10th Tamil Iyal 3 Pa Nayam Parattal | Kalamegam Poem Appreciation

10th Tamil Iyal 3 Pa Nayam Parattal | Kalamegam Poem Appreciation

இயல் 3, பா நயம் பாராட்டல்

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்

திரண்ட கருத்து

கவி காளமேகப் புலவரின் கவிதைகளில் சிலேடை நயம் மிகுந்து இருக்கும். இப்பாடலில் செம்மொழிச் சிலேடை பயின்று வந்துள்ளது.

கருத்து:1

‘ஒலிக்கும் கடல் சூழ்ந்த நாகைப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலைப்பொழுதில் அரிசி வந்து சேரும்; அதனைக் குத்தி உலையில் போட ஊரே அடங்கும் முன்னிரவாகும்; சமைத்துப் பரிமாறும் பொழுது வெள்ளி முளைத்துவிடும். அதாவது விடிந்துவிடும்’ என்பது பாடற்பொருள். இதுவும் ஒரு சத்திரமோ? என்னும் குறிப்பைத் தருகிறது இப்பாடல்.

கருத்து: 2

ஆர்ப்பரிக்கும் கடல் சூழ்ந்த நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரின் சத்திரத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுவதால் இருட்டும் வரை அரிசி வந்துகொண்டிருக்கும். பகல் முழுதும் அரிசி குத்துவதும் உலையிலிடுவதும் அன்னமிடுவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஊராரின் பசி அடங்கும். ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இட, அது 'வெள்ளி' எனத் தோன்றும்.

பொருள் நயம்

"அத்தமிக்கும்போது அரிசி வரும், உலையிலிட ஊரடங்கும், இலையிலிட வெள்ளி எழும்" ஆகியவை ஆழமான பொருள் உடையன

சந்த நயம்

'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது.

"அத்தமிக்கும் போது அரிசி வரும்- குத்தி உலையில் இட ஊர் அடங்கும்" என்ற வரிகளில் இனிமையான சந்தநயம் பயின்று வந்துள்ளது.

தொடை நயம்

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, முரண், இயைபு ஆகிய தொடை நயங்கள் பயின்று வந்துள்ளன.

மோனை நயம்

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் ஆகும். "படைக்கு அழகு யானை பாடலுக்கு அழகு மோனை" என்பதற்கு ஏற்ப,

  • த்துக்கடல் - காத்தான்
  • த்தமிக்கும்போது - ரிசி
  • லையிலிட - ரடங்கும்
  • கப்பை - ன்னம்

என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

எதுகை நயம்

முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

  • த்துகடல் - அத்தமிக்கும் - குத்தி
  • லையிலிட - இலையிலிட

என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.

முரண் நயம்

முரண்பட்ட சொற்களால் அமைவது முரண்நயம் ஆகும்.

'அத்தமிக்கும் × வெள்ளி எழும் ' என்ற சொற்கள் முரண் சுவையைத் தருகின்றன.

இயைபு நயம்

பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபுநயம் ஆகும்.

  • அரிசி வரும்
  • வெள்ளி எழும்

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணிநயம்

'அணி இல்லாத கவிதை பணி இல்லாத வனிதை' என்பார்கள். இப்பாடலில், சொற்கள் பிரிவுபடாமல் நின்று இருபொருள்களைத் தருகின்றன. எனவே, இது 'செம்மொழி சிலேடை அணி' ஆகும்.

பா வகை

வெண்பாவிற்கான பொது இலக்கணங்களைப் பெற்று, இரண்டாம் அடியின் ஈற்றில் தனிச்சொல் பெற்று இரு விகற்பத்தான் வந்துள்ளது. எனவே, இது இருவிகற்பத்தான் வந்த 'நேரிசை வெண்பா' ஆகும்.