சங்க இலக்கியத்தில் அறம்
ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்
-
தமிழர்கள் இல்வாழ்க்கையை_________ஆகக் கொண்டனர்
விடையைக் காண்க
அற வாழ்க்கை
-
தமிழர் பொருள் ஈட்டி_______ செய்து இன்புற்றனர்
விடையைக் காண்க
அறம்
-
சங்ககாலத்தில் எதை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்?
விடையைக் காண்க
அறம்
-
உலகே பரிசாகக் கிடைத்தாலும் எச்செயல்களைச் செய்ய மறுத்தவர், தமிழர்?
விடையைக் காண்க
பழி தரும் செயல்களை
-
சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் எது?
விடையைக் காண்க
சங்க காலம்
-
மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு _______
விடையைக் காண்க
துளி
-
மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய______ பெருகுகிறது
விடையைக் காண்க
மகிழ்ச்சி
-
மனிதன் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான _______ஐ மனிதன் ஏற்க வேண்டும்.
விடையைக் காண்க
அறத்தை
-
அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதி எது?
விடையைக் காண்க
அறம்
-
அறநெறிக் காலம் என்பது எது?
விடையைக் காண்க
சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம் என்பர்.
-
அறநெறிக் கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க இலக்கிய அறங்கள்______
விடையைக் காண்க
இயல்பானவை
-
"கவிதை வாழ்க்கையின் திறனாய்வு" என்று கூறியவர் யார்?
விடையைக் காண்க
திறனாய்வாளர் ஆர்னால்டு
-
சங்க அறங்கள் __________களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல
விடையைக் காண்க
சமயங்கள்
-
அறம் செய்வதில்________ நோக்கம் இருக்கக் கூடாது
விடையைக் காண்க
வணிக
-
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது _______ மக்களின் கருத்தாக இருந்தது
விடையைக் காண்க
சங்ககால
-
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற _______ நோக்கு கூடாது என்று கூறப்பட்டது.
விடையைக் காண்க
வணிக
-
"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று குறிப்பிடும் இலக்கியம் எது?
விடையைக் காண்க
புறநானூறு
-
"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று பாடியவர் யார்?
விடையைக் காண்க
ஏணிச்சேரி முடமோசியார்
-
"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்ற பாடல் வரிகள் உணர்த்தும் கருத்து யாது?
விடையைக் காண்க
நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை தரும்
-
மன்னர்களிடம் உள்ள செங்கோலும் வெண்கொற்றக் குடையும் எதன் குறியீடாகப் போற்றப்பட்டன?
விடையைக் காண்க
அறத்தின் குறியீடாகப் போற்றப்பட்டன
-
'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', 'அறநெறி பிழையாத் திறனறி மன்னர்' என்ற பாடல் வரிகள் எதனைச் சுட்டுகின்றன?
விடையைக் காண்க
மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
-
அரசன் எதைப்போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ளவேண்டும்?
விடையைக் காண்க
செங்கோல்
-
அரசனின் கடமை யாது?
விடையைக் காண்க
நீர்நிலை பெருக்கி நில வளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது.
-
எதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்?
விடையைக் காண்க
அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
-
அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று பாடிய புலவர் யார்?
விடையைக் காண்க
ஊன்பொதிப் பசுங்குடையார்
-
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் இலக்கியம் எது?
விடையைக் காண்க
மதுரைக்காஞ்சி
-
"செம்மை சான்ற காவிதி மாக்கள்" என்று அமைச்சர்களைப் பாடுபவர் யார்?
விடையைக் காண்க
மாங்குடி மருதனார்
-
அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தவை எவை?
விடையைக் காண்க
அறம் கூறும் மன்றங்கள்
-
அறம் கூறு அவையம் பற்றி "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்று பாடும் இலக்கியம் எது?
விடையைக் காண்க
புறநானூறு
-
மதுரையில் இருந்த அற அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
விடையைக் காண்க
மதுரைக்காஞ்சி
-
தனிச்சிறப்பு பெற்ற அற அவையம் எது?
விடையைக் காண்க
உறையூர் அற அவையம்
-
துலாக்கோல் போல நடுநிலை மிக்க அற அவையம் எது?
விடையைக் காண்க
மதுரை அற அவையம்
-
போர் அறம் என்பது யாது?
விடையைக் காண்க
வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையே போர் அறம் ஆகும்
-
போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று கூறும் நூல் எது?
விடையைக் காண்க
புறநானூறு
-
தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று பாடியவர் யார்?
விடையைக் காண்க
ஆவூர் மூலங்கிழார்
-
"எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடும் இலக்கியம் எது?
விடையைக் காண்க
புறநானூறு
-
"எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடிய புலவர் யார்?
விடையைக் காண்க
ஆவூர் மூலங்கிழார்
-
உண்மையான மகிழ்ச்சி எது?
விடையைக் காண்க
தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி.
-
___________யை மறப்பது தான் மகிழ்ச்சி
விடையைக் காண்க
தன் மகிழ்ச்சி
-
"செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடிய புலவர் யார்?
விடையைக் காண்க
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
-
"செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடும் நூல் எது?
விடையைக் காண்க
புறநானூறு
-
கொடையின் சிறப்பால் போற்றப்படும் வள்ளல்கள் எத்தனை பேர்?
விடையைக் காண்க
7
-
வள்ளல்களின் கொடைப் பெருமையைப் பாடும் இலக்கியங்கள் எவை?
விடையைக் காண்க
சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
-
ஆற்றுப்படை இலக்கியங்கள் _________இலக்கியங்களாகவே உள்ளன
விடையைக் காண்க
கொடை
-
பதிற்றுப்பத்து_______ அரசர்களில் கொடைப் பதிவாகவே உள்ளது
விடையைக் காண்க
சேர
-
"இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன்" என்று போற்றப்படுபவர் யாவர்?
விடையைக் காண்க
வள்ளல்கள்
-
வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் வள்ளல் யார்?
விடையைக் காண்க
பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்
-
பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாராட்டுபவர் யார்?
விடையைக் காண்க
நக்கீரர்
-
"வள்ளலின் பொருள் இரவலனின் பொருள். வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை" என்று குறிப்பிடுவர் யார்?
விடையைக் காண்க
பெரும்பதுமனார்
-
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?
விடையைக் காண்க
அதியமான்
-
"உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்" என்று பாடியவர் யார்?
விடையைக் காண்க
அவ்வையார்
-
இரவலர் தேடி வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் யாருடைய இயல்பு?
விடையைக் காண்க
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
-
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய புலவர் யார்?
விடையைக் காண்க
நச்செள்ளையார்
-
மறுமை நோக்கிக் கொடுக்காதவன் யார்?
விடையைக் காண்க
பேகன்
-
"மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் பேகன்" என்று பாடியவர் யார்?
விடையைக் காண்க
பரணர்
-
"தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திருப்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் தருகிறது" என்று வருந்தியவர் யார்?
விடையைக் காண்க
பெருந்தலைச் சாத்தனார்
-
பெருந்தலைச் சாத்தனாரைப் பாடிய புலவர் யார்?
விடையைக் காண்க
குமணன்
-
எல்லாவற்றையும் கொடுப்பவன் யார்?
விடையைக் காண்க
மலையமான் திருமுடிக்காரி
-
"எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி" என்று பாடிய புலவர் யார்?
விடையைக் காண்க
கபிலர்
-
"ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டு விடுதல் மேலானது" என்று பாடும் நூல் எது?
விடையைக் காண்க
கலித்தொகை
-
தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கிய புலவர் யார்?
விடையைக் காண்க
பெருஞ்சித்திரனார்
-
தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளத்தைப் பலப்படுத்தும் இலக்கியம் எது?
விடையைக் காண்க
புறநானூறு
-
உதவி செய்தலை ஈழத்துப் பூதன்தேவனார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
விடையைக் காண்க
உதவியாண்மை
-
"பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று கூறும் இலக்கியம் எது?
விடையைக் காண்க
கலித்தொகை
-
கலித்தொகையை பாடியவர் யார்?
விடையைக் காண்க
நல்லந்துவனார்
-
"பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று பாடியவர் யார்?
விடையைக் காண்க
நல்லந்துவனார்
-
"உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்" என்று பாடியவர் யார்?
விடையைக் காண்க
நல்வேட்டனார்
-
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே என்று பாடும் இலக்கியம் எது?
விடையைக் காண்க
நற்றிணை
-
"உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும்" என்று பாடியவர் யார்?
விடையைக் காண்க
பெருங்கடுங்கோ
-
செல்வம் என்பது சிந்தையின் நிறைவு___________
விடையைக் காண்க
நிறைவு
-
நிறைவடைகிறவனே செல்வன் என்று கூறுவது எது?
விடையைக் காண்க
சீன நாட்டுத் தாவோவியம்
-
பிறருக்கு உதவாமல் மனிதத்திற்குக் கொடும்பாவி கட்டுவது _____காலத்தில் இல்லை.
விடையைக் காண்க
சங்க
-
______________ சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
விடையைக் காண்க
வாய்மையை
-
வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை வலியுறுத்தும் வரிகள் யாவை?
விடையைக் காண்க
பொய்யா செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா
-
_______ ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்
விடையைக் காண்க
நாக்கு
-
இன்பத்தின் கதவைத் திறப்பதும் துன்பத்தின் கதவைத் திறப்பதும் எது?
விடையைக் காண்க
நாக்கு
-
______ பேசும் நா மனிதனை உயர்த்துகிறது.
விடையைக் காண்க
மெய்
-
______ பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது
விடையைக் காண்க
பொய்
-
'பிழையா நன்மொழி' என்று வாய்மை பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
விடையைக் காண்க
நற்றிணை
-
நிலம் புடை பெயர்ந்தாலும் ____ சொல்லக்கூடாது
விடையைக் காண்க
பொய்
-
தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் _______தரமானது
விடையைக் காண்க
மூன்றாம்
-
சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் _______தரமானது
விடையைக் காண்க
இரண்டாம்
-
இயல்பாக அறியும் அறம் ______தரமானது
விடையைக் காண்க
முதல்
-
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான _______ தரமான அறங்கள்.
விடையைக் காண்க
முதல்
-
போதிதர்மர் எந்த நூற்றாண்டில் சீனாவிற்குச் சென்றார்?
விடையைக் காண்க
6
-
போதிதர்மர் சீனாவில் எந்தத் தத்துவத்தைப் போதித்தார்?
விடையைக் காண்க
பவுத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவு
-
ஜென் தத்துவம் உருவாகக் காரணமானவர் யார்?
விடையைக் காண்க
போதிதர்மர்
-
போதிதர்மர் யார்?
விடையைக் காண்க
கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர்
-
போதி தர்மருக்கு சீனர்கள் செய்த கைம்மாறு என்ன?
விடையைக் காண்க
போதி தர்மருக்குச் சீனர்கள் கோவில் கட்டிச் சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்.
-
ஜென் தத்துவம் எதிலிருந்து உருவானது?
விடையைக் காண்க
போதி தர்மரின் தத்துவப் போதனையில் இருந்து