M. P. Sivagnanam (Ma.Po.Si) - Sitragaloli 1 Mark Questions and Answers

M. P. Sivagnanam (Ma.Po.Si) - Sitragaloli 1 Mark Questions and Answers

சிற்றகல்ஒளி 1 மதிப்பெண் வினாக்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது?

1906

காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்?

தென் ஆப்பிரிக்கா

காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்?

1906

சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

1906

ம பொ சி பிறந்த ஆண்டு எது?

1906

ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன?

மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானம்

ம பொ சி பிறந்த நாள் எப்போது?

ஜூன் 26

ம பொ சி எங்கு பிறந்தார்?

சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் - சால்வன் குப்பம்

ம பொ சி யின் தந்தை யார்?

பொன்னுச்சாமி

ம பொ சி அவர்களின்தாயார் யார்?

சிவகாமி

ம பொ சி யின் இயற்பெயர் என்ன?

ஞானப்பிரகாசம்

ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்?

சரபையர் என்ற முதியவர்

ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்?

மூன்றாம் வகுப்பு

ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது?

மூன்றாம் வகுப்பில் நுழைந்த 7 ஆம் நாளோடு

ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது?

ம பொ சி அவர்களின் குடும்ப வறுமை காரணமாக

ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப் புத்தகங்கள்

பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்?

பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் துரத்திவிட்டார். அதை அவமானமாகக் கருதியதால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.

ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்?

பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்த மா பொ சி யை துரத்தி விட்டதால், அதை அவமானமாகக் கருதினர்.

ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்?

ஆசிரியரை வாயார வைதார்

ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?

  1. அரசாணி மாலை
  2. பவளக்கொடி மாலை

ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை?

சித்தர் பாடல்கள்

ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்?

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்

ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்?

தனது அறியாமையுடன்

ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்?

குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விடும் போது

ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்?

தம்மிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை

பேராயக் கட்சி எனப்படுவது எது?

காங்கிரஸ் கட்சி

காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது?

1931

அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை?

காந்தி-இர்வின் ஒப்பந்தம்

காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?

  1. தீண்டாமை விலக்கு
  2. கதர் விற்பனை

தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது?

செப்டம்பர் 30 ,1932

ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?

1932

மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?

தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக

தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?

  1. மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
  2. 300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.

தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது?

நூற்றுக் கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டிருந்தது

தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது?

பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது

ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?

'சி' வகுப்பு

இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?

1942 ஆகஸ்ட் 8

இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

1942

இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது?

பம்பாய் காங்கிரஸ் மாநாடு

இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்?

காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்

இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது?

1942 ஆகஸ்ட் 13

இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?

வேலூர்

இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?

அமராவதி

அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது?

கூரை துத்தநாக தகடுகளால் வேயப்பட்டு இருந்தது

வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது?

இந்திய விடுதலைக்கு மறுநாள்

வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்?

தமிழாசிரியர் மங்கலங்கிழார்

வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்?

தமிழாசிரியர் மங்கலங்கிழார்

ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?

சித்தூர்

தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது?

திருத்தணி, சென்னை

தமிழர் மாநாட்டை நடத்தியது யார்?

தமிழரசுக் கழகம்

தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது?

தமிழ் ஆசான் மங்கலங்கிழார்

வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை?

சித்தூர் புத்தூர் திருத்தணி

வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?

  1. இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
  2. பழனி சிறையிலிருந்த மாணிக்கம்

மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

சர்தார் கே எம் பணிக்கர்

மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன?

சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிடம் அளித்துவிட்டது

திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?

படாஸ்கர் ஆணையம்

இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எது?

சிலப்பதிகாரம்

தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்?

சிலப்பதிகாரம்

சிலம்புச் செல்வர் யார்?

ம பொ சி

தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?

இராஜாஜி

ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?

நீதிபதி வாஞ்சு ஆணையம்

தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது?

சென்னை மாநகராட்சி

தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது?

மாநகர தந்தை செங்கல்வராயன்

ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்?

பிரதமர் நேரு

ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது?

25-3-1953

மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்?

வடிவீஸ்வரம்

மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?

25-10-1946

மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?

வடிவை வாலிபர் சங்க ஆண்டு விழா

தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்?

தேவசகாயம், செல்லையா

இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்?

மார்ஷல் நேசமணி

தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது?

மார்சல் நேசமணி

கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?

1956 நவம்பர் 1

மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது?

நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபம் நிறுவியது.

பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?

10-10-1955

பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது?

மொழிவாரி மாநிலம் அமைப்பது.

பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை?

தேவிகுளம், பீர்மேடு

ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்?

மலையும் கடலும்

தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை?

புறநானூறு, சிலப்பதிகாரம்

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது?

வியன்னா

அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது?

எகிப்து

கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது?

கிபி இரண்டாம் நூற்றாண்டு

கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

ஆஸ்திரியா நாட்டின் வியன்னா அருங்காட்சியகத்தில்

கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது?

பாபிரஸ்

மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது?

எனது போராட்டம்

மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?

1952-1954

மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?

1972-1978

தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?

ம பொ சிவஞானம்

மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன?

திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் சிலை நிறுவியது

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?

1966