3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : கனிம வளங்கள்
Mineral Resources - 3rd Social Science Term 3 Unit 2
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. மின்கம்பிகளுக்குள் இருக்கும் உலோகம் __________ ஆகும்.
விடை : இ) தாமிரம்
2. நகைகளைத் தயாரிக்க __________ பயன்படுத்தப்படுகிறது.
விடை : இ) தங்கம்
3. உரமாகப் பயன்படும் கனிமம் __________ ஆகும்.
விடை : ஆ) பொட்டாசியம்
4. துத்தநாகம் __________ இல் காணப்படுகிறது.
விடை : இ) மீன்
5. விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயன்படும் கனிமம் __________
விடை : ஆ) பாக்சைட்
II. பொருத்துக.
மாணவர்களே: விடைகளைப் பார்ப்பதற்கு முன், கீழே உள்ள கேள்விகளைப் படித்து நீங்களே பொருத்த முயற்சி செய்யுங்கள்.
(Students: Try to match these items yourself before checking the answers below.)
(Students: Try to match these items yourself before checking the answers below.)
| 1. பாக்சைட் | - அ) இரயில் தடங்கள் |
| 2. இரும்புத் தாது | - ஆ) தாமிரம் |
| 3. துத்தநாகம் ஆக்ஸைடு | - இ) அலுமினியம் |
| 4. உலோக மின்கம்பி | - ஈ) சோப்பு |
| 5. பொட்டாசியம் | - உ) இரப்பர் பொருள்கள் |
விடை :
| 1. பாக்சைட் | – இ) அலுமினியம் |
| 2. இரும்புத் தாது | – அ) இரயில் தடங்கள் |
| 3. துத்தநாகம் ஆக்ஸைடு | – உ) இரப்பர் பொருள்கள் |
| 4. உலோக மின்கம்பி | – ஆ) தாமிரம் |
| 5. பொட்டாசியம் | - ஈ) சோப்பு |
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
1. பூமியில் காணப்படும் சில கனிமங்களின் பெயர்களைக் கூறுக.
- ❖ இரும்பு
- ❖ தாமிரம்
- ❖ பாக்சைட்
- ❖ தங்கம்
- ❖ வெள்ளி
போன்றவை பூமியில் காணப்படும் கனிம வளங்களாகும்.
2. மின்சாரத்தைக் கடத்தும் சில கனிமங்களின் பெயர்களைக் கூறுக.
- ❖ இரும்பு
- ❖ தாமிரம்
- ❖ பாக்சைட்
- ❖ தங்கம்
- ❖ வெள்ளி
போன்றவை மின்சாரத்தைக் கடத்தும் தனிமங்களாகும்.
3. தாமிரத்தின் சில பயன்பாடுகளை எழுதுக.
- ❖ மின்கம்பி தயாரிக்கப் பயன்படுகிறது.
- ❖ கணினி, தொலைக்காட்சி, செல்பேசி முதலான அனைத்து மின் கருவிகளிலும் தாமிரம் பயன்படுகிறது.
4. இரும்புத் தாது குறித்துச் சிறு குறிப்பு வரைக.
- ❖ இரும்புத் தாது இரும்பு உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இது கனிமம் ஆகும்.
- ❖ தமிழ்நாட்டில் கஞ்சமலையில் கிடைக்கிறது.
- ❖ வாகனங்கள், இயந்திரங்கள் இரயில் தடங்கள், கப்பல்கள், தளவாடங்கள் செய்யப் பயன்படுகின்றன.
5. துத்தநாகம் இன்றியமையாத அருந்தனிமம் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
- ❖ மனித ஆரோக்கியத்திற்கு மிகக் குறைந்த அளவு துத்தநாகம் அவசியம்.
- ❖ நம் உடல் அதிகப்படியான துத்தநாகத்தைச் சேமிக்காது.
- ❖ அதனால் நம் உண்ணும் உணவில் ஒரு பகுதி துத்தநாகம் கலந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ❖ இது வெள்ளை இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவில் உள்ளது.