3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : கனிம வளங்கள்
கனிம வளங்கள்
கற்றல் நோக்கங்கள்: மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
அலகு 2
கனிம வளங்கள்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
புதியதாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டில், மின்னிணைப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன, அங்கு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உரையாடல் நடைபெறுகின்றது. மகன் தரையிலிருந்து காப்பிடப்பட்ட ஒரு தாமிரக் கம்பியை எடுக்கிறான்.
மகன்: அப்பா, இது என்ன?
தந்தை: இது ஒரு மின்கம்பி. வீட்டில் மின் இணைப்பு கொடுக்க நாம் இதைப் பயன்படுத்துகிறோம்.
மகன்: நீல நிறத்தில் தடிமனான மின்கம்பியினுள் மெல்லிய உலோகக் கம்பிகள் உள்ளனவே?
தந்தை: ஆம். அந்த மெல்லிய உலோகக் கம்பிகள் தாமிரத்தால் ஆனவை.
மகன்: தாமிரமா?
தந்தை: ஆம். இன்று உலகில் அதிகமாகப் பயன்படும் கனிமங்களுள் தாமிரம் ஒன்றாகும்.
மகன்: பள்ளியில் கனிமங்கள் பற்றிப் படித்தேன். அவை மிகவும் பயனுள்ளவை எனவும் பூமியில் இயற்கையாகவே காணப்படுகின்றன எனவும் அறிந்துகொண்டேன்.
தந்தை: நீ சொல்வது சரிதான். தாமிரமும் அத்தகைய கனிமங்களுள் ஒன்றாகும். தாமிரம், சிறந்த மின் கடத்தியாகவும் (Conductor) உள்ளது.
மகன்: அப்படியா!
தந்தை: ஆமாம். கணினி, தொலைக்காட்சி, செல்பேசி முதலான அனைத்து மின் கருவிகளிலும் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது.
நாம் அறிந்து கொள்வோம்.
இயற்கை வளங்கள் நமக்கு முக்கியம். ஏனென்றால், அவை உணவு, உடை, தங்குமிடம் போன்ற மனிதனின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
செயல்பாடு
நாம் செய்வோம்.
கோடிட்ட இடங்களை நிரப்புக. (தங்கம், இரும்பு, தாமிரம்)
மகன்: அப்படியா? இதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லையே! வேறு பல கனிமங்களின் பயன்கள் பற்றியும் கூறுங்கள், அப்பா .
தந்தை: பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மற்றொரு கனிமம், இரும்புத் தாது. இது முக்கியமாக இரும்பு உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
மகன்: இரும்பின் பயன்கள் யாவை?
நாம் அறிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டின் கஞ்சமலையில் இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன.
தந்தை: வாகனங்கள், இயந்திரங்கள், இரயில் தடங்கள், கப்பல்கள், கட்டடங்கள், தளவாடங்கள், காகித கிளிப்புகள், கருவிகள், மிதிவண்டிகள் போன்ற ஆயிரக்கணக்கான பொருள்களைத் தயாரிக்க இரும்பு பயன்படுகிறது.
இயற்கை வளங்களைப் பயன்படுத்தினால் மீண்டும் புதுப்பிக்க இயலாது. எனவே இவை புதுப்பிக்க இயலாத வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிந்தனை செய்
நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை புதைபடிவ எரிபொருள்கள் ஆகும். இரும்பு, தாமிரம், பாக்சைட், தங்கம், வெள்ளி போன்றவை கனிம வளங்கள் ஆகும்.
நாம் அறிந்து கொள்வோம்.
புதுப்பிக்க இயலாத வளங்களை மூவகையாகப் பிரிக்கலாம். அவை:
மகன்: வியப்பாகவுள்ளது. தங்கத் தாது ஒரு கனிமமா?
தந்தை: ஆம். தங்கத் தாதுவிலிருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. தங்கம் மிகவும் விலை உயர்ந்த (Precious) உலோகமாகக் கருதப்படுகிறது.
மகன்: அதனால்தான் நகைகளைத் தயாரிப்பதில் இது பயன்படுத்தப்படுகிறது.
தந்தை: நீ சொல்வது சரிதான். தங்கம் கூட மின்சாரத்தைக் கடத்தும் ஓர் உலோகமாகும். மேலும் இது செல்பேசிகள், தொலைக்காட்சிகள் முதலான மின்னணுக் கருவிகளில் சிறிய அளவில் காணப்படுகிறது.
மகன்: ஓ!அப்படியா?
சிந்தனை செய்
நீங்கள் இருக்குமிடத்தில் ஏதேனும் சுரங்கம் உள்ளதா? அதிலிருந்து கனிமம் கிடைக்கின்றதா?
தந்தை: மற்றொரு பயனுள்ள கனிமம், பாக்சைட் ஆகும்.
மகன்: நான் பாக்சைட் பற்றி அறிந்ததே இல்லை .
தந்தை: பாக்சைட்டிலிருந்து அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. அலுமினியம் மின்னணுவியல், கட்டுமானம், வாகனங்கள் மற்றும் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
மகன்: பாக்சைட் பற்றி, மேலும் சொல்லுங்கள் அப்பா.
நாம் அறிந்து கொள்வோம்.
பாக்சைட் படிமம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
தந்தை: பாக்சைட் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், மின்சாரத் தொழிற்சாலைகளிலும் இயந்திரங்களைத் தயாரிப்பதிலும் பாக்சைட் பயன்படுத்தப்படுகிறது.
மகன்: வியப்பாகவுள்ளது.
தந்தை: பாக்சைட் காகிதம் தயாரித்தலிலும் நீர், பெட்ரோலியம் முதலியவற்றைத் தூய்மைப்படுத்துதலிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா? இரப்பர் மற்றும் அழகுசாதனப் பொருள்களின் உற்பத்தியிலும் (Manufacture) பாக்சைட் பயன்படுத்தப்படுகிறது.
மகன்: அப்பா, இது மிகவும் பயனுள்ள தகவலாகவுள்ளது.
செயல்பாடு
நாம் செய்வோம்
விமானத்தின் விடுபட்ட பகுதியைக் கண்டுபிடிக்க.
தந்தை: மகனே, நீ துத்தநாகம் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
மகன்: இல்லை அப்பா. துத்தநாகம் பற்றி மேலும் கூறுங்கள்.
தந்தை: துத்தநாகம் இன்றியமையாத அருந்தனிமம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், மனித ஆரோக்கியத்திற்கு மிகக் குறைந்த அளவு துத்தநாகம் அவசியம். நம் உடல் அதிகப்படியான துத்தநாகத்தைச் சேமிக்காது. அதனால் நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதியாக இதைனையும் உட்கொள்ள வேண்டும். துத்தநாகம் அதிக அளவில் சிவப்பு இறைச்சி, வெள்ளை இறைச்சி மற்றும் கடல் உணவு ஆகியவற்றில் காணப்படுகிறது.
மகன்: துத்தநாகத்தின் பிற பயன்கள் யாவை?
தந்தை: துத்தநாகம் ஆக்சைடு வண்ணப்பூச்சுகள், இரப்பர், அழகுசாதனப் பொருள்கள், மருந்துகள், மை, மின்கலன்கள், ஆடைகள் மற்றும் மின் சாதனங்கள் போன்ற பல தயாரிப்புகளின் உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மகன்: ஓ! அப்படியா!
தந்தை: மிகவும் பயனுள்ள மற்றொரு கனிமம் பொட்டாசியம் ஆகும்.
மகன்: பொட்டாசியத்தின் பயன்கள் யாவை?
தந்தை: விவசாயத்தில் சுமார் 95% பொட்டாசியம் உரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மண்ணில் போதுமான பொட்டாசியம் இல்லை என்றால், பொட்டாசியம் உரங்களைப் பயன்படுத்திப் பயிர்களின் தரத்தை மேம்படுத்தலாம். மீதமுள்ள 5% பொட்டாசியம், சோப்பு போன்ற வணிக மற்றும் தொழிலகத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
மகன்: நன்றி, அப்பா! நான் அறிந்து கொண்ட தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தன. இவற்றை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
தந்தை: மிகவும் சிறப்பு. அப்படியே செய்.
கலைச்சொற்கள் :
மீள்பார்வை