2வது கணக்கு : பருவம்-1 அலகு 5 : காலம்
பருவங்கள்
ஆசிரியருக்கான குறிப்பு: மேலே படத்தில் உள்ள பழங்கள், பொருள்கள் பற்றிக் கேள்விகள் கேட்டுப் பருவங்கள் தொடர்பான பதிலை மாணவர்களிடம் வருவிக்கலாம்.
பயணம் செய்வோம்
கலைச் சொற்கள் :
கோடைக் காலம், மழைக் காலம், குளிர் காலம்
ஆசிரியருக்கான குறிப்பு
மேலே படத்தில் உள்ள பழங்கள், பொருள்கள் பற்றிக் கேள்விகள் கேட்டுப் பருவங்கள் தொடர்பான பதிலை மாணவர்களிடம் வருவிக்கலாம்.
கற்றல்
கோடைக்கால மாதங்கள் : மார்ச், ஏப்ரல், மே, ஜூன்
மழை மாதங்கள் : ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்
குளிர்கால மாதங்கள் : நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி
விளையாட்டு
செய்முறை
(1) ஆசிரியர் பருவங்கள் தொடர்பான படங்களைத் தயாரித்தல். உதாரணமாக, குடையுடன் நடந்து செல்லுதல்.
(2) ஒரு மாணவரை அழைத்துப் பட அட்டைகளில் ஒன்றை எடுக்கச் செய்தல் வேண்டும்.
(3) இப்பொழுது அட்டையில் உள்ள படத்தை விளக்குமாறு மாணவர் மௌனமாக நடித்துக் காண்பித்தல்.
(4) மற்ற மாணவர்கள் அவரின் செய்கைகளை உற்றுநோக்கி அது எந்தப் பருவம் எனக் கூறுதல்.
செய்து பார்
கொடுக்கப்பட்டுள்ள பருவங்களில் உண்ணப்படும் பொருத்தமான உணவுப் பொருளை (✔) குறியிடுக
மகிழ்ச்சி நேரம்
பருவங்களுக்குத் தகுந்தாற் போல் மாதங்களுக்கு வண்ணமிடுக. கோடைகாலத்திற்கு மஞ்சள் நிறமும், மழைக்காலத்திற்கு நீல நிறமும், குளிர் காலத்திற்குப் பச்சை நிறமும் பயன்படுத்தவும்...
விடை :
குளிர்கால மாதங்கள் : நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி
கோடை மாதங்கள்: மார்ச், ஏப்ரல், மே, ஜூன்
மழை மாதங்கள்: ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்