Showing posts with label 2nd EVS. Show all posts

2nd EVS Wonders of Nature | Term 3 Unit 5 | Samacheer Kalvi

பருவம்-3 அலகு 5: வியத்தகு இயற்கை

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

நீங்கள் கற்க இருப்பவை

* வியத்தகு இயற்கை-தாவரங்கள் மற்றும் விலங்குகள்

* மலர்களின் நிறமும் மணமும்

வியத்தகு இயற்கை அறிமுகம்

வியத்தகு இயற்கை – தாவரங்கள்

இயற்கை வியப்பான பல அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றுள் சிலவற்றைக் குறித்து தெரிந்து கொள்வோமா!

அல்லி

அல்லி இலைகளின் மேல் நீர் தேங்குவதில்லை / ஒட்டுவதில்லை, ஏனெனில் அல்லி இலைகளின் மேற்பரப்பில் மெழுகுப்படலம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இலைக்காம்பு பகுதியில் வெட்டுப்பட்ட பள்ளம் போன்ற அமைப்பும் காணப்படும். இந்த அமைப்பும் மெழுகுப்படலமுமே நீரானது இலையின் மேல் தேங்காமல் இருப்பதன் காரணம் ஆகும்.

அல்லி இலை

மண்ணிற்கு / தரைக்கு அடியில் காணப்படும் கொட்டைகள்

பொதுவாக, கொட்டைகள் / காய்கள் தாவரத்தின் தண்டுப்பகுதியில் காணப்படும். ஆனால், வேர்க்கடலைத் தாவரத்தில் கொட்டைகள் மண்ணிற்கு அடியில் காணப்படும்.

கொட்டைகளை விதைகள் என்றும் கூறலாம்.

வேர்க்கடலை

குறிஞ்சி

குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சி ஒரு புதர் வகைச்செடி. இது தமிழ்நாட்டில் ஊட்டியில் உள்ள நீலகிரி மலையில் காணப்படுகிறது.

நீலக்குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும்.

குறிஞ்சி மலர்

இம்மலர்கள் ஊதா நீல வண்ணத்தில் காணப்படும். எனவே, இந்த மலைப்பகுதி நீலகிரி எனப் பெயர் பெற்றது.

தொட்டாற் சிணுங்கி

இந்தத் தாவரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இது பெரும்பாலான இடங்களில் காணப்படும் சிறு செடி வகை. இத்தாவரத்தின் இலைகளை நாம் தொட்டால் அவை உடனடியாக மூடிக்கொள்ளும். எனவேதான் இதனைத் தொட்டாற் சிணுங்கி தாவரம் என அழைக்கிறோம். ஆனாலும் மூடிய இலைகள் சில நிமிடங்களில் விரிந்து விடும்.

தொட்டாற் சிணுங்கி

எருக்கு

எருக்கு புதர்ச்செடி வகையைச் சார்ந்தது. இத்தாவரம் மெழுகுப்பூச்சு கொண்ட கொத்தான மலர்களைக் கொண்டிருக்கும். இதன் மலர்கள் வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் கிரீடம் போன்று காணப்படும். எனவே, இது கிரீட மலர் எனப்படுகிறது.

எருக்கு மலர்

எருக்கு இலையை வரைந்து வண்ணம் தீட்டுக.

எருக்கு இலை வரையும் பயிற்சி

மலர்களின் நிறமும் மணமும்

மலர்கள் அழகான வண்ணமும் நறுமணமும் கொண்டவை. இவை பூச்சிகளைத் தம்பால் ஈர்க்கின்றன. பூச்சிகள் மலர்களின் நண்பர்கள். மலர்களில் தேன் சுரப்பிகள் காணப்படுகின்றன. இதிலுள்ள தேனை உறிஞ்சவே பூச்சிகளும் பறவைகளும் மலர்களை நாடி வருகின்றன.

பூக்களும் பூச்சிகளும்

இரவில் மலரும் பெரும்பான்மையான மலர்கள் வெள்ளை நிறத்திலும், அதிக மணத்துடனும் / வாசனையுடனும் காணப்படும்.

இரவில் மலரும் மலர்கள்

பகலில் மலரும் மலர்கள் கண்ணைக் கவரும் பல வண்ணங்களிலும் குறைவான நறுமணத்துடனும் காணப்படும்.

பகலில் மலரும் மலர்கள்

புள்ளிகளை இணைத்து படத்திற்கு வண்ணம் தீட்டுக.

படத்திற்கு வண்ணம் தீட்டும் பயிற்சி

வியத்தகு இயற்கை – விலங்குகள்

பச்சோந்தி

படத்தில் காணும் விலங்கைப் பார்த்திருக்கிறீர்களா? இதுதான் பச்சோந்தி. இது பல்லி இனத்தைச் சார்ந்தது. பச்சோந்தி தான் இருக்கும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றாற்போல் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இந்த நிறம் மாறும் தன்மையால் இது எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.

பச்சோந்தி

பல்லி

பல்லி மேற்கூரையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பல்லிகளின் கால் விரல்களில் காணப்படும் விரல் பட்டைகளின் உதவியால் அவை சுவரில் / கூரையில் இருந்து கீழே விழாமல் ஒட்டிக் கொண்டுள்ளன. பல்லியின் வால் துண்டிக்கப்பட்டால் மீண்டும் ஒன்று அல்லது இரண்டு (ஓரிரு) மாதத்திற்குள் வளரக்கூடிய சிறப்புத்தன்மை உடையது.

பல்லி

சிலந்தி

பூச்சிகளுக்கு ஆறு கால்கள் மட்டும்தான் உண்டு என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சிலந்தி பூச்சி வகையைச் சார்ந்தது அன்று. ஏனெனில் இதற்கு எட்டு கால்கள் உள்ளன. சிலந்தி நூல் போன்ற இழையை (சிலந்தி பட்டு) உருவாக்கி, சிலந்தி வலையைப் பின்னுகிறது. இந்த இழைகள் மிகவும் வலிமையானவை. மேலும் ஒட்டும் தன்மை உடையவை. இந்த வலையின் உதவியுடன் பூச்சிகளைப் பிடித்து இரையாக்கிக் கொள்கிறது.

சிலந்தி

நாய்

நாய் நம்மை விட அதிக மோப்ப சக்தி / நுகரும் திறன் கொண்டது. இவை வெகு தொலைவில் கேட்கும் மிக நுண்ணிய ஒலிகளையும் உணரும் தன்மை கொண்டவை. காவல் துறையில் திருடர்களைக் கண்டுபிடிக்க நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை நாய்கள் "மோப்ப நாய்கள்" எனப்படுகின்றன. இவை நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்கிய மனிதர்களைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகின்றன.

நாய்

எலி

எலி வீடு மற்றும் வயல்களில் வாழும் சிறிய விலங்கு. இது ஒட்டகத்தை விட அதிக நாள் நீர் இல்லாமல் வாழக் கூடியது. கடினத்தன்மை உடைய மரக்கட்டைகளையும் தன்னுடைய பற்களால் கடித்துவிடும். எலியின் சில பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். அவை பெரிதாக வளர்ந்து விடாமல் இருக்க எலிகள் எப்பொழுதும் பற்களை கொறித்துக் கொண்டேயிருக்கும்.

எலி

நத்தை

நத்தையின் தலைப்பகுதியில் இரண்டு இணை உணர் நீட்சிகள் காணப்படும். அவற்றுள் ஒன்று நீண்டதாகவும், மற்றொன்று குட்டையாகவும் இருக்கும். நீண்ட உணர்நீட்சியில் கண்கள் காணப்படும். நாம் நத்தையைத் தொட்டால் ஆமையைப்போல தன் உடல் பகுதியை ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளும்.

நத்தை

பல்வேறு வகையான விலங்குகளைக் கண்டுபிடித்து எண்ணி எழுதுக.

விலங்குகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சி

2nd EVS Environmental Science: Day and Night | Term 3 Unit 4 | Questions and Answers

பகலும் இரவும் | பருவம்-3 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

மதிப்பீடு

1. படங்களின் பெயரை எழுதுக. (நிலா, பூமி, நட்சத்திரங்கள், சூரியன்)

படங்களின் பெயரை எழுதுக

2. இரவில் உலவும் விலங்குகளின் பெயரை எழுதுக.

(பசு, ஓநாய், மான், கரப்பான்பூச்சி, குரங்கு, மின்மினிப் பூச்சி, முயல், அணில், எலி)

இரவில் உலவும் விலங்குகள்

3. பின்வரும் கூற்று சரி எனில் 'ச' எனவும் தவறு எனில் 'த' எனவும் குறிப்பிடுக.

1. சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. (ச)

2. நிலவின் வடிவம் ஒவ்வொரு இரவும் மாறுபடுகிறது. (த)

3. நட்சத்திரக் குழுக்கள் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகின்றன. (ச)

4. மல்லிகை பகல் நேரத்தில் மலரும். (த)

5. நீங்கள் கிழக்கு நோக்கி நிற்கும் போது உங்களுக்கு வலப்பக்கம் இருப்பது மேற்கு. (த)

4. பின்வரும் படத்தை உற்றுநோக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக.

(மரம், பூக்கள், குளம், நாய்)

திசைகளை கண்டறிதல்

அ. தோட்டத்தின் தெற்குத் திசையில் காணப்படுவது குளம்.

ஆ. தோட்டத்தின் வடக்குத் திசையில் காணப்படுவது மரம்.

இ. தோட்டத்தின் கிழக்குத் திசையில் காணப்படுவது பூக்கள்.

ஈ. தோட்டத்தின் மேற்குத் திசையில் காணப்படுவது நாய்.

5. இரவில் பூக்கும் மலர்களை அடையாளம் கண்டு (✓) குறியிடுக.

இரவில் பூக்கும் மலர்கள்

தன் மதிப்பீடு

பகல், இரவு நேரங்களில் என்னால் வானத்தை உற்றுநோக்கி அறிய முடியும்.

என்னால் இரவில் செயலாற்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை அடையாளம் காண முடியும்.

என்னால் திசைகளை அடையாளம் காண முடியும்.

2nd EVS Term 3 Unit 4 Day and Night | Samacheer Kalvi Guide

பருவம்-3 அலகு 4: பகலும் இரவும்

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் | 2nd EVS Environmental Science: Term 3 Unit 4: Day and Night

நீங்கள் கற்க இருப்பவை

* பகல் மற்றும் இரவு நேர வானம்

* பகல், இரவு கால ஒழுங்குமுறை

* திசைகள்

படத்தை உற்றுநோக்குங்கள். அதில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

பகல் மற்றும் இரவு காட்சி

பகல் வானம்

சூரியன்

சூரியன் நமக்கு ஒளியையும், வெப்பத்தையும் கொடுக்கிறது. இது தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூரியன் நாம் வாழும் பூமியைவிட மிகப் பெரியது. ஆனால், அது பூமியில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது. சூரியன் இல்லையெனில், பூமியில் உயிர்கள் வாழ முடியாது.

உங்களுக்குத் தெரியுமா?

சூரிய ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள் ஆகிறது.

நிழல்

ஒரு பொருள் தன் வழியே ஒளியைக் கடக்க அனுமதிக்காதபோது, அங்கு ஓர் இருட்டான பகுதி உருவாகிறது. இது 'நிழல்' என்று அழைக்கப்படுகிறது.

சூரிய ஒளி உனது பின் பகுதியில் விழுமாறு நின்றுகொள். இப்போது உனக்கு முன்னால் தரையைப் பார். நீ பார்ப்பது தான் உனது நிழல். உனது நிழல் உன்னுடன் நகர்கிறதா என்பதைக் கவனி.

நிழல் உருவாதல்

* உன்னைச் சுற்றி உள்ள பொருள்களில் எந்தெந்தப் பொருள்களின் நிழல்களை நீ பார்க்கிறாய் என்பதைப் பற்றி கலந்துரையாடுக.

உனது நிழலின் அளவு மாறுபடுவதைக் கவனித்திருக்கிறாயா? காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் உனது நிழலை உற்றுநோக்கி அதனை அட்டவணைப்படுத்துக.

நிழல் அளவு அட்டவணை

இரவு வானம்

கலந்துரையாடுவோமா!

நாம் இருளில் பொருள்களைப் பார்க்க முடியுமா? அவற்றைப் பார்ப்பதற்கு நமக்கு ஒளி (வெளிச்சம்) தேவைப்படுகிறது. கீழ்க்காணும் படங்களை உற்றுநோக்கு. இரவு வானம் எவ்வாறு பகல் வானத்திலிருந்து வேறுபடுகிறது?

பகல் மற்றும் இரவு வானம் வேறுபாடு

நிலா

நாம் இரவு வானத்தில் நிலா, நட்சத்திரங்கள் மற்றும் மேகங்களைப் பார்க்கலாம். நிலா தானாக ஒளிர்வதில்லை. அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ஒளிர்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இரவு வானத்தில் நிலா

நிலவின் பல்வேறு நிலைகள்

கலந்துரையாடுவோமா!

தொடர்ந்து 15 நாள்கள் நிலவை உற்றுநோக்கி, நிலா எல்லா இரவிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறதா என்பதைக் குறித்துக் கலந்துரையாடுக.

நிலவின் நிலைகள்

நிலாவின் வடிவம் ஒவ்வொரு இரவும் வேறுபடுவதுபோல காணப்படும். நிலா தனது முழுமையான வடிவத்துடன் காணப்படுவதை முழு நிலவு (பௌர்ணமி) என்றோம். இரவில் நிலவை காணமுடியாத (வானம் தெளிவாக காணப்படும் பொழுதும்) நாளை அமாவாசை என்கிறோம்.

நிலவின் நிலையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. (எ.கா.) ஈகைத் திருநாள், மகாளய அமாவாசை.

உங்களுக்குத் தெரியுமா?

நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

நட்சத்திரங்கள்

வானத்தில் எண்ணமுடியாத அளவுக்கு நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. சூரியன், நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம் ஆகும். நட்சத்திரங்கள் பகலிலும் மின்னுகின்றன. ஆனால், சூரிய ஒளி நட்சத்திரங்களின் ஒளியைவிட மிகவும் பிரகாசமாக இருப்பதால் பகலில் நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை. இரவு வானில் நட்சத்திரக் குழுக்கள் சில குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவற்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

நட்சத்திரக் குழுக்கள்

உங்களுக்குத் தெரியுமா?

நட்சத்திரக் குழுக்களின் இருப்பிடத்தை வைத்தே நம் முன்னோர்கள் பயிரிடும் காலம், அறுவடைக் காலத்தைக் கண்டறிவர். மேலும், பயணத்தின் போதும் திசைக்காட்டியாகவும் இவற்றைப் பயன்படுத்தினர்.

பொருத்துக

அ) சூரியன் - என்னுடன் பயணம் செய்யும் இருட்டான பகுதி

ஆ) நட்சத்திரங்கள் - தானாக ஒளிர்வதில்லை

இ) நிலா - குறிப்பிட்ட அமைப்பை உருவாக்கும்

ஈ) நிழல் - தாவர வளர்ச்சிக்கு உதவும்

விடையைக் காண இங்கே சொடுக்கவும்

அ) சூரியன் – தாவர வளர்ச்சிக்கு உதவும்

ஆ) நட்சத்திரங்கள் - குறிப்பிட்ட அமைப்பை உருவாக்கும்

இ) நிலா - தானாக ஒளிர்வதில்லை

ஈ) நிழல் - என்னுடன் பயணம் செய்யும் இருட்டான பகுதி

பகல், இரவு கால ஒழுங்குமுறை

பகலும், இரவும் மாறி மாறி வருகின்றன. பெரும்பாலான விலங்குகளும், தாவரங்களும் பகலில் செயல்பட்டும் இரவில் தூங்கவும் செய்கின்றன. சில தாவரங்கள், மாலை நேரங்களில் இலைகளை மூடிக் கொள்கின்றன. எ.கா. தூங்குமூஞ்சி மரம். இருப்பினும் சில விலங்குகள் இரவில் விழிப்புடன் செயல்படுகின்றன. வௌவால், ஆந்தை, காட்டுப்பூனை, எலி, ஓநாய், கரப்பான்பூச்சி மற்றும் மின்மினிப் பூச்சி போன்றவை இரவில் செயல்படும் சில விலங்குகளாகும்.

இரவில் செயல்படும் விலங்குகள்

சில விலங்குகள் இரவில் செயல்படுவதற்கு காரணங்கள்:

* இரையைத் தேடுதல்

* பகலில் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளல்

* பகல் நேர வெப்பத்தைத் தவிர்த்தல்

இவை பெற்றிருக்கும் சிறப்புத் தகவமைப்புகள்:

* பெரிய கண்கள் - ஆந்தை, பூனை

* மோப்ப சக்தி - எலி, நாய்

* கூர்மையான கேட்டல் திறன் – வௌவால்

உங்களுக்குத் தெரியுமா?

* வௌவால் ஒலி அலைகளைப் பயன்படுத்தி பறக்கவும் வேட்டையாடவும் செய்கிறது.

* ஆந்தை தனது தலையை கிட்டத்தட்ட முக்கால் பங்கு அளவிற்கு சுற்றி தனக்குப் பின்னால் இருப்பவற்றைக் காண்கிறது.

ஆந்தை

பெரும்பாலான பூக்கள் காலையில் மலர்கின்றன. இருப்பினும், சில மலர்கள் இரவில் மலர்கின்றன. எ.கா. மல்லிகை, அல்லி, சம்பங்கி, சப்பாத்திக்கள்ளி, ஊமத்தம்பூ. மலர்களில் பெரும்பாலானவை நறுமணமிக்கதாகவே உள்ளன. இவற்றுள் சில கண்களைக் கவரும் வண்ணங்களில் காணப்பட்டாலும், பெரும்பாலானவை வெண்மையாகவே காணப்படுகின்றன.

இரவில் மலரும் பூக்கள்

உங்களுக்குத் தெரியுமா?

நிஷகாந்தி மலரானது இரவில் மலரும் மலர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.

நிஷகாந்தி மலர்

இரவில் செயல்படும் விலங்குகளைக் கண்டறிந்து (✓) குறியிடுக.

இரவில் செயல்படும் விலங்குகள் அடையாளம் காணுதல்

திசைகள்

பொருள்களின் அமைவிடத்தை விளக்கக் குறிப்பிட்ட ஒன்றை அடிப்படையாகக் கொண்டு முன், பின், வலது மற்றும் இடது பக்கம் என பயன்படுத்துகிறோம். இடங்களும் பொருள்களும் உள்ள இடத்தை விளக்க சூரியனின் அமைவு நிலையின் அடிப்படையில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எனக்குறிப்பிடுகிறோம். இவையே திசைகள் எனப்படும். திசைகள் நம்மைச் செல்ல வேண்டிய இடத்திற்கு மாறாமல் சென்றடைய உதவுகின்றன.

திசைகள்

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக நமக்குத் தோன்றுகிறது. காலை வேளையில் சூரியனை நோக்கி நின்று கொள் (கிழக்கு). உனக்குப் பின்னால் இருப்பது மேற்கு, உனக்கு வலப்பக்கம் இருப்பது தெற்கு, உனக்கு இடப்பக்கம் இருப்பது வடக்கு திசையாகும்.

கீழ்க்காணும் படத்தை உற்றுநோக்குங்கள். நடுவில் இருப்பது மீரா. அவளுக்கு தெற்கில் இருப்பது பூந்தொட்டிகள், வடக்கில் இருப்பது பாறைகள், கிழக்கில் இருப்பது மலர் வண்டி, மேற்கில் இருப்பது மரக்கட்டை.

திசைகள் கண்டறிதல்

உனது பள்ளியில் சூரியன் தோன்றும் கிழக்கு திசையை அடையாளம் காண ஆசிரியரின் உதவியைக் கேள். பிறகு பின்வருபவை எந்தெந்த திசைகளில் உள்ளன எனக் காண்க. நீர்த்தேக்கத் தொட்டி, கொடிமரம், விளையாட்டுத் திடல், கழிப்பறை, சமையலறை, வாயிற் கதவு மற்றும் குடிநீர்க் குழாய். உனது விடையை அட்டவணைப்படுத்துக.

திசைகள் அட்டவணை

Tags: Term 3 Chapter 4 | 2nd EVS Environmental Science பருவம்-3 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல். 2nd EVS Environmental Science : Term 3 Unit 4 : Day sand Night : Day sand Night Term 3 Chapter 4 | 2nd EVS Environmental Science in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 4 : பகலும் இரவும் : பகலும் இரவும் - பருவம்-3 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

2nd EVS Term 3 Unit 3 Shakthi's Journey | Samacheer Kalvi Book Back Answers

2nd EVS Environmental Science : Term 3 Unit 3 : Shakthi's Journey
சக்தியின் பயணம்

மதிப்பீடு

1. நான் யார்? சரியான விடைக்கு (✓) குறியிடுக.

அ. நான் எரிபொருள் இல்லாமல் இயங்குவேன். (மகிழுந்து / மிதிவண்டி✓)

ஆ. நான் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வேன். (பயணிகள் தொடர்வண்டி✓ / அதிவிரைவு தொடர்வண்டி)

இ. நான் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை ஏற்றிக்கொண்டு வானில் பறப்பேன். (வானூர்தி / உலங்கு ஊர்தி✓)

ஈ. நான் ஆறு, ஏரி இரண்டிலும் பயணிக்க உதவுவேன். (படகு✓ / கப்பல்)

2. சொற்களோடு தொடர்புடைய படத்தை இணைக்க.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களையும் படங்களையும் பொருத்திப் பார்க்கவும். உங்கள் விடையைச் சரிபார்க்க, 'விடையைக் காண்க' என்பதைக் கிளிக் செய்யவும்.

Matching exercise solved
விடையைக் காண்க Matching exercise solved

3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ. மீன் பிடிக்க மீனவர் பயன்படுத்துவது _____________ .

(i) கட்டுமரம்

(ii) பேருந்து

(iii) தொடர்வண்டி

விடை : (i) கட்டுமரம்

ஆ. மக்களைக் காப்பாற்ற இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவது _____________.

(i) ஈருருளி

(ii) வானூர்தி

(iii) உலங்கு ஊர்தி

விடை : (iii) உலங்கு ஊர்தி

இ. மின்சார ரயில்கள் _____________ .

(i) புகையை வெளிவிடுவதில்லை

(ii) புகையை வெளிவிடும்

(iii) டீசலில் ஓடும்

விடை : (i) புகையை வெளிவிடுவதில்லை

4. போக்குவரத்து வகைகளின் அடிப்படையில் சரியற்ற இணையைத் தேர்ந்தெடுத்து (✓) குறியிடுக.

அ. கப்பல், பாய்மரப் படகு

ஆ. உலங்கு ஊர்தி, வானூர்தி

இ. மிதிவண்டி, சரக்கு உந்து

ஈ. மகிழுந்து, பரிசல் ✓

5. சாலையில் செய்யக்கூடாத இரண்டு செயல்களை எழுதுக.

அ. சாலையின் குறுக்கே ஓடாதீர்கள்

ஆ. சாலையில் தனியாக செல்ல வேண்டாம். எப்போதும் ஒரு பெரியவருடன் செல்லுங்கள்.

6. எரிபொருளைப் பயன்படுத்தி நகரும் வாகனங்களுக்கு (✓) குறியிடுக.

Identifying vehicles that use fuel

7. படங்களை உற்றுநோக்கி, சிந்தித்து சரியான செயல்களுக்கு (✓) குறியிடுக.

Identifying correct and incorrect road safety actions

தன் மதிப்பீடு

* என்னால் பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்களை அடையாளம் காண முடியும்.

* நான் சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவேன்.

2nd EVS Term 3 Unit 3: Shakthi's Journey | Samacheer Kalvi Book Back Answers

பருவம்-3 அலகு 3 | சக்தியின் பயணம்

2nd EVS Environmental Science : Term 3 Unit 3 : Shakthi's Journey

சக்தியின் பயணம் - தலைப்பு படம்

நீங்கள் கற்க இருப்பவை

* போக்குவரத்தின் வகைகள்

* சாலைப் பாதுகாப்பு

சாலை வழிப் போக்குவரத்து

சக்தி, அவனுடைய அப்பா, அம்மா, சகோதரிகள் கயல், கவிதா ஆகியோருடன் திருச்சியில் வசித்து வருகிறான். இவர்கள் விடுமுறையில் சென்னைக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டனர். அவர்கள் தொடர்வண்டியில் பயணிக்க தொடர்வண்டி நிலையம் செல்ல வேண்டும்.

சக்தி: நாம் தொடர்வண்டி நிலையத்திற்கு எவ்வாறு செல்வது?

பல்வேறு சாலை போக்குவரத்து வாகனங்கள்

பல்வேறு சாலை போக்குவரத்து வாகனங்கள்

பேருந்து

எரிபொருள் தேவை. 50க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம்.

மகிழுந்து

எரிபொருள் தேவை. ஐந்து பேர் வரை பயணிக்கலாம்.

மூவுருளி (தானி)

எரிபொருள் தேவை. இருவர் (அல்லது) மூவர் பயணிக்கலாம்.

சரக்கு உந்து

பொருள்களை ஏற்றிச்செல்லும்.

அவசர ஊர்தி

உடனடி சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம்

தீயை அணைக்கப் பயன்படும்.

ஈருருளி

இருவர் பயணிக்கலாம்.

மாட்டு வண்டி

இயங்க எரிபொருள் தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்தது

மிதிவண்டி

எளிய போக்குவரத்து வாகனம். மிதிவண்டி ஓட்டுவது உடலுக்கு நல்லது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது

* இவற்றுள் எந்த வாகனத்தை சக்தியின் குடும்பத்தினர் தேர்ந்தெடுப்பர்? கலந்துரையாடி உங்களின் பதிலை எழுதுக.

மூவுருளி (தானி)

சிந்தித்துக் கலந்துரையாடுவோமா!

"வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது" என்பது நமக்குத் தெரியும். புகையை வெளியேற்றாத சில வாகனங்களின் பெயர்களை உங்களால் கூற முடியுமா?

விடை : மாட்டு வண்டி, மிதிவண்டி

மாட்டு வண்டி மற்றும் மிதிவண்டி

மெதுவாக செல்லும் வாகனத்திற்கு (✔) குறியிடுக. அது ஏன் மெதுவாக செல்கிறது எனக் கலந்துரையாடுக.

வாகனங்களை ஒப்பிடுதல் - மிதிவண்டிக்கு சரி குறி இடப்பட்டுள்ளது

மிதிவண்டி நமது உடல் சக்தியால் செயல்படுகிறது. ஆனால் மீதமுள்ள இரண்டு இயந்திரம் மூலம் செயல்படுகிறது.

தொடர்வண்டி போக்குவரத்து

சக்தியும் அவன் குடும்பத்தினரும் தொடர்வண்டி நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கே உணவு, பத்திரிக்கை விற்பவர்கள், கொடி அசைக்கும் நிலைய அதிகாரி, சுமை தூக்கும் தொழிலாளிகள், பல்வகைத் தொடர்வண்டிகள் போன்றவற்றைப் பார்த்தனர். இவற்றைக் கண்ட கயல், "இந்த இடம் எவ்வளவு பரபரப்பாக உள்ளது" என்றாள்.

தொடர்வண்டி நிலையம்

அதற்கு அவளின் அம்மா "ஆமாம், தொடர்வண்டி, குறைந்த நேரத்தில் அதிகப் பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஏற்றிச் செல்ல உதவுகிறது" என்றார்.

தொடர்வண்டியின் வகைகள்

மக்களை ஏற்றிச் செல்லும் தொடர்வண்டிகள்

பயணிகள் தொடர்வண்டி - அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். நகரங்களுக்குள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணம் செய்யப் பயன்படும்.

பயணிகள் தொடர்வண்டி

பெருநகரத் (மெட்ரோ) தொடர்வண்டி - நகரங்களுக்குள் பயணிக்க பயன்படும்.

பெருநகரத் தொடர்வண்டி

அதிவிரைவு தொடர்வண்டி - குறிப்பிட்ட நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

அதிவிரைவு தொடர்வண்டி

சரக்கு ஏற்றிச் செல்லும் தொடர்வண்டிகள்

சரக்குத் தொடர்வண்டி

சரக்குத் தொடர்வண்டிகள்

சில தொடர்வண்டிகள் இயங்குவதற்கு நிலக்கரி அல்லது டீசல் போன்ற எரிபொருள் தேவைப்படுகிறது. எனவே இவ்வகைத் தொடர்வண்டிகள் புகையை வெளிவிடுகின்றன. மின் தொடர்வண்டிகள் (மின்சார ரயில்) புகையை வெளிவிடுவதில்லை. தொடர்வண்டிகள் தண்டவாளத்தின்(இருப்புப் பாதையின்) மேல் செல்கின்றன.

சக்தியும் அவன் குடும்பத்தினரும் தொடர்வண்டியில் ஏறி சென்னையை வந்தடைந்தனர்.

சக்தியும் அவன் குடும்பத்தினரும் சென்னைக்கு வர எவ்வகைத் தொடர்வண்டியைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை உங்களால் கண்டறிய முடியுமா?

அதிவிரைவு தொடர்வண்டி

கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ. பயணிகள் தொடர்வண்டி அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.

ஆ. சரக்குத் தொடர்வண்டி சரக்குகளை ஏற்றிச் செல்லும்.

இ. பயணிகள், பெருநகரத் (மெட்ரோ) தொடர்வண்டி, அதிவிரைவு தொடர்வண்டி தொடர்வண்டிகள் பயணிகளை ஏற்றிச் செல்லும்.

நீர் வழி போக்குவரத்து

சக்தியும் அவன் குடும்பத்தினரும் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்த்தனர். அவர்கள் துறைமுகத்தையும் சென்று பார்வையிட்டனர்.

சக்தி: இங்கு அதிக படகுகள் உள்ளன.

துறைமுகம்

அம்மா: இவற்றுள் சிறியதாக இருப்பவை படகுகள் மற்றும் பெரியதாக இருப்பவை கப்பல்கள். கப்பல் மூலம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அதிக அளவிலான பயணிகளையும் சரக்குப் பொருள்களையும் ஏற்றிச் செல்லலாம்.

சிந்தித்துக் கலந்துரையாடுவோமா!

நீரில் செல்லும் வாகனங்களுக்குச் சக்கரங்கள் இருக்கின்றனவா? அவை எவ்வாறு நகர்கின்றன?

நீர்வழி வாகனங்களின் வகைகள்

நீர்வழி வாகனங்களின் வகைகள்

கட்டுமரம்
துடுப்புகளை பயன்படுத்தி நகரும். மீன்பிடிக்க உதவுகிறது.

விசைப்படகு
எரிபொருளை கொண்டு நகரும். மீன்பிடிக்கவும், மகிழ் உலாவுக்கும் பயன்படுகிறது.

பாய்மரப் படகு
பாய்மரங்களால் நகரும். பயணத்திற்கும் போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கப்பல்
எரிபொருளால் நகரும். நீண்ட தூரத்திற்கு மக்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்ல உதவுகிறது.

ஏரி மற்றும் ஆறுகளில் சிறிய தூரத்தைக் கடக்கப் பரிசல் பயன்படுகிறது. இதில் ஐந்து முதல் ஆறு நபர்கள் வரை பயணிக்கலாம்.

பரிசல்

குழந்தைகள் கடற்கரையில் விளையாடினர்.

கவிதா: இந்தப் பயணம் எவ்வளவு இனிமையாக உள்ளது!

வாகனங்களின் பெயர்களை எழுதுக.
பல்வேறு நீர்வழி வாகனங்கள்

கப்பல், பாய்மரப் படகு, வரிசைப் படகு

வான்வழிப் போக்குவரத்து

விடுமுறை நாள்கள் முடியவிருப்பதால், சக்தியின் குடும்பம் திருச்சிக்குத் திரும்பச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். சக்தி, கவிதா, கயல் மூவரும் விமானத்தைக் கண்டு மிகவும் வியந்தனர்.

கயல்: விமானங்கள் தரையில் இறங்குவதையும், மேலே ஏறுவதையும் பாருங்களேன்! அப்பா, நானும் ஒரு விமானியாக விரும்புகிறேன்.

அப்பா: சரிம்மா, உன்னால் முடியும். விமானங்கள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன என்பதைக் கவனி. இவையே மிக விரைவாகச் செல்லும் போக்குவரத்து.

சக்தி: விமானத்திற்குக் கூட எரிபொருள் தேவையா அப்பா?

அப்பா: ஆமாம். இதற்கும் ஒரு சிறப்பு வகை எரிபொருள் தேவை.

வானூர்தியின் வகைகள்

இது ஓர் உலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்). இதில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்யலாம். இது புயல் மற்றும் வெள்ளத்தின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பாதிக்கப்பட்டோருக்கு பொருள்களை விநியோகிக்கவும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.

உலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்)

இது ஒரு வானூர்தி. மக்கள் ஒரு நகரம் அல்லது நாட்டிலிருந்து மற்றொரு நகரம் / நாட்டிற்குச் செல்ல இதனைப் பயன்படுத்துகின்றனர். இதில் பொருள்களையும் ஏற்றிச் செல்லலாம்.

வானூர்தி

இவை வெப்பக் காற்று பலூன்கள். நாம் இவற்றின் மூலம் காலநிலையை அறிவதுடன் விளம்பரத்திற்கும் விளையாட்டிற்கும் பயன்படுத்துகிறோம்.

வெப்பக் காற்று பலூன்கள்

சிந்தித்துக் கலந்துரையாடுவோமா!

எப்பொழுதாவது வானில் இதுபோன்ற வெள்ளை நிறக் கோடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவை என்ன?

வானில் வெள்ளை நிறக் கோடுகள்

ஆம். ராக்கெட் ஏவுதலின் தீ மற்றும் புகை

வானில் செல்லும் வாகனங்களுக்கு (✓) குறியிடுக.
வான்வழி வாகனங்கள் சரிபார்க்கவும்

சாலைப் பாதுகாப்பு

இந்தக் குறியீடுகளை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

இது குறித்து உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுங்கள்.

நடப்பதற்கு எப்பொழுதும் நடைபாதையைப் பயன்படுத்த வேண்டும்.

நடைபாதை இல்லாத சாலைகளில், சாலை உங்களுக்கு வலப்பக்கத்தில் இருக்குமாறு நடக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு விதிகள்

மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும்.

தலைக்கவசம் அணிதல்

மகிழுந்தில் பயணம் செய்யும்போது இருக்கைப் பட்டை (சீட் பெல்ட்) அணிய வேண்டும்.

இருக்கைப் பட்டை அணிதல்

சாலையின் குறுக்கே ஓடக் கூடாது.

சாலையில் ஓடாதீர்

சாலையில் தனியாகச் செல்லாமல் பெரியவர்கள் துணையோடு செல்ல வேண்டும்.

பெரியவர்களுடன் சாலையைக் கடத்தல்

சாலைகளைக் கடப்பதற்கு மேம்பாலங்களையோ அல்லது சுரங்கப்பாதை வழிகளையோ பயன்படுத்தலாம். இவை இல்லையென்றால் பாதசாரிகள் கடக்கும் கோட்டில் (வரிக்குதிரைக் கோட்டில்) கடக்க வேண்டும்.

வரிக்குதிரைக் கோடு மற்றும் சுரங்கப்பாதை

சாலைக் குறியீட்டில் உள்ள மனிதனின் உருவம் பச்சை நிறத்துக்கு மாறியவுடன் சாலையைக் கடக்க வேண்டும்.

பாதசாரிகளுக்கான சிக்னல்

நில்
முன்னதாகப் புறப்படு

மெதுவாகச் செல்
மெதுவாகச் செல்

செல்
பாதுகாப்பாகச் சேர்

போக்குவரத்து விளக்கு

சாலையும் இருப்புப் பாதையும் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தை இருப்புப்பாதைச் சந்திக் கடவு (Level Crossing) என்கிறோம். இவ்விடத்தில் கதவுகள் மூடப்பட்டிருக்கும்போது கடக்க முயற்சிக்கக் கூடாது.

இருப்புப்பாதைச் சந்திக் கடவு

சாலைக் குறியீடுகள்

பல்வேறு சாலைக் குறியீடுகள்

பள்ளிப் பகுதி (மெதுவாக செல்லவும்)

ஆளில்லா தொடர்வண்டி கடக்கும் இடம் (கவனமுடன் கடக்கவும்)

பாதசாரிகள் கடக்குமிடம் (இங்கு மட்டும் சாலையைக் கடக்கவும்)

பேருந்து நிறுத்தம் (பேருந்துகள் இங்கு நின்று செல்லும்)

இருப்புப்பாதைச் சந்திக் கடவு (கடப்பதற்கு முன் இருபுறமும் பார்க்கவும்)

ஒலி எழுப்பாதே

வாகனங்களை இங்கே நிறுத்தாதீர்

மருத்துவமனைப் பகுதி (ஒலி எழுப்பாதே)

'U' வளைவு (இங்கு திரும்பவும்)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிப் பகுதி குறியீடு இந்த சாலைக் குறியீடு ------------------------- அருகில் இருப்பதைக் குறிக்கிறது.

அ. மருத்துவமனை

ஆ. பள்ளி

இ. பேருந்து நிறுத்தம்

விடை : ஆ. பள்ளி


2. இருப்புப்பாதைச் சந்திக் கடவு குறியீடு இந்த சாலைக் குறியீடு குறிப்பிடுவது -------------------------

அ. பேருந்து நிறுத்தம்

ஆ. வாகனங்கள் நிறுத்தும் இடம்

இ. இருப்புப்பாதைச் சந்திக் கடவு

விடை : இ. இருப்புப்பாதைச் சந்திக் கடவு