Purapporul Ilakkanam 1 Mark Questions and Answers | Tamil Grammar

Purapporul Ilakkanam 1 Mark Questions and Answers | Tamil Grammar

புறப்பொருள் இலக்கணம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. வெட்சி என்பது யாது? ஆநிரை கவர்தல்
  2. கரந்தை என்பது யாது? ஆநிரை மீட்டல்
  3. வஞ்சி என்பது யாது? மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது
  4. காஞ்சி என்பது யாது? மாற்று அரசனோடு எதிர்த்து போரிடுவது
  5. நொச்சி என்பது யாது? மதில் காத்தல்
  6. உழிஞை என்பது யாது? கோட்டையை சுற்றி வளைத்தல்
  7. தும்பை என்பது யாது? வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
  8. வாகை என்பது யாது? வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூவைச் சூடி மகிழ்வது
  9. பாடாண்திணை என்பது யாது? ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது
  10. பொதுவியல்திணை என்பது யாது? வெட்சி முதல் பாடாண்திணை வரை சொல்லாத செய்திகளைப் பொதுவாகக் கூறுவது
  11. கைக்கிளை என்பது யாது? ஒருதலைக் காமம்
  12. பெருந்திணை என்பது யாது? பொருந்தாக் காமம்
  13. இட்லிப் பூ எனப்படுவது எது? வெட்சிப் பூ
  14. கரந்தையின் வேறு பெயர் என்ன? கொட்டைக்கரந்தை
  15. பஞ்சு போன்ற நுண்மயிர் உடைய பூ எது? வஞ்சி
  16. முடக்கத்தான் பூ என்பது எது? உழிஞை
  17. வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி எது? தும்பை
  18. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற, மணம் உள்ள பூ எது? காஞ்சிப் பூ
  19. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற மருதநிலப் பூ எது? நொச்சி
  20. கொத்துக் கொத்தாகப்பூக்கும் மங்கிய வெள்ளை நிறப் பூ எது? வாகை