9th Tamil Iyal 4 Uyirvagai Book Back Questions and Answers | Samacheer Kalvi

9th Tamil Iyal 4 Uyirvagai Book Back Questions and Answers | Samacheer Kalvi

கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

இயல் நான்கு

உயிர்வகை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்

ஆ) தொடு உணர்வு

இ) கேட்டல்

ஈ) காணல்

ஆ) தொடு உணர்வு

குறுவினா

1. மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே - இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் அட்டவணை

சிறுவினா

1. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?

அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் தொடர்புபடுத்தும் அட்டவணை

கற்பவை கற்றபின்

1. அ) தட்டான் பூச்சி தாழப்பறந்தால் தப்பாமல் மழை வரும்.

ஆ) வானில் பறக்குது குதிரை பறக்கப் பறக்க வால் குறையும் குதிரை - அது என்ன?

விடை : விமானம்

இவை போன்ற அறிவியல் செய்திகள் கொண்ட பழமொழிகள், விடுகதைகளைப் படித்தும் கேட்டும், அவற்றின் அறிவியல் அடிப்படையை வகுப்பறையில் கலந்துரையாடுக.

அறிவியல் சார்ந்த பழமொழிகள் விடுகதைகள்

விடுகதைகள்

1. செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன், கையிலும் வைக்கலாம், பையிலும் வைக்கலாம், நானின்றி இன்று மனித உயிர்கள் இல்லை. நான் யார்?

விடை : அலைபேசி

2. காற்றுப் புக முடியாத இடத்திலும் நான் புகுவேன். எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள தன்மையை செய்தியாகப் புகைப்படமாக அனுப்புவேன். ஆராய உகந்தவன். நான் யார்?

விடை : செயற்கைக்கோள்

பழமொழிகள்

1. அறிவை மேம்படுத்துவது அறிவியல்.

2. அறிவியல் இல்லாத ஆன்மீகம் முடமாகும்.

3. ஆறாவது அறிவே அறிவியல்.

4. அறிவியல் அறிவை மேம்படுத்தும்; அறிவு வாழ்வை மேம்படுத்தும்.

5. இன்றைய அறிவியலே நாளைய தொழில்நுட்ப வளர்ச்சி.

2. ‘விமான நிலையத்தில் நான்’ - கற்பனையாகக் கதை ஒன்றினை எழுதுக.

விமான நிலையத்தில் நான்

(கற்பனைக் கதை)

அன்று காலையில் இருந்தே எனக்குள் ஒரே பரபரப்பு... இனம் புரியாத குதூகலம் என மனதுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி பதற்றம் என ஒரு மாதிரியான உணர்வுகள் வந்து போய்க் கொண்டிருந்தன.

ஏன் தெரியுமா. நான் முதன் முதலில் விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி சுற்றுலா செல்லப் போகிறேன் குடும்பத்தில் எல்லோரும் என்னைப் போன்றே இருந்தனர்.

என் தந்தை, என் பெரிய சகோதரர் எல்லாரும் முன்பே விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார்கள். நான் மட்டும் தான் முதன் முதலில் விமானத்திலும் பயணம் செய்யப் போகப் போகிறேன் விமான நிலையத்துக்குள்ளும் செல்லப் போகிறேன்.

புறப்படும் வேளை வந்தது ...... ஆர்வத்துடன் அவரவர் பயணச் சுமைகளுடன் வாகனத்தில் ஏறினோம். வாகனம் விரைந்து சென்றது விமான நிலையம் நோக்கி......

குறிப்பிட்ட எல்லை வரைதான் வாகனத்தை அனுமதித்தார்கள் உள்ளே மெதுவாக படபடப்புடன் நுழைந்தேன்....

ஒலி பெருக்கியில் அறிவிப்பு ஒரு புறம். மின் எழுத்துகளில் அறிவிப்பு பலகைகள் ஒரு புறமாய் ஆரவாரமாய் இருந்தது.

நுழைவுவாயிலைக் கடந்தேன்... சோதனையிடுவதற்கு அழைத்தார்கள் அனுமதிக்கப்படாத பொருள்கள் நாம் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறார்கள்.

எங்கள் விமானம் வருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சென்று விட்டோம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நிகழ்வும் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துவதாய் இருந்தது.

திடீரென்று விமானநிலையத்தில் பரபரப்பு ....... செய்தியாளர்கள் தடதடவென ஓடி வந்தனர். என்னவென்று விசாரித்தால் தற்பொழுது வந்து தரை இறங்கிய விமானத்தில் இருந்து பிரபல தமிழ் கவிஞர் ஒருவரும், அரசியல் தலைவர் ஒருவரும் வருகிறார்களாம்..... அவர்களுள் அரசியல் தலைவரை நேர் காணல் செய்வதற்காக செய்தியாளர்கள் ஓடிவந்தனர்.... அதனையும் கண்டு களித்தேன்......

நாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானம் வருவதற்கான அறிவிப்பு வந்தது, ஓடு தளத்தில் நின்ற விமானத்தில் ஏறுவதற்கான ஆயத்தப் பணிகளாக முதலில் எங்கள் கூடுதல் சுமைகளை எடுத்தனர்.

பின்னர் வாகனத்தில் எங்களை ஏறச்செய்து, பிரம்மாண்டமான ஓடுதளத்தில் கம்பீரமாக நின்ற விமானத்தின் அருகில் கொண்டு நிறுத்தினார்கள்.

வாகனத்தில் இருந்து இறங்கி விமானத்தில் விமானப்பணிப் பெண்ணின் இனிய வரவேற்போடு விமானத்துக்குள் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்து.... மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் செய்தோம்.