Class 10 Tamil One Mark Questions and Answers | Ilakkanam & Literature
பத்தாம் வகுப்பு தமிழ்
ஒரு மதிப்பெண் வினா விடை
- 1) வித்துவக்கோடு எங்கு உள்ளது? கேரள மாநிலம் பாலக்காடு
- 2) வித்துவக்கோட்டில் உள்ள இறைவன் யார்? உய்யவந்த பெருமாள்
- 3) பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்? குலசேகர ஆழ்வார்
- 4) பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? ஐந்தாம் திருமொழி
- 5) பெருமாள் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை? 105
- 6) குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன? எட்டாம் நூற்றாண்டு
- 7) ஆறறிவுடைய மக்களை எவ்வாறு அழைப்பர்? உயர்திணை
- 8) மக்கள் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் எவ்வாறு அழைப்பர்? அஃறிணை
- 9) திணையின் உட்பிரிவு யாது? பால்
- 10) உயர்திணை எத்தனை பால் பிரிவுகளை உடையது? 3
- 11) அஃறிணை எத்தனை பால் பிரிவுகளை உடையது? 2
- 12) இடம் எத்தனை வகைப்படும்? 3
- 13) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவதும் பேசுவதும் வழாநிலை எனப்படும்
- 14) இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
- 15) இலக்கணப் பிழைகள் இல்லாது இருப்பின் அவை______ எனப்படும்(வழாநிலை)
- 16) கண்ணகி உண்டான் என்பது______வழு(பால்வழு)
- 17) செழியன் வந்தது என்பது______வழு(திணை வழு)
- 18) நீ வந்தேன் என்பது_____வழு(இட வழு)
- 19) நேற்று வருவான் என்பது________வழு(கால வழு)
- 20) ஒரு விரலைக் காட்டி ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்பது_______வழு(வினா வழு)
- 21) “ எங்கே இருக்கிறார்?” என்ற வினாவிற்குக் “கண்ணாடி பைக்குள் இருக்கிறது” என்று விடை அளித்தல்________வழு(விடை வழு)
- 22) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்_______(மரபு வழு)
- 23) இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது_________(வழுவமைதி)
- 24) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது_________வழுவமைதி(திணை வழுவமைதி)
- 25) “வாடா ராஜா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது______வழுவமைதி(பால் வழுவமைதி)
- 26) மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது_______வழுவமைதி(இட)
- 27) ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது____வழுவமைதி(கால)
- 28) “கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்” என்று பாரதியார் பாடுவது________வழுவமைதி(மரபு)
- 29) ‘அமைச்சர் நாளை விழாவிற்கு வரு கிறார்' என்பது_____வழுவமைதி(கால)
- 30) ‘அவனும் நீயும் அலுவலரை பார்க்க ஆயத்தமாகுங்கள்' என்பது________வழுவமைதி(இட)
- 31) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்-என்பது_________வழுவமைதி(இட)
- 32) “செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்” என்பது _______வழுவமைதி(இட)
- 33) “சிறுவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்” என்பது_______வழுவமைதி(கால)
- 34) “அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது” என்பது_____வழு(திணை)
- 35) “அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை' என்பது_____வழுவமைதி(இட)
- 36) “குழந்தை அழுகிறான், பார்” என்பது_______வழு(திணை)
- 37) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே' யார் யாரிடம் கூறியது_______,_______(குலசேகர ஆழ்வார், இறைவனிடம்)
- 38) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.இது _______வழுவமைதி(பால்)
- 39) பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். இது___________வழுவமைதி(திணை)
- 40) வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.இது____________வழுவமைதி(கால)
- 41) “சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான்” என்று இறமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயை பற்றிக் கூறினார்.இது_________வழு(திணை)
- 42) ‘பெய்த மழை' என்பதன் வினைத்தொகை_______(பெய்மழை)
- 43) மீளாத்துயர் என்பதன் எதிர்மறை________(மீண்ட துயர்)
- 44) அவிர்தல் பொருள் தருக(ஒளிர்தல்)
- 45) அழல் பொருள் தருக(நெருப்பு)
- 46) உவா பொருள் தருக(முழு நிலவு)
- 47) கங்குல் பொருள் தருக(இரவு)
- 48) கனலி பொருள் தருக(சூரியன்)
- 49) புயலுக்குப் பின்- எதிர்மறையாக எழுதுக(புயலுக்கு முன்)
- 50) பெரியவரின் அமைதி-எதிர்மறையாக எழுதுக(சிறுவனின் அமைதி)
- 51) அருகில் அமர்க- எதிர்மறையாக எழுதுக(தொலைவில் அமர்க)
- 52) மறைத்து காட்டு- எதிர்மறையாக எழுதுக(வெளிப்படையாகக் காட்டு)
- 53) கொடுத்துச் சிவந்த- எதிர்மறையாக எழுதுக(கொடுக்காமல் சிவந்த)
- 54) Nanotechnology-கலைச்சொல் தருக(மீநுண் தொழில்நுட்பம்)
- 55) Biotechnology-கலைச்சொல் தருக(உயிரித் தொழில்நுட்பம்)
- 56) Ultraviolet rays-கலைச்சொல் தருக(புற ஊதாக் கதிர்கள்)
- 57) Space technology-கலைச்சொல் தருக(விண்வெளி தொழில்நுட்பம்)
- 58) Cosmic rays-கலைச்சொல் தருக(விண்வெளிக் கதிர்கள்)
- 59) Infrared red-கலைச்சொல் தருக(அகச்சிவப்பு கதிர்)
- 60) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்_________(செய்குத்தம்பி பாவலர்)
- 61) செய்குத்தம்பி பாவலரின் ஊர்________(கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி)
- 62) செய்குத்தம்பிப் பாவலர் _____ வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்(15)
- 63) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்________(செய்குத்தம்பி பாவலர்)
- 64) _____________அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.(சென்னை விக்டோரியா)
- 65) _______நாளில் செய்குத்தம்பிப் பாவலர் சதாவதானி பட்டம் பெற்றார்(1907 மார்ச் 10)
- 66) செய்குத்தம்பி பாவலர் மணிமண்டபம் ________ல் உள்ளது(இடலாக்குடி)
- 67) சதம் என்றால் ______ என்பது பொருள்(நூறு)
- 68) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம்______(சங்க இலக்கியம்)
- 69) தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் ________(திருக்குறள்)
- 70) கல்வியைப் போற்றுவதை _________ காலத்திலிருந்து தமிழர் தொடர்கின்றனர்(சங்க)
- 71) உயிருக்கு அரிய துணையாய் இருப்பது_______(கல்வி)
- 72) மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தருவது_______(கல்வி)
- 73) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்துவது_______(கல்வி)
- 74) வினா _____ வகைப்படும்(6)
- 75) தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது_______வினா(அறி)
- 76) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது________வினா(அறியா)
- 77) ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது______வினா(ஐய)
- 78) தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது_______வினா(கொளல்)
- 79) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது________வினா(கொடை)
- 80) ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது________வினா(ஏவல்)
- 81) “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் செல்லுதல்_________வினா(ஏவல்)
- 82) “என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்_________வினா(கொடை)
- 83) “ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்________வினா(கொளல்)
- 84) “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல்______வினா(ஐய)
- 85) ஆசிரியரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்______வினா(அறியா)
- 86) மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்______வினா(அறி)
- 87) விடை_____வகைப்படும்(8)
- 88) “கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு, “வலப்பக்கத்தில் உள்ளது” எனக் கூறல்______விடை(சுட்டு)
- 89) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்_____விடை(மறை)
- 90) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்_______விடை(நேர்)
- 91) “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது_______விடை(ஏவல்)
- 92) “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது_______விடை(வினா எதிர் வினாதல்)
- 93) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கிறது” என்று உற்றதை உரைப்பது______விடை(உற்றது உரைத்தல்)
- 94) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது_______விடை(உறுவது கூறல்)
- 95) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது________விடை(இன மொழி)
- 96) பொருள்கோள்_____வகைப்படும்(8)
- 97) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் __________ என்று பெயர்.(பொருள்கோள்)
- 98) ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால், அது __________ பொருள்கோள் ஆகும்.(ஆற்று நீர்)
- 99) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது _______ பொருள்கோள் ஆகும்.(நிரல் நிறை)
- 100) நிரல்நிறைப் பொருள்கோள் _____ வகைப்படும்(2)
- 101) செய்யுளில் எழுவாய்களை வரிசைபடுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை நிரல்நிறையாகக் கொண்டு பொருள் கொள்ளுதல் _______________(முறை நிரல் நிறை) பொருள்கோள் ஆகும்.
- 102) செய்யுளில் ஏழுவாய்களை வரிசைப் படுத்தி அதை ஏற்கும் பயனிலைகளைக் கொண்டு பொருள்கொள்ளுதல் _______நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்(எதிர் நிரல் நிறை)
- 103) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் ________________(எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்)
- 104) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்__________(முறை நிரல்நிறைப் பொருள்கோள்)
- 105) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு –இப்பாடலில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
- 106) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டிப் பொருள் கொள்வது____________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
- 107) “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”-இது எவ்வகை வினா?(அறியா வினா)
- 108) “இந்த வழியாகச் செல்லுங்கள்”-இது எவ்வகை விடை?(சுட்டு விடை)
- 109) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(வினா எதிர் வினாதல் விடை)
- 110) “ஆதிரை, ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?”-எவ்வகை வினா?(அறியா வினா)
- 111) “கவி அரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்”-எவ்வகை விடை?(நேர் விடை)
- 112) “நீங்கள் கவி அரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?”- எவ்வகை வினா?(ஐய வினா)
- 113) “இங்கு நகரப் பேருந்துகள் நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?(அறியா வினா)
- 114) “அதோ, அங்கே பேருந்து நிற்கும்” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(சுட்டு விடை)
- 115) ‘அருந்துணை’ என்பதைப் பிரித்து எழுதுக(அருமை+ துணை)
- 116) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”-என்ற பாடல் வரியில் குறிப்பிடப்படுவது எது?(கல்வி)
- 117) “மின்விளக்கின் சொடுக்கு எந்தப் பக்கம் இருக்கிறது?”-எவ்வகை வினா?(அறியா வினா)
- 118) “சொடுக்கிய போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?”-எவ்வகை வினா?(ஐய வினா)
- 119) முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்-இதில் அமைந்துள்ள பொருள்கோள்________(ஆற்றுநீர்ப் பொருள்கோள்)
- 120) Lute music-கலைச்சொல் தருக(யாழிசை)
- 121) Chamber-கலைச்சொல் தருக(அறை)
- 122) To look up-கலைச்சொல் தருக(எட்டிப் பார்)
- 123) Grand-daughter-கலைச்சொல் தருக(பேத்தி)
- 124) Rote-கலைச்சொல் தருக(நெட்டுரு)
- 125) Didactic compilation-கலைச்சொல் தருக(நீதி நூல் திரட்டு)
- 126) “அருணா பாடினாள்” என்பதைப் பெயரெச்சத்தொடராக்கு(பாடிய அருணா)
- 127) ‘ஓடிய அருணா' என்பதை வினையெச்சத் தொடராக்கு.(ஓடி வந்தாள்)
- 128) ‘ஓடிய அருணா' என்பதை விளித்தொடராக்கு(அருணா, ஓடு)
- 129) “அம்மா சொன்னார்” என்பதை பெயரெச்சத் தொடராக்கு(சொன்ன அம்மா)
- 130) “அம்மா சொன்னார்” என்பதை விளித்தொடராக்கு(அம்மா, சொல்)
- 131) ‘தா' என்னும் வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி எழுவாய்த் தொடர் அமைக்க.(முருகன் தந்தான்)
- 132) “துளிர் பார்த்தாள்” என்பதைப் பெயரெச்சத் தொடராக்கு
- 133) “குழந்தை வந்தது” என்பதை வினையெச்சத் தொடராக்கு.
- 134) “மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்”- இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமைமை செய்க.
- 135) “கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
- 136) “வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
- 137) “ மாணவர்கள் அனைவரும் தனித்தனியே எழுதித் தரவேண்டும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
- 138) “தார் போன்ற நிறமுண்டு. கரியுமில்லை. பார்முழுதும் பரந்து திரிவேன் மேகமும் இல்லை” -நான் யார்?(காகம்)
- 139) மன்றல்-பொருள் தருக(திருமணம்)
- 140) அடிச்சுவடு-பொருள் தருக(நடந்து வந்த காலடித்தடம்)
- 141) அகராதி-பொருள் தருக(அகரமுதலி)
- 142) தூவல்-பொருள் தருக(பேனா)
- 143) மருள்-பொருள் தருக(மயக்கம்)
- 144) Emblem-கலைச்சொல் தருக(சின்னம்)
- 145) Thesis-கலைச்சொல் தருக(ஆய்வேடு)
- 146) Intellectual-கலைச்சொல் தருக(அறிவாளர்)
- 147) Symbolism-கலைச்சொல் தருக(குறியீட்டியல்)
- 148) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது______(கவிதை)
- 149) “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர்________(பாரதியார்)
- 150) ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பல இடங்களில் பாயும் ஆறு _______(சரயு ஆறு)
- 151) கொடை இல்லாத நாடு எது?(கோசலை)
- 152) “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று பாடியவர்__________(பாரதியார்)
- 153) ஏழைமை வேடன் யார்?(குகன்)
- 154) வேழ நெடும்படை கொண்டவர் யார்?(பரதன்)
- 155) தோழமை என்று சொன்னவர் யார்?(இராமன்)
- 156) கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி________ எனப் பெயரிட்டார்(இராமாவதாரம்)
- 157) இராமாயணம் ____ காண்டங்களை உடையது(6)
- 158) இராமாயணப் பாடல்கள் _____ நயம் மிக்கவை.(சந்த)
- 159) கம்பரின் ஊர்________(திருவழுந்தூர்)
- 160) கம்பரை ஆதரித்த வள்ளல்___________(சடையப்ப வள்ளல்)
- 161) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தும்________ஐந்திணை(அன்பின்)
- 162) அகத் திணை எத்தனை வகைப்படும்?(7)
- 163) முதற்பொருள் என்பது_______,_________(நிலமும் பொழுதும்)
- 164) பொழுது எத்தனை வகைப்படும்?(2)
- 165) சிறுபொழுது எத்தனை வகைப்படும்?(6)
- 166) பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?(6)
- 167) கார் காலம் என்பது_______,______மாதங்கள்(ஆவணி புரட்டாசி)
- 168) குளிர்காலம் என்பது______&_________(ஐப்பசி கார்த்திகை)
- 169) முன்பனிக்காலம் என்பது________&________( மார்கழி தை)
- 170) பின்பனிக் காலம் என்பது______&______(மாசி பங்குனி)
- 171) இளவேனில் காலம் என்பது________&_______(சித்திரை வைகாசி)
- 172) முதுவேனில் காலம் என்பது______&_______(ஆனி ஆடி)
- 173) காலை என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 6 மணி முதல் 10 மணி வரை)
- 174) நண்பகல் என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 10 மணி முதல் 2 மணி வரை)
- 175) எற்பாடு என்பது_____மணி முதல்____மணி வரை(பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை)
- 176) மாலை என்பது_____மணி முதல்____மணி வரை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை)
- 177) யாமம் என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை)
- 178) வைகறை என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை)
- 179) குறிஞ்சித் திணைக்கு உரிய சிறுபொழுது______(யாமம்)
- 180) முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது ___________(மாலை)
- 181) மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது__________(வைகறை)
- 182) நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது ____________(எற்பாடு)
- 183) பாலைத் திணைக்குரிய சிறுபொழுது_________(நண்பகல்)
- 184) ஆறு பெரும் பொழுதுகளும் வரக்கூடிய திணை______,_________(மருதம் நெய்தல்)
- 185) குறிஞ்சித் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________,_________(குளிர்காலம் முன்பனிக்காலம்)
- 186) பாலைத் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________&_______(இளவேனில் முதுவேனில் பின்பனி)
- 187) முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது___________ (கார்காலம்)
- 188) ஒரு நிலத்தின் தெய்வம் மக்கள் தொழில் விலங்கு இவையெல்லாம்____________(கருப்பொருள்கள்)
- 189) குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம்_____(முருகன்)
- 190) முல்லைத் திணைக்குரிய தெய்வம்________(திருமால்)
- 191) மருதத் திணைக்குரிய தெய்வம்_________(இந்திரன்)
- 192) நெய்தல் திணைக்குரிய தெய்வம்________(வருணன்)
- 193) பாலைத் திணைக்குரிய தெய்வம் _________(கொற்றவை)
- 194) குறிஞ்சித் திணைக்குரிய பறை_______(தொண்டகப் பறை)
- 195) முல்லைத் திணைக்குரிய பறை________(ஏறுகோட்பறை)
- 196) மருதத் திணைக்குரிய பறை______&_______(மணமுழா, நெல்லரிகிணை)
- 197) பாலைத் திணைக்குரிய பறை_______(துடி)
- 198) நெய்தல் திணைக்குரிய பறை_________(மீன்கோட்பறை)
- 199) நெய்தல் திணைக்குரிய பண்_________(செவ்வழிப்பண்)
- 200) பாலைத் திணைக்குரிய பண்________(பஞ்சுரப்பண்)
- 201) குறிஞ்சித் திணைக்குரிய தொழில்கள்________&________(தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல்)
- 202) முல்லைத் திணைக்குரிய தொழில்கள்________&________(ஏறுதழுவுதல் நிரை மேய்த்தல்)
- 203) மருதத் திணைக்கு உரிய தொழில்கள்________&________(நெல்லரிதல் களை பறித்தல்)
- 204) நெய்தல் திணைக்குரிய தொழில்கள்________&_______(மீன்பிடித்தல் உப்பு விளைத்தல்)
- 205) பாலைத் திணைக்கு உரிய தொழில்கள்________&_______(வழிப்பறி, நிரை கவர்தல்)
- 206) குறிஞ்சித் திணைக்குரிய மக்கள்_______&________&_______(வெற்பன் குறவர் குறத்தி)
- 207) முல்லைத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்)
- 208) மருதத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(ஊரன் உழவர் உழத்தியர்)
- 209) நெய்தல் திணைக்குரிய மக்கள்______&_____&______(சேர்ப்பன் பரதர் பரத்தியர்)
- 210) பாலைத் திணைக்குரிய மக்கள்______&______(எயினர் எயிற்றியர்)
- 211) குறிஞ்சித் திணைக்குரிய உணவு______&_____(மலைநெல், தினை)
- 212) முல்லைத் திணைக்குரிய உணவு_____&______(வரகு, சாமை)
- 213) மருதத் திணைக்குரிய உணவு______&_____(செந்நெல், வெண்ணெல்)
- 214) நெய்தல் திணைக்கு உரிய உணவு_____&_______(மீன் உப்புக்குப் பெற்ற பொருள்)
- 215) பாலைத் திணைக்குரிய உணவு____________(சூறையாடலால் வரும் பொருள்)
- 216) குரவம், பாதிரி ஆகியவை எந்தத் திணைக்குரிய பூக்கள்?(பாலை)
- 217) தாழை -எந்த திணைக்குரிய பூ?(நெய்தல்)
- 218) செங்கழுநீர் -எந்த திணைக்குரிய பூ?(மருதம்)
- 219) தோன்றி- எந்த திணைக்குரிய பூ?(முல்லை)
- 220) காந்தள்-எந்த திணைக்குரிய பூ?(குறிஞ்சி)
- 221) நீர்நாய் எந்த திணைக்குரிய விலங்கு?(மருதம்)
- 222) வலியிழந்த யானை எந்த திணைக்குரிய விலங்கு?(பாலை)
- 223) புன்னை ஞாழல் எந்த திணைக்குரிய மரங்கள்?(நெய்தல்)
- 224) இலுப்பை எந்த நிலத்திற்குரிய மரம்?(பாலை)
- 225) காஞ்சி எந்த நிலத்திற்குரிய மரம்?(மருதம்)
- 226) கொன்றை காயா எந்த நிலத்திற்குரிய மரங்கள்?(முல்லை)
- 227) அகில், வேங்கை எந்த நிலத்திற்குரிய மரம்?(குறிஞ்சி)
- 228) புறா எந்த நிலத்திற்குரிய பறவை?(பாலை)
- 229) குறும்பு எந்த நிலத்திற்குரிய ஊர்?(பாலை)
- 230) பாடி சேரி எந்த நிலத்திற்குரிய ஊர்கள்?(நெய்தல்)
- 231) சிறுகுடி எந்த நிலத்திற்குரிய ஊர்?(குறிஞ்சி)
- 232) பொய்கை எந்த நிலத்திற்குரிய நீர்?(மருதம்)
- 233) குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_______&______&________(குறிஞ்சி மருதம் நெய்தல்)
- 234) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?(வறுமை இல்லாமையால்)
- 235) தால்-பொருள் தருக(நாக்கு)
- 236) உழுவை-பொருள் தருக(புலி)
- 237) அகவுதல்-பொருள் தருக(அழைத்தல்)
- 238) ஏந்தெழில்-பொருள் தருக(மிகுந்த அழகு)
- 239) அணிமை-பொருள் தருக(அருகில்)
- 240) Aesthetics-கலைச்சொல் தருக(அழகியல்)
- 241) Artifacts-கலைச்சொல் தருக(கலைப்படைப்புகள்)
- 242) Terminology-கலைச்சொல் தருக(கலைச்சொல்)
- 243) Myth-கலைச்சொல் தருக.(தொன்மம்)
- 244) சிறந்த அமைச்சருக்கு உரிய இயல்புகள் எத்தனை?(5)
- 245) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
- 246) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)
- 247) இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
- 248) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்-இதில் வந்துள்ள அணி______(உவமை அணி)
- 249) தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்-இதில் வந்துள்ள அணி யாது?(வஞ்சப்புகழ்ச்சி அணி)
- 250) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)