மங்கையராய்ப் பிறப்பதற்கே - 1 மதிப்பெண் வினாக்கள்
1.தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐநா அவையில் பரப்பும் வகையில் அங்கு தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர் யார்?
விடை: எம்எஸ் சுப்புலட்சுமி
2.'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் யார்?
விடை: எம் எஸ் சுப்புலட்சுமி
3.இசைப் பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்?
விடை: எம்எஸ் சுப்புலட்சுமி
4.எம் எஸ் சுப்புலட்சுமி பெயர் விரிவாக்கம் தருக.
விடை: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
5.எம் எஸ் சுப்புலட்சுமிக்கு முதல் குரு யார்?
விடை: எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார்
6.எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார் எவ்வகை இசைக் கலைஞர்?
விடை: வீணை
7.எம் எஸ் சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை கல்வி கற்றார்?
விடை: ஐந்தாம் வகுப்பு
8.எம்எஸ் சுப்புலட்சுமி எந்த வயதில் சென்னை மியூசிக் அகடமியில் கச்சேரி செய்தார்?
விடை: 17
9.எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் எது?
விடை: மீரா
10.எம் எஸ் சுப்புலட்சுமியின் கடைசி திரைப்படம் எது?
விடை: மீரா
11.எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பாடல்கள் எவை?
விடை: காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்
12.எம் எஸ் சுப்புலட்சுமி எதைப் பெருமையாக கருதினார்?
விடை: ஜவர்கலால் நேரு, சரோஜினி நாயுடு போன்ற பெரியவர் பாராட்டியதை...
13.எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய பாடல்களில் எந்தப் பாடலை காந்தியடிகள் பாராட்டினார்?
விடை: ரகுபதி ராகவ ராஜாராம்
14.காந்தியடிகள் எம்எஸ்சுப்புலட்சுமியிடம் எந்தப் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்?
விடை: ஹரி தும் ஹரோ
15.ஹரி தும் ஹரோ பாடல் சென்னை வானொலியில் எந்த ஆண்டு ஒளிபரப்பானது?
விடை: 1947 காந்தி அடிகள் பிறந்த நாள் அன்று.
16.எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி தாமரையணி விருது பெற்றார்?
விடை: 1954
17.எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமி ஹெலன் கெல்லரால் பாராட்டு பெற்றார்?
விடை: 1963
18.எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி ஐநா சபையில் பாடினார்?
விடை: 1966
19.எந்த ஆண்டு முதல் எம்எஸ் சுப்புலட்சுமியின் குரல் திருப்பதியில் ஒலித்தது?
விடை: 1966
20.எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமிக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது?
விடை: 1974
21.மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?
விடை: எம்எஸ் சுப்புலட்சுமி
22.இந்திய மாமணி விருது எம் எஸ் சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்ட ஆண்டு எது?
விடை: 1998
23.இந்தியாவின் மிக உயரிய விருது எது?
விடை: இந்திய மாமணி
24.பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டு இருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் யார்?
விடை: பாலசரஸ்வதி
25.பாலசரஸ்வதி இந்திய அரசு வழங்கிய விருது எது?
விடை: தாமரைச் செவ்வணி
26.சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சியைப் பாலசரஸ்வதி தொடங்கியபோது வயது என்ன?
விடை: 15
27.மரபுசார் நாட்டியத்தை பலரும் தீவிரமாக வரவேற்கக் காரணமாக இருந்தவர் யார்?
விடை: பாலசரஸ்வதி
28.'ஜன கண மன' பாடலை பாலசரஸ்வதி மெய்ப்பாடுகளுடன் எங்கெங்கு நடனமாடியுள்ளார்?
விடை: கல்கத்தாவிலும் காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாடு மற்றும் சென்னையில் நடந்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் கண்காட்சி.
29.பரத நாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தவர் யார்?
விடை: பாலசரஸ்வதி
30.எந்தக் கலையை முறையாக அணுகினால் ஆன்மீகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும்?
விடை: பரதநாட்டியக் கலை
31.தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக் காரணமாக இருந்தவர் யார்?
விடை: பாலசரஸ்வதி
32.தமிழில் எழுதிய பெண்களில் முதல் முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டி கதைகள் எழுதியவர் யார்?
விடை: ராஜம் கிருஷ்ணன்
33.ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?
விடை: வேருக்கு நீர்
34.ராஜம் கிருஷ்ணன் எழுதிய பாரதியின் வரலாற்று புதினம் எது?
விடை: பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
35.தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைச் சொல்லும் புதினம் எது?
விடை: கரிப்பு மணிகள்
36.நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து பதிவு செய்த புதினம் எது?
விடை: குறிஞ்சித் தேன்
37.கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களை பேசும் புதினம் எது?
விடை: அலைவாய்க் கரையில்
38.அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினங்கள் எவை?
விடை: சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர்
39.தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய புதினம் எது?
விடை: கூட்டுக் குஞ்சுகள்
40.பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புதினம் எது?
விடை: மண்ணகத்துப் பூந்துளிகள்
41.ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோள் யாது?
விடை: எழுத்துக்களில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்.
42.மதுரையின் முதல் பட்டதாரி பெண் யார்?
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
43.சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர் யார்?
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
44.சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர் யார்?
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
45.நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போராடிக் கல்வி கற்றவர் யார்?
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
46.உழுபவனுக்கே நிலம் உரிமை இயக்கம் தொடங்கியவர் யார்?
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
47."உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்" என்பது யாருடைய கூற்று?
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
48.காந்திய சிந்தனைகளால் ஈர்கப்பட்டு கணவருடன் பூதான இயக்கத்தில் இணைந்து பணிபுரிந்தவர் யார்?
விடை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
49.களஞ்சியம் என்பது யாது?
விடை: மகளிர் சுய உதவிக் குழு
50.2018இல் தமிழக அரசின் ஔவை விருது பெற்றவர் யார்?
விடை: சின்னப்பிள்ளை
51.சின்னப்பிள்ளை இந்திய நாட்டின் முதன்மை அமைச்சரிடம் இருந்து பெற்ற விருது யாது?
விடை: பெண் ஆற்றல் விருது
52.சின்னப்பிள்ளை இந்திய நாட்டின் முதன்மை அமைச்சரிடம் இருந்து பெற்ற விருது யாது?
விடை: பெண் ஆற்றல் விருது