3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் - வினா விடை
Freedom Fighters of Tamil Nadu
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க (Choose the Correct Answer)
1. பாரதியார் எங்கே பிறந்தார்?
விடை: (அ) எட்டயபுரம்
2. பாரதியார் ________ என்ற கவிதையை இயற்றவில்லை.
விடை: (இ) கத்தியின்றி
3. கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் ________ ஆவார்.
விடை: (இ) வ. உ. சிதம்பரனார்
4. ‘ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை உருவாக்கியவர் ________ .
விடை: (ஆ) செண்பகராமன்
5. ஞானபானு என்ற மாத இதழைத் தொடங்கியவர் ________ .
விடை: (அ) சுப்பிரமணிய சிவா
II. பொருத்துக (Match the Following)
Think and match the pairs before checking the answer below.
வினாக்கள் (Questions):
| 1. தேசபந்து இளைஞர் சங்கம் | - | பாரதியார் |
| 2. திண்டுக்கல் | - | திருப்பூர் குமரன் |
| 3. சர்வதேச இந்திய சார்பு குழு | - | சுப்பிரமணிய சிவா |
| 4. சுதேசமித்திரன் | - | வ. உ. சிதம்பரனார் |
| 5. வழக்குரைஞர் | - | செண்பகராமன் |
விடைகள் (Answers):
| 1. தேசபந்து இளைஞர் சங்கம் | - | திருப்பூர் குமரன் |
| 2. திண்டுக்கல் | - | சுப்பிரமணிய சிவா |
| 3. சர்வதேச இந்திய சார்பு குழு | - | செண்பகராமன் |
| 4. சுதேசமித்திரன் | - | பாரதியார் |
| 5. வழக்குரைஞர் | - | வ. உ. சிதம்பரனார் |
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க (Answer the Following)
1. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
(i) பாரதியார்,
(ii) திருப்பூர் குமரன்,
(iii) வ.உ.சிதம்பரனார்,
(iv) சுப்பிரமணிய சிவா.
(ii) திருப்பூர் குமரன்,
(iii) வ.உ.சிதம்பரனார்,
(iv) சுப்பிரமணிய சிவா.
2. பாரதியார் எழுதிய கவிதைகளுள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
(i) வந்தே மாதரம்,
(ii) அச்சமில்லை,
(iii) எந்தையும் தாயும்,
(iv) ஜெய பாரதம்
போன்றவை பாரதியார் எழுதிய கவிதைகளாகும்.
(ii) அச்சமில்லை,
(iii) எந்தையும் தாயும்,
(iv) ஜெய பாரதம்
போன்றவை பாரதியார் எழுதிய கவிதைகளாகும்.
3. இந்திய சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் குறித்து எழுதுக.
வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேய கப்பல்களுக்கு எதிராகச் சுதேசி நீராவி கப்பல் சேவையைத் தூத்துக்குடி மற்றும் கொழுப்பு இடையே தொடங்கினார்.
4. சுதந்திரப் போராட்டத்தில் செண்பகராமனின் பங்களிப்பு குறித்து எழுதுக.
(i) இவர் சூர்ச்சில் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கான சர்வதேச இந்திய சார்பு குழுவை நிறுவினார்.
(ii) பெர்லினில் இருந்த இந்திய சுதந்திரக் குழுவிலும் சேர்ந்தார்.
(iii) 'ஜெய்ஹிந்த்' என்ற வாசகத்தை அவர் தாம் உருவாக்கினார்.
(ii) பெர்லினில் இருந்த இந்திய சுதந்திரக் குழுவிலும் சேர்ந்தார்.
(iii) 'ஜெய்ஹிந்த்' என்ற வாசகத்தை அவர் தாம் உருவாக்கினார்.
5. திருப்பூர் குமரன் குறித்து ஓர் சிறு குறிப்பு வரைக.
(i) திருப்பூரில் பிறந்தவர், தம் இளம் வயதில் அவர் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
(ii) தேசபந்து இளைஞர் சங்கம் என்பதனைத் தொடங்கினார்.
(iii) இந்தியாவின் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடியே இறந்தார்.
(iv) எனவே அவர் ‘கொடிகாத்த குமரன்' என்று அழைக்கப்படுகிறார்.
(ii) தேசபந்து இளைஞர் சங்கம் என்பதனைத் தொடங்கினார்.
(iii) இந்தியாவின் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடியே இறந்தார்.
(iv) எனவே அவர் ‘கொடிகாத்த குமரன்' என்று அழைக்கப்படுகிறார்.
செயல் திட்டம் (Project Work)
உங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின விழா பற்றி எழுதுக.
(i) எங்கள் பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
(ii) விழாத் தலைவர் (தலைமை ஆசிரியர்) தேசியக் கொடியை ஏற்றினார். மாணவர்கள் சுதந்திரம் அடைந்த வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் பற்றி உரையாற்றினார்.
(iii) சுதந்திரம் பற்றிய பாட்டு, நடிப்பு, கவிதை மற்றும் உரையாடல் என அனைத்தும் நடந்தேறின.
(iv) நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.

செயல்பாடு (Activity)
பின்வரும் படத்தில் இடம்பெற்றுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை எழுதுக.
விடை: 1. வீரபாண்டியன் கட்டபொம்மன் , 2. வேலுநாச்சியார்
நமது தேசியக் கொடிக்கு வண்ணம் தீட்டுக.