2வது கணக்கு : பருவம்-1 அலகு 5 : காலம்
ஓர் ஆண்டின் மாதங்கள்
பயணம் செய்வோம்
கலைச் சொற்கள்
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்
* ஓர் ஆண்டிற்கு 12 மாதங்கள் உள்ளன.
* ஆண்டின் முதல் மாதம் ஜனவரி மற்றும் கடைசி மாதம் டிசம்பர் ஆகும்.
* ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 ஆகும். இவற்றில் 7 மாதங்கள் 31 நாள்களையும், 4 மாதங்கள் 30 நாள்களையும் கொண்டுள்ளன.
* பிப்ரவரி மாதம் 28 அல்லது 29 நாள்களைக் கொண்டிருக்கும்.
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் மாணவர்களிடம் ஒவ்வொரு மாதத்திலும் கொண்டாடப்படும் விழாக்களைக் கேட்டு ஊக்கப்படுத்தி மாதங்களின் பெயர்களை அறியச் செய்யலாம்.
செய்து பார்
முன்பக்கத்தில் உள்ள காலண்டரை (நாள்காட்டியை) உற்றுநோக்கி ஒவ்வொரு மாதத்திலும் உள்ள நாள்களை எழுதுக.
விடை :
ஜனவரி 31
பிப்ரவரி 28 அல்லது 29
மார்ச் 31
ஏப்ரல் 30
மே 31
ஜூன் 30
ஜூலை 31
ஆகஸ்ட் 31
செப்டம்பர் 30
அக்டோபர் 31
நவம்பர் 30
டிசம்பர் 31
செய்து பார்
மாதங்களின் பெயர்களை வரிசையாக எழுதுக.
விடை :
1. ஜனவரி
2. பிப்ரவரி
3. மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. ஜூன்
7. ஜூலை
8. ஆகஸ்ட்
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. டிசம்பர்
மகிழ்ச்சி நேரம்
பொருத்துக.
விடை :
திருவிழா : மாதம்
குடியரசு தினம் - ஜனவரி
சுதந்திர தினம் - ஆகஸ்ட்
ஆசிரியர் தினம் - செப்டம்பர்
குழந்தைகள் தினம் – நவம்பர்
கூடுதலாக அறிவோம்
படத்தில் உள்ளவாறு மாதங்களின் பெயர்களைக் கை மூட்டுகளில் பொருத்துக . மூட்டுகளின் மேல் அமையும் மாதங்கள் 31 நாள்களையும் இரண்டு மூட்டுகளின் இடையில் அமையும் மாதங்கள் 30 நாள்களையும் குறிக்கும். ஆனால் பிப்ரவரி மாதத்தில் 28 அல்லது 29 நாள்கள் இருக்கும்.