நிற்க அதற்குத் தக
இயல் 1
இதில் நீங்கள் செல்லும் வழி யாது?
இன்சொல் பேசுவதே எமது வழியாகும்
உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
இன்சொல் பேச முடியாத சூழலில் அமைதியாக இருந்து விடு. வன்சொல் பேசி விடாதே. பேசிய வார்த்தைகளை ஒருபோதும் திரும்பப் பெற இயலாது என நண்பருக்கு வழிகாட்டுவேன்.
இயல் 2
மேற்கண்ட அறிவிப்பை கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
- வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றச் செய்வேன்
- புயலின் போது வெளியே செல்வதைத் தவிர்ப்பேன்
- தொலைபேசி, மின் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தடுப்பேன்
- மீனவ நண்பர்களைக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கச் செய்வேன்
- மாடியில் இருப்பதைத் தவிர்த்து தளப் பகுதியிலேயே தங்கச் செய்வேன்
- வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்கு தொலைவிலும், மரங்கள் மின் கம்பிகள் உள்ள பாதைகள், நீர்வழிகள் ஆகியவற்றில் இருந்து விலகியும் வாகனங்களைச் செலுத்தச் செய்வேன்.
- காற்று அடிப்பது நின்றாலும் மறுபடி எதிர் திசையில் இருந்து வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே, காற்று அடிப்பது முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என அறிவுறுத்துவேன்.
இயல் 3
- துரித உணவுகளால் புதிது புதிதாக புற்றுநோய்கள் வருகின்றன.
- துரித உணவுகளில் மிகுதியான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் உடல் பருமனுக்கு வித்திடுகிறது
- உடலுக்குத் தேவையான சத்துக்கள் அதில் இருப்பதில்லை
- அதில், அளவுக்கதிகமான வேதிப்பொருட்கள், நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன
- அவை, குழந்தைகளின் சுவை நரம்புகளைத் தூண்டி துரித உணவுகளுக்கு அடிமையாகும் நிலையை வளர்த்துள்ளன.
- எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
- பழங்கள், பச்சைக் காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள், கீரைகள், பால், முட்டை உள்ளிட்ட சமச்சீர் உணவையே உட்கொள்ள வேண்டும்.
- உணவுமுறை பேணுவோம்; உடல்நலம் காப்போம்.
இயல் 4
- விளையாட்டு மைதானத்திற்கு சென்று சிறிது நேரம் நண்பர்களுடன் விளையாடி விட்டு வரச் சொல்லுவேன்
- ஓரிடத்தில் அமர்ந்து திறன்பேசியில் விளையாடுவதால் கண் பாதிப்படையும்; உடல் சோர்வடையும்; படிப்பில் கவனம் செலுத்த முடியாது; நல்ல மதிப்பெண்களை பெற இயலாது; நம்முடைய லட்சியத்தை அடைவதில் தொய்வு ஏற்படும் என்பதை எடுத்துக் கூறுவேன்.
- காணொளி விளையாட்டுகள் நமது நிலையை மறக்க செய்பவை. நிலை உலகில் நமது மனம் இல்லாமையால் தீங்கு வந்து சேரும். பெற்றோருக்கு உதவி செய்ய இயலாது. இந்த நிலை தொடர்ந்தால் உடல்நலக்குறைவு ஏற்படுவதுடன் மனநலம் பாதிப்படையும்; மனச் சிதைவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று அறிவுரை வழங்குவேன்.
- மனநலம் பேண யோகா செய்யச் சொல்வேன்.
- தாத்தா பாட்டியைச் சந்தித்து மகிழுமாறு கூறுவேன்.
இயல் 5
பள்ளியில் நான்
- உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்
- நண்பர்களுக்கு உதவி செய்வேன்
- வகுப்பறைத் தூய்மை காப்பேன்
வீட்டில் நான்
- அங்காடிக்கு சென்று வருவேன்
- செடி கொடிகளுக்கு நீர் ஊற்றுவேன்
- வீட்டின் தூய்மை காப்பேன்.
இயல் 6
- நாட்டுப்புற கலைகளைக் கற்றுக்கொள்ள முயல்வேன்.
- ஊர்த் திருவிழாக்களில் நாட்டுப்புறக் கலைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வேன்
- பள்ளி நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகளின் பெருமை பற்றி எடுத்துரைப்பேன்
- நாட்டுப்புறக் கலைகள் நமது பண்பாட்டின் விழுமியங்களாகத் திகழ்வதை நண்பர்களிடம் எடுத்துரைப்பேன்
- நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆதரவளிப்பேன்.
இயல் 7
- கல்வெட்டுச் செய்திகளைக் கட்டுரை ஆக்குவேன்
- கல்வெட்டுச் செய்திகள் மூலமாக நமது பண்பாட்டுப் பெருமையை வெளிக் கொணர்வேன்
- கல்வெட்டுகளைப் பாதுகாப்பேன்
- கல்வெட்டுச் செய்திகளை படியெடுத்து கணினியில் சேர்ப்பேன்
இயல் 8
நாம் செய்ய வேண்டுவன
- ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் மாற்றிப் பேசாதிருத்தல்
- பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல்
- எப்போதும் பிறருக்கு உதவத் தயாராக இருத்தல்
அறங்கள் தரும் நன்மைகள்
- எல்லாரும் விரும்புவர்
- எதையும் தாங்கும் மனவலிமை பெறலாம்
- தனக்குரிய செயலை உடனே முடிக்கும் வலிமை வளரும்.
இயல் 9
உதவி
விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யத் தெரியாதவருக்கு பூர்த்தி செய்து கொடுத்தேன்
மனநிலை
மகிழ்ச்சி அடைந்தேன்.