2nd Maths Term 3 Unit 3 Measurement | Weighing Objects with a Simple Balance

2வது கணக்கு : பருவம்-3 அலகு 3 : அளவீடுகள் - பொருள்களின் எடையை அறிய எளிய முறைத் தராசைப் பயன்படுத்துதல்

பொருள்களின் எடையை அறிய எளிய முறைத் தராசைப் பயன்படுத்துதல்

2வது கணக்கு : பருவம்-3 அலகு 3 : அளவீடுகள்

ஆசிரியருக்கான குறிப்பு

பொருள்களை எடைபோடத் திட்டக் கருவிகள் தேவை என மாணவர்களை உணரச் செய்க.

பயணம் செய்வோம்

பாரதியும் கண்ணகியும் சாலை ஓரத்திலுள்ள இரு வேறு பழ வியாபாரிகளிடமிருந்து திராட்சைப் பழங்களை வாங்கினர்.

பழ வியாபாரிகள் திராட்சை விற்கும் காட்சி

கற்றல்

சிறிய பொருள்கள்யாவும் சிறிய தராசுகளைக் கொண்டு எடை போடப்படுகின்றன. பெரிய பொருள்கள் பெரிய தராசுகளைக் கொண்டு எடை போடப்படுகின்றன. எளிய தராசில் இரு எடைத் தட்டுகள் உள்ளன.

தராசு வகைகள்

கனமான பொருள்களைக் கொண்ட எடைத் தட்டு கீழே இறங்கும்.

இலேசான பொருள்களைக் கொண்ட எடைத் தட்டு மேலே போகும்.

இரு தராசுத் தட்டுகளில் இருக்கும் பொருள்களின் எடை சமமாக இருந்தால் அவை நேர்கோட்டில் நிற்கும்.

பயிற்சி

அ) அதிக எடைக்கு 'அ' எனவும் குறைவான எடைக்கு 'கு' எனவும் குறிக்க.

புத்தகம் மற்றும் எழுதுகோல் எடையை ஒப்பிடுதல்

ஆ) குறைவான எடையுள்ள தராசுத் தட்டினை (✔) செய்க. மற்றும் அதிக எடையுள்ள தராசுத் தட்டினை (X) செய்க.

தராசு தட்டுகளைக் குறித்தல்

மகிழ்ச்சி நேரம்

பொருட்களின் எடையை அளக்கப் பயன்படும் சரியான எடைத் தராசுடன் பொருத்துக.

பொருட்கள்: வெல்லம், மணிகள், அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை, தங்கக் காதணி, ஏலக்காய்

பொருட்களை தராசுகளுடன் பொருத்துதல்
பொருத்தப்பட்ட விடைகளைக் காண்க

எளிய தராசு (பெரிய எடை)

வெல்லம்

அரிசி மூட்டை

சர்க்கரை மூட்டை

மின்னணு தராசு (சிறிய/துல்லியமான எடை)

மணிகள்

தங்கக் காதணி

ஏலக்காய்

செயல்பாடு

எளிய தராசு செய்தல்

(i) இரண்டு தேங்காய் மூடிகள், ஓர் அளவுகோல் மற்றும் நூலை எடுத்துக்கொள்ளவும்.

(ii) அளவுகோலின் நடுவிலிருந்து சமதொலைவில் இருக்குமாறு, இரு தேங்காய் மூடிகளையும் கட்டவும். இப்போது எளிய தராசு தயார்.

(iii) இப்போது, சில கோலி குண்டுகள், கரி எழுதுகோல், அழிப்பான்கள், வண்ண மெழுகு, சுண்ணாம்புக் கட்டி, காகிதம், கரிக்கோல் பெட்டி, பலகை, சில பொம்மைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

(iv) மாணவர்களை மூன்று பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும்.

(v) குழுவில் உள்ள ஒருவர் தராசின் வலது தட்டில் எடை அளக்க வேண்டிய பொருளை எடுத்து வைக்கவேண்டும்.

(vi) மற்றொருவர் இருபுறமும் சமமாகும் வரை இடது தட்டில் கோலி குண்டுகளைச் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.

(vii) மூன்றாமவர் கோலி குண்டுகளின் எடையை எண்ணிக் குறித்துக்கொள்ள வேண்டும்.

(viii) இவ்வாறு பொருட்களை மாற்றி எடையைக் கண்டறியலாம்.

மாணவர்கள் எளிய தராசைப் பயன்படுத்தி எடையைக் கண்டறிதல் மாணவர்கள் எளிய தராசைப் பயன்படுத்தி எடையைக் கண்டறிதல்