3rd Maths Term 2 Unit 1 Numbers: Repeated Addition Explained

3rd Maths Term 2 Unit 1 Numbers: Repeated Addition Explained

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

மீள் கூட்டல்

நாம் முன் வகுப்பில் கற்ற மீள் கூட்டலை நினைவு கூர்வோம்.

ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம்

(i) புள்ளி பெருக்கல்

(ii) மீள் கூட்டல்

(iii) மறு குழுவாக்கம்

(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி

(v) லாட்டிஸ் பெருக்கல்

மீள் கூட்டல்:

நாம் முன் வகுப்பில் கற்ற மீள் கூட்டலை நினைவு கூர்வோம்.

i) பூக்களின் மொத்த எண்ணிக்கையை காண்க.

மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பூக்கள்

நாம் பூக்களின் எண்ணிக்கையைப் பின்வருமாறு காணலாம்.

3 + 3 + 3 = 9

3 குழுக்களில் 3 பூக்கள் எனில் மொத்தம் 9.

3 × 3 = 9

ii) இலைகளின் மொத்த எண்ணிக்கையை காண்க.

நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட இலைகள்

4 + 4 + 4 + 4 = 16

4 × 4 = 16

iii) நான்கு தட்டுகளில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?

நான்கு தட்டுகளில் உள்ள ஆப்பிள்கள்

இங்கு நான்கு தட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 5 ஆப்பிள்கள் உள்ளன.

ஆப்பிள்களின் மொத்த எண்ணிக்கை = 5 + 5 + 5 + 5 = 20

5 × 4 = 20