3rd Maths: Term 1 Unit 5 - Analogue and Digital Clocks

3rd Maths: Term 1 Unit 5 - Analogue and Digital Clocks

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5

காலம் | முட்கடிகாரம் மற்றும் இலக்கமுறை கடிகாரம்

முட்கடிகாரம் மற்றும் இலக்கமுறை கடிகாரம்

முட்கடிகாரத்தில் மணிமுள் மற்றும் நிமிடமுள் இருக்கும். அவை இருக்கும் நிலையை கொண்டு நாம் நேரத்தை அறியலாம். இலக்கமுறை கடிகாரத்தில் நேரம் எண்களில் காண்பிக்கப்படுகிறது.

பின்வரும் கடிகாரங்களை உற்றுநோக்குக.

முட்கடிகாரம், இலக்கமுறை கடிகாரம்

Analogue Clock and Digital Clock Example

முட்கடிகாரத்தில் மணிமுள் மற்றும் நிமிடமுள் இருக்கும். அவை இருக்கும் நிலையை கொண்டு நாம் நேரத்தை அறியலாம். இலக்கமுறை கடிகாரத்தில் நேரம் எண்களில் காண்பிக்கப்படுகிறது.

இரு வழிகளிலும் நேரத்தை குறிக்கும்.

Examples of time shown in both analogue and digital formats

செயல்பாடு 2

1. முட்கடிகாரத்தில் காட்டும் நேரத்தை இலக்கமுறையில் எழுதுக.

Exercise: Convert analogue clock time to digital format.

2. இலக்கமுறை கடிகாரத்தில் குறிப்பிட்ட நேரத்தை காட்ட முட்களை வரையவும்.

Exercise: Draw hands on analogue clocks for the given digital time.

3. காவ்யாவின் அட்டவணையை சரியான நேரத்துடன் பொருத்தவும்.

அ) 8 மணி கடந்து 15 நிமிடங்களில் காவ்யா பள்ளிக்கு புறப்படுவாள்

ஆ) 2 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா பள்ளியிலிருந்து வருகிறாள்

இ) 5 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா வெளியே விளையாட செல்கிறாள்.

ஈ) 8 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா இரவு உணவைச் சாப்பிடுகிறாள்.

உ) 9 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா உறங்க செல்கிறாள்

7 : 45

9 : 30

2 : 30

4 : 45

8 : 15

விடை :

அ) 8 மணி கடந்து 15 நிமிடங்களில் காவ்யா பள்ளிக்கு புறப்படுவாள் - 8:15

ஆ) 2 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா பள்ளியிலிருந்து வருகிறாள் - 2:30

இ) 5 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா வெளியே விளையாட செல்கிறாள். - 4:45

ஈ) 8 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா இரவு உணவைச் சாப்பிடுகிறாள். - 7:45

உ) 9 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா உறங்க செல்கிறாள் - 9:30