Iterative Patterns: Class 2 Maths Term 3 Unit 2 | Samacheer Kalvi

தொடர் அமைப்புகள் | பருவம் 3 | வகுப்பு 2 கணக்கு

தொடர் அமைப்புகள்

பயணம் செய்வோம்

வில்லைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து மாறும் பொம்மைகளின் எண்ணிக்கையை உற்று நோக்குக.

வில்லைகள் மற்றும் பொம்மைகளின் எண்ணிக்கை அமைப்பு

பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

i) வில்லைகளின் எண்ணிக்கையில் உள்ள அமைப்பு என்ன?

விடை : வரிசையாக அதிகரித்து, ஒரு முறை வடிவ எண்ணினால் தவிர்க்கவும்

ii) பொம்மைகளின் எண்ணிக்கையில் காணும் அமைப்பு என்ன?

விடை : சம எண்கள், இரண்டால் தவிர்க்கவும்

iii) வில்லைகளின் எண்ணிக்கையும் பொம்மைகளின் எண்ணிக்கையும் எவ்வாறு தொடர்பு பெற்றுள்ளன?

விடை : பொம்மைகளின் எண்ணிக்கை = டோக்கனின் எண்ணிக்கையை விட 2 மடங்கு

iv) வில்லைகளின் எண்ணிக்கை 5 ஆக இருந்தால் எத்தனை பொம்மைகள் இருக்கும்?

விடை : 1௦ பொம்மைகள்

கற்றல்

அமைப்புகளை உற்றுநோக்கி இரு படிகளுக்குத் தொடரவும்.

தொடரும் அமைப்புகள்

முயற்சி செய்

கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளில் மாறுபட்டுள்ளவற்றை கோடிட்டு நீக்கவும். கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் அதனை மாற்ற சரியான படத்தை வரையவும்.

மாறுபட்ட அமைப்புகளைக் கண்டறிதல்

மகிழ்ச்சி நேரம்

சர்க்கரையும் மிளகாயும்

சர்க்கரை, மிளகாய், வெல்லம்

i) முதலில் உள்ள பொருள் என்ன?

விடை : சர்க்கரை

ii) அதன் இயல்பு என்ன?

விடை : இனிப்பு

iii) இரண்டாவதாக உள்ள பொருள் என்ன?

விடை : மிளகாய்

iv) அதன் இயல்பு என்ன?

விடை : காரம்

v) மூன்றாவதாக உள்ள பொருள் என்ன?

விடை : வெல்லம்

vi) அதன் இயல்பு என்ன?

விடை : இனிப்பு

vii) இந்தப் பொருள்கள் எவ்வாறு அடுக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன எனக் கூறுங்கள்.

விடை : இனிப்பு மற்றும் காரம்

viii) இந்த வரிசையில் அடுத்து என்ன பொருள் வரும் என ஊகியுங்கள்?

விடை : இனிப்பு

நீயும் மேதை தான்

உங்கள் வகுப்பில் உள்ள மேசைகளும் நாற்காலிகளும் எவ்வாறு அடுக்கப்பட்டுள்ளன?

அடுக்கப்பட்டுள்ள விதத்தில் ஏதேனும் அமைப்புகள் உள்ளதா? நண்பர்களுடன் கலந்துரையாடவும்.