3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம்
ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதி அறிதல்
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 1869 இரண்டாம் நாளாகும். நம் நாட்டில் தேதியைப் பின்வருமாறு குறிக்கின்றோம். 02.10.1869 முதல் 2 இலக்கங்கள் நாளையும் அடுத்த இரண்டு இலக்கங்கள் மாதத்தையும் முன்றாவதாக உள்ள 4 இலக்கங்கள் வருடத்தையும் குறிப்பிடும். பொதுவாக இதனை (தேதே/மாமா/ஆஆஆஆ, dd/mm/yyyy) முறையில் குறிக்கின்றோம்.
(1) இன்றைய தேதியை dd/mm/yy முறையில் குறிக்கவும்.
(2) உங்கள் பிறந்தநாளை dd/mm/yy முறையில் குறிக்கவும்.
முயற்சி செய்
கீழ் உள்ள நாள்காட்டியில், தேதியை வட்டமிடவும்.
(1) ஜனவரி 4, 2018 ஐ வட்டமிடுக.
(2) ஜனவரி 15, 2018 ஐ வட்டமிடுக.
(3) பிப்ரவரி 22, 2018 ஐ வட்டமிடுக.
(4) ஜனவரி 31, 2018 ஐ வட்டமிடுக.
(5) பிப்ரவரி 28, 2018 ஐ வட்டமிடுக.
(6) 5/02/2018 ஐ வட்டமிடுக.
(7) 26/01/2018 ஐ வட்டமிடுக.
(8) ஜனவரி 2018- ல், ஞாயிற்றுக்கிழமைகளை வட்டமிடுக.
செயல்பாடு 3
உங்கள் நண்பர்களின் பிறந்தநாள் இன்றைய தேதியிலிருந்து கழித்து அவர்களின் வயதை கண்டறியவும்.
நீங்களே செய்யுங்கள்
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதியைக் கொண்டு வருடங்களை நிரப்புக.
பயிற்சி செய்
(1) நாட்காட்டி 2018 ஐ பார்த்து, கோடிட்ட இடத்தை நிரப்புக.
(i) ஆசிரியர் தினம் 5 செப்டம்பர் (செவ்வாய்)
(ii) சுதந்திர தினம் 15 ஆகஸ்ட் (செவ்வாய்)
(iii) குடியரசு தினம் 26 ஜனவரி (வியாழன்)
(iv) குழந்தைகள் தினம் 14 நவம்பர் (செவ்வாய்)
(2) பொருத்துக
| தேதி (சொற்களில்) | தேதி (எண்களில்) |
|---|---|
| நவம்பர் 15, 2018 | 26.04.2018 |
| ஜீன் 16, 2018 | 10.12.2017 |
| ஏப்ரல் 26, 2018 | 15.11.2018 |
| டிசம்பர் 10, 2017 | 26.05.2017 |
| மே 26, 2017 | 16.06.2018 |
விடை:
| நவம்பர் 15, 2018 | 15.11.2018 |
| ஜீன் 16, 2018 | 16.06.2018 |
| ஏப்ரல் 26, 2018 | 26.04.2018 |
| டிசம்பர் 10, 2017 | 10.12.2017 |
| மே 26, 2017 | 26.05.2017 |
(3) நாட்காட்டியைப் பார்த்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க.
(i) அக்டோபர் 2018-ல் உள்ள நாட்களின் எண்ணிக்கை 31.
(ii) ஞாயிறுகிழமைகளின் எண்ணிக்கை 4.
(iii) முதல் சனிக்கிழமை 6.
(iv) மாதத்தின் கடைசி நாள் புதன்கிழமை.
(v) மாதத்தின் 10வது நாள் புதன்கிழமை.
(vi) மூன்றாவாது புதன்கிழமை 17 தேதியில் வரும்.