கேள்விகள் மற்றும் பதில்கள்
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
கவிதைப்பேழை
இயல் நான்கு: ஓ, என் சமகாலத் தோழர்களே!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பின்வரும் தொடரைப் படித்து ‘நான் யார்’ என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்.
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.
குறுவினா
1. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.
பொறுமை, அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
சிறுவினா
1. 'என் சமகாலத் தோழர்களே " கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
- அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள். பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள்.
- அடுத்தவர் ஏவுகின்ற திசையில் நோக்கமில்லாமல் செல்லும் அம்பைப்போல் இருந்த மக்கள் இனத்தை மாற்றுங்கள். ஏவுகணை செலுத்துவதிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிகளிலும் ஏற்றிச் செலுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.
கற்பவை கற்றபின்
1. அறிவியல் செய்திகளை வெளிப்படுத்தும் கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
-
அ) நீர்நின் றிளகிற் றிதுவேண்டா
- சீவகசிந்தாமணி (காந்தருவதத்தை இலம்பகம்)அறிவியல் செய்தி: மரத்தில் செய்யப்படும் வீணையே இன்னிசை எழுப்ப ஏற்றது. மரத்தின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அதில் மோதும் ஒலி அலைகளின் அதிர்வெண்ணும் வேறுபடும். சீவகன், தத்தை கொடுத்த யாழினை ஆராயும் போது, நீரில் இருந்து ஊறிய மரத்தால் செய்யப்பட்ட யாழில், அதிர்வெண் வேறுபட்டு சமச்சீரற்று காணப்படும் என்பதால் “நீர்நின் றிளகிற் றிதுவேண்டா” என்றான்.
-
ஆ) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” – ஔவையார்
“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” – கம்பர்அறிவியல் செய்தி: அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்ற இன்றைய அறிவியலை நம் கவிஞர்கள் அன்றே தம் கவிதைகளில் கூறியுள்ளனர். அணுசேர்ப்பும், அணுப்பிரிப்பும் பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளன.
-
இ) “அகல்வயல் பொழிந்தும் ........ உறுமிடத் துதவா உவர்நிலம்.......” - புறநானூறு பரணர்
“பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்அறிவியல் செய்தி: எவ்வளவு மழை பொழிந்தாலும் "களர்நிலம்” என அழைக்கப்படும் உவர்நிலம் எதற்கும் உதவாது என்ற மண்ணியல் அறிவியலைக் கூறுகிறது.
இவ்வாறு நம் தமிழ்ப் புலவர்கள் இயற்றிய கவிதைகள் பல, நமக்கு அறிவியல் செய்திகளைக் கூறுவதாக உள்ளன என்பதை மறுக்க இயலாது.
2. விமானமும் ஏவுகணையும் பேசிக்கொள்வது போல ஓர் உரையாடலைக் குழுவாகச் சேர்ந்து உருவாக்குக.
விமானம் : வணக்கம்! ஏவுகணை அவர்களே!
ஏவுகணை : வணக்கம்! வணக்கம் !
விமானம் : ஐயா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
ஏவுகணை : எனக்கும் மகிழ்ச்சி
விமானம் : என் பெயர் விமானம். நான், மக்களை நாடுவிட்டு நாடு செல்ல உதவும் பொருட்டு வானில் பறப்பேன். அதனால் என்னை வானூர்தி என்றும் அழைப்பர்.
ஏவுகணை : அப்படியா! நான் அதற்கும் மேலே பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மேலே சென்று செயற்கைகோள்களை அதனதன் பாதையில் நிறுத்துவேன்.
விமானம் : அப்படியா கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதே. என்னை இயக்க விமானி துணை விமானி எல்லாம் இருப்பார்கள். உங்களை இயக்க....
ஏவுகணை : ஆளெல்லாம் இருக்கமாட்டார்கள். ஏவு ஊர்தியில் என்னை நிறுத்தி, இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே எண்நிலை (count down) தொடங்கி கண்காணித்து, குறிப்பிட்ட நேரம் வந்தவுடனே என்னை மிக வேகமாக ஏவி விடுவார்கள். நானே குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விடுவேன்.
விமானம் : என்னை பூமியில் இருந்து கண்காணிப்பது போல் உங்களையும் கண்காணிப்பார்களா!
ஏவுகணை : ஆம்! என்னையும் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
விமானம் : நன்றி!!
ஏவுகணை : நன்றி!!
3. பாடலில் அமைந்துள்ள தொடைநயங்களை எழுதுக:
கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை .
கிளிக்கு,கிழக்கு- முதல் எழுத்து ஒன்றிவந்து “மோனை நயம்” உள்ளது.முளைக்கும்-முளைக்கத்
இதில், முதல் எழுத்து ஒன்றிவந்து "சீர் மோனை' நயமும்
இரண்டாம் எழுத்து ஒன்றி வந்து "சீர் எதுகை" நயமும் இடம் பெற்றுள்ளது.தூரமில்லை-பாரமில்லை
இதில் “மில்லை " என்னும் இறுதி சீர் ஒன்றி வந்து “இயைபுத் தொடை" நயம் அமைந்துள்ளது.