Measuring Capacity | 2nd Grade Maths Term 3 Unit 3 | Measurements

Measuring Capacity | 2nd Grade Maths Term 3 Unit 3 | Measurements

2வது கணக்கு : பருவம்-3 அலகு 3 : அளவீடுகள்

கொள்ளளவினை அளத்தல் | 2nd Maths : Term 3 Unit 3 : Measurement

கொள்ளளவினை அளத்தல்

கொள்ளளவு என்பது ஒரு பாத்திரமானது ஒரு பொருளைக் கொள்ளும் அளவாகும்.

நினைவு கூர்க

கொள்ளளவினை ஒப்பிடுதல்

அதிக அளவு தண்ணீர் கொண்ட பாத்திரத்தை (✔) குறியிடுக.

இரண்டு பானைகள், ஒன்று பெரியது மற்றும் ஒன்று சிறியது.

கலைச் சொற்கள் : கொள்ளளவு

பயணம் செய்வோம்

தண்ணீர்! தண்ணீர்!

கமலி மற்றும் கண்ணன் வெவ்வேறு அளவுள்ள குடங்களுடன் தண்ணீர் பிடிக்கிறார்கள்.

கமலி மற்றும் கண்ணன் இருவரும் குழாயிலிருந்து 2 குடம் தண்ணீர் பிடித்துவரச் செல்கின்றனர். படத்தை உற்றுநோக்கி, யார் அதிகத் தண்ணீர் பிடிப்பர் எனக் கூறுக.

விடை: கமலியின் 2 குடங்கள் அதிக தண்ணீர் எடுக்கின்றன.

கற்றல்

கொள்ளளவு என்பது ஒரு பாத்திரமானது ஒரு பொருளைக் கொள்ளும் அளவாகும்.

இங்கு பெரிய குவளை, கூஜா, பாத்திரம் மற்றும் பானை ஆகியவை தண்ணீர் வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு அளவுகளைக் கொண்டதால் அவற்றில் வைக்கப்படும் தண்ணீரின் அளவும் மாறுபடுகிறது.

கொள்ளளவினை அளக்க ஒரு பொதுவான அளக்கும் பாத்திரம் தேவை. இங்கு நாம் அதைக் குவளையை அளக்கும் கருவியாகப் பயன்படுத்தலாம்.

குவளை, ஜாடி, பாத்திரம் மற்றும் பானை ஆகியவற்றின் கொள்ளளவை ஒரு சிறிய குவளையால் அளவிடுதல்.

இந்த பெரிய குவளை 2 குவளைகள் தண்ணீர் பிடிக்கும்.

இந்த ஜாடியில் 5 குவளைகள் தண்ணீர் நிரப்பலாம்.

இந்தப் பாத்திரம் 10 குவளைகள் தண்ணீரைக் கொள்ளும்.

இந்தப் பானை 20 குவளைகள் தண்ணீரைக் கொள்ளும்.

செயல்பாடு

உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் அளவிடும் கருவி பற்றி கேட்டறிந்து அட்டவணையை நிரப்புக.

அளவிடும் கருவிகள் பற்றிய அட்டவணை.

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்கள் தலைமுறைக்குத் தலைமுறை குடும்பத்திற்குக் குடும்பம் அளவிடும் கருவிகள் எவ்வாறு மாறுபடுகிறது என கலந்துரையாடச் செய்யவும்.

பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் கொள்ளளவினை அளவிடும் பாத்திரத்தைக் கொண்டு ஊகிக்க. உமது ஊகம் சரியானவையா என் அளந்து பார்த்துக் கண்டறிக.

கொள்ளளவை ஊகித்து அளவிடும் பயிற்சி அட்டவணை.

முயன்று பார்

1 ஜாடி 3 குவளைகள் தண்ணீரை கொள்ளும் எனில், பின்வருவனவற்றின் கொள்ளளவினைக் காண்க.

1 ஜாடி = 3 குவளைகள். பயிற்சி கேள்விகள்: 2 ஜாடிகள், 4 ஜாடிகள்.

12 குவளைகள் ஆல் 4 ஜாடிகளில் தண்ணீர் நிரப்ப முடியும்.

மகிழ்ச்சி நேரம்

நாம் தினசரிப் பயன்பாட்டிற்கு வெவ்வேறு அளவுடைய, வடிவமுடைய கொள்கலன்களைப் பயன்படுத்துவது ஏன் எனச் சிந்தித்தீர்களா? இப்போது சிந்தியுங்கள்.

கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்குத் தேவையான, சரியான தண்ணீர் கொள்கலன் எது என (✔) குறியிடுக.

பல்வேறு செயல்பாடுகளுக்கு சரியான கொள்கலனைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி.