPER SOLUTION

SSC & HSC ENGLISH WRITING SKILL

HSC ACCOUNTS NOTES

HSC OCM NOTES

HSC ECONOMICS NOTES

HSC SECRETARIAL PRACTICE NOTES

2019 Board Paper Solution

HSC ENGLISH SET A 2019 21st February, 2019

HSC ENGLISH SET B 2019 21st February, 2019

HSC ENGLISH SET C 2019 21st February, 2019

HSC ENGLISH SET D 2019 21st February, 2019

SECRETARIAL PRACTICE (S.P) 2019 25th February, 2019

HSC XII PHYSICS 2019 25th February, 2019

CHEMISTRY XII HSC SOLUTION 27th, February, 2019

OCM PAPER SOLUTION 2019 27th, February, 2019

HSC MATHS PAPER SOLUTION COMMERCE, 2nd March, 2019

HSC MATHS PAPER SOLUTION SCIENCE 2nd, March, 2019

SSC ENGLISH STD 10 5TH MARCH, 2019.

HSC XII ACCOUNTS 2019 6th March, 2019

HSC XII BIOLOGY 2019 6TH March, 2019

HSC XII ECONOMICS 9Th March 2019

SSC Maths I March 2019 Solution 10th Standard11th, March, 2019

SSC MATHS II MARCH 2019 SOLUTION 10TH STD.13th March, 2019

SSC SCIENCE I MARCH 2019 SOLUTION 10TH STD. 15th March, 2019.

SSC SCIENCE II MARCH 2019 SOLUTION 10TH STD. 18th March, 2019.

SSC SOCIAL SCIENCE I MARCH 2019 SOLUTION20th March, 2019

SSC SOCIAL SCIENCE II MARCH 2019 SOLUTION, 22nd March, 2019

XII CBSE - BOARD - MARCH - 2019 ENGLISH - QP + SOLUTIONS, 2nd March, 2019

HSC Maharashtra Board Papers 2020

(Std 12th English Medium)

HSC ECONOMICS MARCH 2020

HSC OCM MARCH 2020

HSC ACCOUNTS MARCH 2020

HSC S.P. MARCH 2020

HSC ENGLISH MARCH 2020

HSC HINDI MARCH 2020

HSC MARATHI MARCH 2020

HSC MATHS MARCH 2020


SSC Maharashtra Board Papers 2020

(Std 10th English Medium)

English MARCH 2020

HindI MARCH 2020

Hindi (Composite) MARCH 2020

Marathi MARCH 2020

Mathematics (Paper 1) MARCH 2020

Mathematics (Paper 2) MARCH 2020

Sanskrit MARCH 2020

Sanskrit (Composite) MARCH 2020

Science (Paper 1) MARCH 2020

Science (Paper 2)

Geography Model Set 1 2020-2021


MUST REMEMBER THINGS on the day of Exam

Are you prepared? for English Grammar in Board Exam.

Paper Presentation In Board Exam

How to Score Good Marks in SSC Board Exams

Tips To Score More Than 90% Marks In 12th Board Exam

How to write English exams?

How to prepare for board exam when less time is left

How to memorise what you learn for board exam

No. 1 Simple Hack, you can try out, in preparing for Board Exam

How to Study for CBSE Class 10 Board Exams Subject Wise Tips?

JEE Main 2020 Registration Process – Exam Pattern & Important Dates


NEET UG 2020 Registration Process Exam Pattern & Important Dates

How can One Prepare for two Competitive Exams at the same time?

8 Proven Tips to Handle Anxiety before Exams!

BUY FROM PLAY STORE

DOWNLOAD OUR APP

HOW TO PURCHASE OUR NOTES?

S.P. Important Questions For Board Exam 2022

O.C.M. Important Questions for Board Exam. 2022

Economics Important Questions for Board Exam 2022

Chemistry Important Question Bank for board exam 2022

Physics – Section I- Important Question Bank for Maharashtra Board HSC Examination

Physics – Section II – Science- Important Question Bank for Maharashtra Board HSC 2022 Examination

Important-formulaTHANKS