தகவல் செயலாக்கம் | பருவம்-1 அலகு 6
அலகு 6: தகவல் செயலாக்கம்
முறையான பட்டியல்
பயணம் செய்வோம்
அருண் வீட்டிலிருந்து தனது பள்ளியை அடைய விரும்புகின்றான். ஒரு வழியானது உங்களுக்காக வரையப்பட்டிருக்கிறது. மீதமுள்ள அனைத்து வழிகளையும் கூறுக.
கலைச் சொற்கள் : முறையான பட்டியல், சோடி, வழி
ஆசிரியருக்கான குறிப்பு
படத்திலுள்ள ஏதேனும் ஒரு வழியை ஆசிரியர் விளக்குதல் வேண்டும். மேலும் மாணவர்களை மற்ற வழிகளைக் கலந்துரையாடிக் கூறச் செய்ய வேண்டும்.
கற்றல்
ஆடை அணியும் முறைகளைப் பட்டியலிடுதல்
இரு சட்டைகள் மற்றும் இரு கால் சட்டைகளைக் கொண்டு ஒருவர் ஆடை அணிவதற்கான பல்வேறு வழிகளைக் காண்போம்.
இவ்வாறு நான்கு வழிகளில் ஆடை அணியலாம்.
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் வகுப்பறையில் கிடைக்கும் பொருட்களான பேனா மற்றும் மூடி, பாட்டில் மற்றும் மூடி போன்ற பல்வேறு பொருட்களைக் கொண்டு சோடிகளை இணைப்பதற்கான வேறுபட்ட வழிகளை உருவாக்கக் கற்பிக்கலாம்.
செய்து பார்
நான்கு கோப்பைகளில் ஒரு ஜோடி கோப்பையைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிகளையும் கண்டறிக.
ஒரு வாய்ப்பு காண்பிக்கப்பட்டுள்ளது. மற்ற வழிகளைக் கண்டறிக.
12 வழிகள்
முயன்று பார்
சத்யா ஒரு கரிக்கோல், ஒரு நீலப் பேனா மற்றும் ஒரு கருப்பு பேனா வைத்திருக்கிறாள்.
இந்த மூன்று பொருள்களில் இரண்டினை அவள் நண்பருக்குக் கொடுக்க விரும்புகிறாள்.
பெட்டியில் இரு பொருள்களை வைப்பதற்கான பல்வேறு வழிகளைக் கண்டறிக.