Katchiyai Kandu Kavinura Ezhuthuga | Maram Valarthiduga Poem Explanation | Iyal 5

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: மரம் வளர்த்திடுக!

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 5

மரம் வெட்டப்பட்டதன் விளைவாக வறண்ட நிலத்தில் நிற்கும் ஒரு சிறுவன்.

தலைப்பு: மரம் வளர்த்திடுக!

மரம் அழித்த மானிடர்..!

வரம் இழந்து போயினர்..!

சோலைகள் பாலைகள் ஆயின...

சுவாசமும் சுவர்க்கமும் ஏகின...

கரும்பலகையில் மரம் வரைந்து

கற்பதில் ஏது பயன்?

உணவும் உயிரும் தந்திடும்!

உணர்வும் ஊக்கமும் தந்திடும்!

உள்ளம் தெளிந்து,

விருட்சம் வளர்த்து,

பெறுக நற்பயன்!

சுவாசமும் சுவர்க்கமும் ஏகின- முன்னர் மரங்கள் அடர்ந்து இருந்தமையால் உண்டான இளம் தென்றலின் நல்ல சுவாசமும், அதனால் உண்டான இனிய சுவர்க்கமும் பூமியை விட்டு நீங்கின.