2nd Maths Term 3 Unit 2: Patterns in Numbers | Samacheer Kalvi

2nd Maths Term 3 Unit 2: Patterns in Numbers | Samacheer Kalvi

2வது கணக்கு : பருவம்-3 அலகு 2 : அமைப்புகள் - எண்களில் அமைப்புகள்

நினைவு கூர்க

எண்களில் உள்ள அமைப்பினை உற்றுநோக்கி நிறைவு செய்க

எண்களில் அமைப்புகள் நினைவு கூர்க பயிற்சி

கலைச்சொற்கள்

வரிசை, அடுக்கு, விதி

பயணம் செய்வோம்

விளையாட்டினில்

இரு மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடலாம்.

படத்தில் உள்ளவாறு 1 முதல் 37 வரை எண்கள் கொண்ட எண் பலகையை உருவாக்கவும்.

முதல் போட்டியாளர் பகடையை உருட்டவேண்டும். பகடையில் 2 என்ற எண் விழுந்ததெனில் அடுத்த போட்டியாளர், தன் வில்லையை 2 இல் வைத்து இரண்டிரண்டாகத் தாவி 4, 6, 8, 10 எனக் கடைசி எண் வரை நகர்த்திச் செல்லுவார். முதல் போட்டியாளர் அந்த எண்களைக் குறித்துக் கொள்வார்.

பகடை விளையாட்டு

இப்போது இரண்டாவது போட்டியாளருக்குப் பகடை உருட்ட வாய்ப்பு அளிக்கப்படும். அவருக்கு மீண்டும் 2 கிடைத்தால் அவர் எண் நிலைகளை வாய்மொழியாகக் கூறுவார். ஆனால் 3 விழுந்தால் முதல் போட்டியாளர் 3-களில் தாவி வில்லையை நகர்த்துவார். இரண்டாம் போட்டியாளர் எண் நிலைகளைக் குறிப்பார்.

போட்டியாளர்கள் 2, 3, 4, 5 மற்றும் 6 உள்ள எண் அமைப்புகளை அறியும் வரை விளையாட்டைத் தொடரலாம்.

கற்றல்

விதியைப் பயன்படுத்தி அமைப்புகளை நிறைவு செய்க.

கற்றல் பயிற்சி - எண் அமைப்புகள்

செயல்பாடு

ஒவ்வொரு படத்திலும் பயன்படுத்திய குச்சிகளை எண்ணிக் கட்டத்தில் நிரப்பியவாறு அடுத்தடுத்த அமைப்பினைத் தொடரவும்.

குச்சிகளை பயன்படுத்தி அமைப்புகள்

பயிற்சி

விதியைக் கண்டுபிடித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வோர் அமைப்பினையும் நிரப்புக.

பயிற்சி வினாக்கள் - எண் அமைப்புகள்

மகிழ்ச்சி நேரம்

விதியைப் பயன்படுத்தி அமைப்பினை நிறைவு செய்க.

1) கடைசி எண் 21. முதல் எண் 13. விதியை எழுதவும்.

மகிழ்ச்சி நேரம் கேள்வி 1

13 (+2) 15 (+2) 17 (+2) 19 (+2) 21

2) தொடக்க எண் 39. அடுத்தது முதல் எண்ணை விட 3 குறைவு.

மகிழ்ச்சி நேரம் கேள்வி 2

39(−3), 36(−3), 33(−3), 30(−3) 27

3) நடுவில் உள்ள எண் 45. அதற்கு முன் இருக்கும் எண் 40.

மகிழ்ச்சி நேரம் கேள்வி 3

35 (+5), 40 (+5), 45 (+5), 50 (+5), 55

எண் அமைப்பினைத் தொடரக் குச்சிகளை வரைக.

குச்சி அமைப்புகள் தொடர்ச்சி

முயன்று பார்

அமைப்பில் விடுபட்ட கருப்பு விசைகளை வரைக.

பியானோ விசைகள் அமைப்பு