Tamil Picture Comprehension Answer Key: A Poem on Humanity (Iyal 9)

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக - இயல் 9: மனிதம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 9

தலைப்பு: மனிதம்

காட்சியில் ஒருவர் பிச்சையிட, மற்றொருவர் தன்பி (செல்ஃபி) எடுக்கிறார்.

எல்லாம் இழந்த கணம்!

ஈயென இரங்கும் மனம்!

பணம் இடுவர் சிலர்!

சினம் இடுவர் சிலர்!

தன்பி எடுப்போரும் உளர்!!

வாடும் உடலும் தினம்!

வாழ்வும் சில்லறைப் பணம்!

காட்சியில் மனிதம் பிணம்!

காணும் என்மனம் கனம்!

பெருக வேண்டும் தானம்!

விளக்கம்

மனம் வாடிய பின்னரே உடல் வாடத் தொடங்குகிறது. 'மனமும் உடலும்' என்று கூறுவதற்குப் பதிலாக, 'வாடும் உடலும் தினம்' என்று கூறப்பட்டது. தினம் தினம் சேரும் சில்லறைகளால் வாழ்வு அமைகிறது. அதனால், 'வாழ்வும் சில்லறைப் பணம்' என்று கூறப்பட்டது.

ஈகைப் பண்பு இயல்பாக இல்லாமல் 'தற்பெருமைக்காக' என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், 'காட்சியில் மனிதம் பிணம்' என்று கூறப்பட்டது.

-Omtex Classes