Kaatchiyai Kandu Kavinura Ezhuthuga: Oyilattam Poem and Explanation | Iyal 6

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: ஒயிலாட்டம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 6

A group of men performing Oyilattam, a traditional Tamil folk dance.

தலைப்பு: ஒயிலாட்டம்

காலின் சலங்கையில் கனவுகள் நில்லும்!

கைச்சிறு துணியில் காரியம் செல்லும்!

இடுப்பின் கச்சையில் ஈரம் சிந்தும்!

உருமியின் ஓசையில் உணர்ச்சிகள் உந்தும்!

ஒய்யார ஆட்டத்தில் வீரமே முந்தும்!

தாளத்தின் நீளத்தில் தாவலும் இருக்கும்!

ஒத்த அசைவில் ஓர்மை ஒளிரும்!

கலையின் நிறைவில் கண்கள் மிளிரும்!

விளக்கம்:

காலின் சலங்கையில் கனவுகள் நில்லும் - ஒயிலாட்டம் ஆடுபவர், காலில் சலங்கை கட்டி ஆடுவர். எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொருவருக்கும் உண்டு. அத்தகைய கனவுகளை ஒவ்வொருவரும் சுமப்பர். இங்கு, ஒயிலாட்டம் ஆடுபவர் தங்களுடைய கனவுகளை தம்முடைய காலின் சலங்கையில் சுமப்பதாக உருப்படுத்தப்பட்டுள்ளது.

கைச்சிறு துணியில் காரியம் செல்லும் - ஆண்கள் அனைவரும் கையில் சிறு துணியை பிடித்துக்கொண்டு ஒரே மாதிரியாக அசைத்து ஆடுவர். யாருடைய தவறும் அங்கு இருக்காது. காரியம் சிறப்பாக இருக்கும்.

இடுப்பின் கச்சையில் ஈரம் ஒழுகும் - ஆண்கள் வேகமாக காலை எடுத்து வைத்து ஆடும் போது உண்டாகும் வியர்வைத் துளிகளால், இடுப்பில் கட்டியிருக்கும் கச்சையானது நனைந்து வியர்வைத்துளிகள் ஒழுகும். ஆட்டத்தின் கடினத்தன்மை இங்கு கூறப்பட்டுள்ளது.

உருமியின் ஓசையில் உணர்ச்சிகள் உந்தும் - ஒயிலாட்டத்தின் போது இசைக்கப்படும் உருமியின் ஓசையானது, ஆடுபவர், பார்ப்பவர் ஆகியோர் அனைவரது உணர்ச்சிகளையும் உந்தித் தள்ளும்.

ஒய்யார ஆட்டத்தில் வீரமே முந்தும் - ஒரே மாதிரியான இடைவெளியில், ஒரே மாதிரியாக ஆடும் ஆட்டத்தில் ஆண்களின் வீரம் புலப்படும்.

தாளத்தின் நீளத்தில் தாவலும் இருக்கும் - இசைக்கப்படும் காலத்திற்கு ஏற்றார் போல, ஆண்கள் தாவி ஆடுவர்.

ஒத்த அசைவில் ஓர்மை ஒளிரும் - ஒரே மாதிரியான சலங்கை. ஒரே மாதிரியான கச்சை. ஒரே மாதிரியான கைக்குட்டை அல்லது துணி. ஒரே மாதிரியான நடனம். ஒரே மாதிரியான பாவனை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஓர்மை புலப்படும்; ஒற்றுமை வெளிப்படும்.

கலையின் நிறைவில் கண்கள் மிளிரும் - ஒயிலாட்டம் முடிந்தபின்பு ஆடிய ஆடவர் கண்களில் ஒரு நிறைவு வெளிப்படும். அந்த நிறைவில் அவர்களது கண்கள் ஒளிரும்.