2nd Grade Maths: Learn Days of the Week in Tamil | Term 1 Unit 5: Time

வாரத்தின் நாட்கள் | 2வது கணக்கு | பருவம்-1 அலகு 5: காலம்

2வது கணக்கு : பருவம்-1 அலகு 5 : காலம்

வாரத்தின் நாட்கள்

கற்றல்

வாரத்தின் நாட்கள்

வாரத்தின் நாட்கள்

ஒரு வாரத்தில் ஏழு நாள் உள்ளன

1. ஞாயிறு

2. திங்கள்

3. செவ்வாய்

4. புதன்

5. வியாழன்

6. வெள்ளி

7. சனி

வாரத்தின் முதல் நாள் ஞாயிறு.

செய்து பார்

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

1. வாரத்தின் நான்காவது நாள் என்ன?

விடை : புதன்

2. வாரத்தின் ஏழாவது நாள் என்ன?

விடை : சனிக்கிழமை

3. வியாழக்கிழமைக்கு அடுத்து வரும் நாள் எது?

விடை : வெள்ளி

4. புதன் கிழமைக்கு முன் வரும் நாள் எது?

விடை : செவ்வாய்

5. ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள்?

விடை : 7 நாட்கள்

முயன்று பார்

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

1. திங்கள் கிழமைக்கு அடுத்த 2வது நாள் எது?

விடை : புதன்

2. புதன் கிழமைக்கு அடுத்த 3வது நாள் எது?

விடை : சனிக்கிழமை

3. ஞாயிற்றுக் கிழமைக்கு 1 நாள் முன்னர் வரும் நாள் எது?

விடை : சனிக்கிழமை

4. சனிக் கிழமைக்கு 2 நாள் முன்னர் வரும் நாள் எது?

விடை : வியாழன்

5. வெள்ளிக் கிழமைக்கு 3 நாள் முன்னர் வரும் நாள் எது?

விடை : செவ்வாய்

முயன்று பார்

இரண்டாம் வகுப்பு கால அட்டவணை

இரண்டாம் வகுப்பு கால அட்டவணை

உற்றுநோக்கிப் பட்டியலை நிறைவு செய்க

கால அட்டவணைப் பயிற்சி