2nd EVS Term 3 Unit 3 Shakthi's Journey | Samacheer Kalvi Book Back Answers

2nd EVS Term 3 Unit 3 Shakthi's Journey | Samacheer Kalvi Book Back Answers

2nd EVS Environmental Science : Term 3 Unit 3 : Shakthi's Journey
சக்தியின் பயணம்

மதிப்பீடு

1. நான் யார்? சரியான விடைக்கு (✓) குறியிடுக.

அ. நான் எரிபொருள் இல்லாமல் இயங்குவேன். (மகிழுந்து / மிதிவண்டி✓)

ஆ. நான் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வேன். (பயணிகள் தொடர்வண்டி✓ / அதிவிரைவு தொடர்வண்டி)

இ. நான் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை ஏற்றிக்கொண்டு வானில் பறப்பேன். (வானூர்தி / உலங்கு ஊர்தி✓)

ஈ. நான் ஆறு, ஏரி இரண்டிலும் பயணிக்க உதவுவேன். (படகு✓ / கப்பல்)

2. சொற்களோடு தொடர்புடைய படத்தை இணைக்க.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களையும் படங்களையும் பொருத்திப் பார்க்கவும். உங்கள் விடையைச் சரிபார்க்க, 'விடையைக் காண்க' என்பதைக் கிளிக் செய்யவும்.

Matching exercise solved
விடையைக் காண்க Matching exercise solved

3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ. மீன் பிடிக்க மீனவர் பயன்படுத்துவது _____________ .

(i) கட்டுமரம்

(ii) பேருந்து

(iii) தொடர்வண்டி

விடை : (i) கட்டுமரம்

ஆ. மக்களைக் காப்பாற்ற இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவது _____________.

(i) ஈருருளி

(ii) வானூர்தி

(iii) உலங்கு ஊர்தி

விடை : (iii) உலங்கு ஊர்தி

இ. மின்சார ரயில்கள் _____________ .

(i) புகையை வெளிவிடுவதில்லை

(ii) புகையை வெளிவிடும்

(iii) டீசலில் ஓடும்

விடை : (i) புகையை வெளிவிடுவதில்லை

4. போக்குவரத்து வகைகளின் அடிப்படையில் சரியற்ற இணையைத் தேர்ந்தெடுத்து (✓) குறியிடுக.

அ. கப்பல், பாய்மரப் படகு

ஆ. உலங்கு ஊர்தி, வானூர்தி

இ. மிதிவண்டி, சரக்கு உந்து

ஈ. மகிழுந்து, பரிசல் ✓

5. சாலையில் செய்யக்கூடாத இரண்டு செயல்களை எழுதுக.

அ. சாலையின் குறுக்கே ஓடாதீர்கள்

ஆ. சாலையில் தனியாக செல்ல வேண்டாம். எப்போதும் ஒரு பெரியவருடன் செல்லுங்கள்.

6. எரிபொருளைப் பயன்படுத்தி நகரும் வாகனங்களுக்கு (✓) குறியிடுக.

Identifying vehicles that use fuel

7. படங்களை உற்றுநோக்கி, சிந்தித்து சரியான செயல்களுக்கு (✓) குறியிடுக.

Identifying correct and incorrect road safety actions

தன் மதிப்பீடு

* என்னால் பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்களை அடையாளம் காண முடியும்.

* நான் சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவேன்.