10th Tamil - Half Yearly Exam 2024 - Original Question Paper | Ramanathapuram District

10th Standard Tamil Half Yearly Exam 2024 - Complete Solutions | Ramanathapuram District

10th Standard Tamil Half Yearly Exam 2024

District: Ramanathapuram Marks: 100 Time: 3.00 Hours
10th Tamil Half Yearly Question Paper 2024 10th Tamil Half Yearly Question Paper 2024 10th Tamil Half Yearly Question Paper 2024 10th Tamil Half Yearly Question Paper 2024 10th Tamil Half Yearly Question Paper 2024

பகுதி - I (மதிப்பெண்கள்: 15)

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. (15 x 1 = 15)

1.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
  • அ) நிலத்திற்கேற்ற விருந்து
  • ஆ) இன்மையிலும் விருந்து
  • இ) அல்லிலும் விருந்து
  • ஈ) உற்றாரின் விருந்து
விடை: ஆ) இன்மையிலும் விருந்து
2.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
  • அ) இலையும் சருகும்
  • ஆ) தோகையும் சண்டும்
  • இ) தாளும் ஓலையும்
  • ஈ) சருகும் சண்டும்
விடை: ஈ) சருகும் சண்டும்
3.
கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது. வாடைக்காற்று வீசியது. இத்தொடருக்கான தலைப்பு_________
  • அ) வனத்தின் நடனம்
  • ஆ) மொட்டின் வருகை
  • இ) காற்றின் பாடல்
  • ஈ) மிதக்கும் வாசம்
விடை: இ) காற்றின் பாடல்
4.
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
  • அ) அறிவினா
  • ஆ) கொளல் வினா
  • இ) கொடை வினா
  • ஈ) ஐய வினா
விடை: ஆ) கொளல் வினா
5.
சுதந்திர குகுதுவது இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது..
  • அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
  • ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
  • இ) அறிவியல் முன்னேற்றம்
  • ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
விடை: ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
6.
எழுகதிர், முத்துப்பல் - இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே
  • அ) வினைத்தொகை, பண்புத்தொகை
  • ஆ) உவமைத்தொகை, வினைத்தொகை
  • இ) உவமைத்தொகை, உம்மைத் தொகை
  • ஈ) வினைத்தொகை, உவமைத்தொகை
விடை: ஈ) வினைத்தொகை, உவமைத்தொகை
7.
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
  • அ) வானத்தையும் பாட்டையும்
  • ஆ) வானத்தையும் புகழையும்
  • இ) வானத்தையும் பூமியையும்
  • ஈ) வானத்தையும் பேரொலியையும்
விடை: ஈ) வானத்தையும் பேரொலியையும்
8.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
  • அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
  • ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
  • இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  • ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
விடை: இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
9.
"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை" - இக்குறள் அடியின் பொருள்
  • அ) உயிரை விடச் சிறந்தது
  • இ) பகைவர் இன்றி தானே கெடுவர்
  • ஆ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்
  • ஈ) பிறருக்கு உதவி செய்யாதவர்
விடை: ஆ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்
10.
'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்?
  • அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
  • ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
  • இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
  • ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
விடை: ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
11.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
  • அ) அகவற்பா
  • ஆ) வெண்பா
  • இ) வஞ்சிப்பா
  • ஈ) கலிப்பா
விடை: அ) அகவற்பா

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
"செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழுரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்"

12.
இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
  • அ) நீதிவெண்பா
  • ஆ) புறநானூறு
  • இ) முல்லைப்பாட்டு
  • ஈ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
விடை: ஈ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
13.
இப்பாடலின் ஆசிரியர்
  • அ) கீரந்தையார்
  • ஆ) குமரகுருபரர்
  • இ) நப்பூதனார்
  • ஈ) செய்குதம்பிப் பாவலர்
விடை: ஆ) குமரகுருபரர்
14.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள பிள்ளைத்தமிழ் பருவம்
  • அ) அம்புலி
  • ஆ) சப்பாணி
  • இ) சிறுதேர்
  • ஈ) செங்கீரை
விடை: ஈ) செங்கீரை
15.
கிண்கிணி, அரைநாண் என்பன முறையே
  • அ) காலில் அணிவது, இடையில் அணிவது
  • ஆ) நெற்றியில் அணிவது, இடையில் அணிவது
  • இ) இடையில் அணிவது, காலில் அணிவது
  • ஈ) இடையில் அணிவது, காதில் அணிவது
விடை: அ) காலில் அணிவது, இடையில் அணிவது

பகுதி - II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - 1

எவையேனும் 4 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். [வினா எண்: 21 கட்டாயம்] (4 x 2 = 8)

16.
விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ). சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி.

வினா: சாலை விதிகளில் முதன்மையான விதி யாது?

ஆ). சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் இரா.இளங்குமரனார்.

வினா: சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
17.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். அதுபோல, இறைவன் தனக்குத் துன்பம் செய்தாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து அவன் மீது அன்பு செலுத்துவதே நம்பிக்கையாகும்.
18.
அவையம் - குறிப்பு வரைக.
அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. இவற்றுள் 'அவையம்' என்பது முக்கியமானதாகும். "அறநிலை கண்ட அவையம்" என்று புறநானூறு குறிப்பிடுகிறது. இது உறையூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
19.
கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.
"கரப்பிடும்பை இல்லார்" என்பதற்கு "தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைக்கும் குணம் இல்லாதவர்" என்று பொருள். அதாவது, வாரி வழங்கும் வள்ளல் தன்மையுடையவர்களை இது குறிக்கிறது.
20.
நமக்கு உயிர் காற்று... விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.
1. மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
2. மாசில்லா காற்று! மனிதனுக்கு ஊற்று!
21.
"தரும்" என முடியும் திருக்குறளை எழுதுக.
"ஒழுக்கம் விழுப்பம் தரும்; லான
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்."

பிரிவு - 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 x 2 = 10)

22.
வேங்கை என்பதைத் தொடர் மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
  • தனிமொழி: 'வேங்கை' என்பது ஒரு மரத்தைக் குறிக்கும்.
  • தொடர்மொழி: வேம் + கை = வேகின்ற கை எனப் பொருள் தரும்.
  • பொதுமொழி: இவ்வாறு ஒரே சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி ஆகும்.
23.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.
அ) மலை - மாலை: மாலை நேரத்தில் மலை மீது சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
ஆ) இயற்கை - செயற்கை: செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்.
24.
உரைத்த -- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
உரைத்த = உரை + த் + த் + அ
உரை - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
25.
கலைச்சொற்கள் தருக.
அ) Homograph - ஒப்பெழுத்து / ஒருசொல் பல்பொருள்
ஆ) Belief - நம்பிக்கை
26.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
வெட்சி (நிரை கவர்தல்)கரந்தை (நிரை மீட்டல்)
வஞ்சி (மண்ணாசை கருதி போருக்குச் செல்லல்)காஞ்சி (எதிர்த்துப் போரிடல்)
நொச்சி (மதில் காத்தல்)உழிஞை (மதில் வளைத்தல்)
தும்பை (வலிமை கருதி போரிடல்)வாகை (வெற்றி பெறுதல்)
27.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
அ). கண்ணும் கருத்தும்: (மிகக் கவனமாக) - தாய் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.
ஆ). மனக்கோட்டை: (கற்பனை செய்தல்) - தேர்வு எழுதாமல் வெற்றி பெறலாம் என்று மனக்கோட்டை கட்டாதே.
28.
எண்ணுப்பெயர்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக.
அ). ஐந்துசால்பு ஊன்றிய தூண். (ஐந்து = 5) -> ரு
ஆ). நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. (நான்கு = 4, இரண்டு = 2) -> ௪, ௨

பகுதி - III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 x 3 = 6)

29.
"பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ" - வினவுவது ஏன்?
விருந்தோம்பல் பண்பின் சிறப்பைக் கூறவே இவ்வரி வினவுகிறது. இரவில் வீட்டின் வாயில் கதவை மூடுவதற்கு முன், "உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா?" என்று கேட்கும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது. இது தமிழர்களின் உயர்ந்த விருந்தோம்பல் பண்பைக் காட்டுகிறது. (நற்றிணை பாடல்).
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக. (ஆவூர் மூலங்கிழார் உரை)
அ) போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?
விடை: போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனார், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிவதே போர் அறமாகும்.

ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?
விடை: தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.

இ) போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
விடை: பசு, பார்ப்பனார், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்.

பிரிவு - 2

எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (வினா எண்: 34 கட்டாயம்). (2 x 3 = 6)

31.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிட்டுத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் 'தர்க்கத்திற்கு அப்பால்' கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
தர்க்கத்திற்கு அப்பால் கதையில் வரும் யோகநாதன், பிச்சைக்காரியை ரயிலில் பார்க்கும் போது அவளுக்கு உதவி செய்ய நினைக்கிறான். ஆனால் சில்லறை இல்லாததால் செய்ய முடியவில்லை. பின்னர் அவளை நினைத்து வருந்துகிறான். இவ்வாறு மனிதர்களின் இயலாமையையும், அதே சமயம் அவர்களுக்குள் இருக்கும் ஈரத்தையும் ஜெயகாந்தன் வெளிப்படுத்துகிறார்.
32.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
1. அன்னை மொழியாக விளங்குதல்.
2. அழகிய செந்தமிழாகத் திகழ்தல்.
3. பாண்டிய மன்னனின் மகளாகப் பிறந்தது.
4. திருக்குறளின் பெருமைக்குரியவள்.
5. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கிய வளங்களைக் கொண்டவள்.
33.
உம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள திருக்குறளின் "மெய் உணர்தல்" அதிகாரத்தின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.
எப்பொருள் எத்தன்மையதாயினும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவு. ஐம்புலன்களால் நுகரப்படும் இன்பங்கள் நிலையற்றவை என்று உணர்ந்து, மெய்ப்பொருளாகிய இறைவனை (அல்லது உண்மையை) உணர்வதே பிறவிப் பயன் ஆகும்.
34.
அடிபிறழாமல் எழுதுக.
அ). "அருளைப் பெருக்கி" எனத் தொடங்கும் நீதி வெண்பா பாடல்:

"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அறுத்து ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவது கல்வி யென்றே போற்று."

(அல்லது)

ஆ). "மாற்றம் எனது" எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடல்:

"மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்பதறிந்து ஏகுமென் சாலை."

பிரிவு - 3

எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 x 3 = 6)

35.
தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
1. மல்லிகைப்பூ (தோட்டத்தில் மல்லிகைப்பூ பூத்தது) - ஒன்றன்பால் (அஃறிணை)
2. ஆடுமாடுகள் (ஆடுமாடுகளுக்குத் தண்ணீர் தொட்டியில்...) - பலவின்பால் (அஃறிணை)
3. வந்தவள் (வீட்டினுள் வந்தவள்) - பெண்பால் (உயர்திணை)
4. பார்த்தாள் (மணி பார்த்தாள்) - பெண்பால் வினைமுற்று.
36.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இத்திருக்குளில் பயின்று வரும் அணியைக் குறிப்பிட்டு விளக்குக.
அணி: நிரல்நிறை அணி.
விளக்கம்: சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி ஆகும்.
பொருத்தம்: இக்குறளில் அன்பு, அறன் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பு, பயன் என்ற சொற்களோடு முறையே இணைத்துப் பொருள் கொள்ள வைத்துள்ளதால் இது நிரல்நிறை அணியாகும். (அன்புக்குப் பண்பும், அறத்துக்குப் பயனும்).
37.
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்" - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
சீர் அசை வாய்பாடு
ஊழையும் நேர் நிரை கூவிளம்
உப்பக்கம் நேர் நேர் நேர் தேமாங்கனி
காண்பர் நேர் நேர் தேமா
உலைவின்றித் நிரை நேர் நேர் புளிமாங்கனி
தாழா நேர் நேர் தேமா
துஞற்று நிரை நேர் புளிமா
பவர் நிரை மலர் (ஈற்றுச்சீர்)

பகுதி - IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 x 5 = 25)

38.
அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர் களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
குறிப்பு: கருணையன் தன் தாய் இறந்தபோது அடைந்த துயரம்.
  • மலர்ப்படுக்கையில் உறங்குபவளே! இப்போது மண் படுக்கையில் உறங்குகிறாயே!
  • மணியே! மணிக்கொரு மணியே! என் வாழ்வின் ஒளிவிளக்கே!
  • தாயின் அன்பை இழந்த நான், தவிக்கின்றேன்.
  • இளம்பயிர் வாடுவது போலவும், மலர் கருகியது போலவும் நான் வாடுகிறேன்.
  • உயிரற்ற உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றது போல், நீ என்னை விட்டுச் சென்றாயே!
(அல்லது) ஆ) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
அமைச்சருக்குரிய இயல்புகள்:
  • வன்சுண், குடிகாத்தல், கற்றல், ஆள்வினையோடு (விடாமுயற்சி) ஆகிய ஐந்தும் அமைச்சருக்குத் தேவை.
  • செயலைச் செய்யும் முன் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
  • இயற்கை அறிவுடன் நூல் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
  • இவ்வியல்புகள் மாணவர்களாகிய நமக்கும் பொருந்தும். நாமும் கல்வியைக் கற்று, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம்.
39.
அ) பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக.
கடித மாதிரி:
இடம்: மதுரை,
தேதி: 20.12.2024.

அன்புள்ள மாமா அவர்களுக்கு,
நலம். நலமறிய ஆவல். நான் இங்கு நலமாக உள்ளேன். சென்ற வாரம் எங்கள் பள்ளி விளையாட்டுத் திடலில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் அதிக பணம் இருந்தது. நான் அதை எடுத்துத் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தேன். அவர் அப்பையை உரியவரிடம் சேர்த்தார். என் நேர்மையைப் பாராட்டிப் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் எனக்குப் பரிசளித்துப் பாராட்டினர். இச்செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.
உறைமேல் முகவரி: திரு. க. மாறன், சென்னை.
(அல்லது) ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
10th Tamil Half Yearly Question Paper 2024

[படம்: ஒரு உழவன் செல்லும் காட்சி]

தலைப்பு: உழவன்
ஏர்பிடித்து உழுபவன்...
ஏற்றம்கட்டி இறைப்பவன்...
இறைவனுக்கு அடுத்தவன்...
உன் வியர்வை துளிகள் முத்துக்கள்!
சுமை உனக்குத் துரும்பாகலாம்,
ஆனால் வறுமை உனக்கு இரும்பாகிறது.
உழைக்கும் கரங்களே உலகின் உரங்கள்.
நீ சுமப்பது பாரம் அல்ல, உன் குடும்பத்தின் ஆதாரம்!
41.
படிவம் நிரப்புக: தஞ்சாவூர் மாவட்டம், கம்பர் நகர், வள்ளுவர் தெருவில் உள்ள 39 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் கந்தனின் மகள் கண்ணகி... விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நிரப்புக.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை படிவம்
பெயர்:கண்ணகி
தந்தை பெயர்:கந்தன்
பாலினம்:பெண்
பிறந்த தேதி:XX-XX-2009
முகவரி:எண் 39, வள்ளுவர் தெரு, கம்பர் நகர், தஞ்சாவூர்.
பள்ளி:அரசு மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.
விருப்பமான விளையாட்டு:கால்பந்து (பூங்கொடி)
கைப்பேசி எண்:9876543210

கண்ணகி
(கையெழுத்து)
42.
தமிழில் மொழிபெயர்க்கவும். (Respected ladies and gentlemen...)
மதிப்பிற்குரிய தாய்மார்களே, பெரியோர்களே!
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் இளங்கோவன். நம் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிச் சில வார்த்தைகள் பேச இங்கு வந்துள்ளேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. மொழிக்கான இலக்கணத்தை வகுத்த தமிழர்கள், வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் வாழ்வியலில் தமிழ்ப் பண்பாடு வேரூன்றியுள்ளது. நமது பண்பாடு மிகப் பழமையானதாக இருந்தாலும், அது தொடர்ந்து தன்னைத் புதுப்பித்துக் கொள்கிறது. நமது பண்பாட்டை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி.

பகுதி - V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 x 8 = 24)

43.
அ). போராட்டக் கலைஞர் - பேச்சுக்கலைஞர் நாடகக்கலைஞர் -திரைக்கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
தலைப்பு: கலை ஞாயிறு நா. முத்துசாமி
  • முன்னுரை: தெருக்கூத்து கலையை மீட்டெடுத்த மாபெரும் கலைஞர் நா. முத்துசாமி அவர்களின் பன்முகத் தன்மையை இக்கட்டுரை விளக்குகிறது.
  • நாடகக் கலைஞர்: கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி, நவீன நாடகங்களை அரங்கேற்றினார். தெருக்கூத்து கலையை உலகறியச் செய்தார்.
  • திரைக்கலைஞர்: நாடகங்கள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் தனது கலைத்திறனை வெளிப்படுத்தினார்.
  • இயற்றமிழ்க் கலைஞர்: நாடகங்களை இயற்றியதோடு, சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
  • முடிவுரை: கலையே வாழ்க்கை என்று வாழ்ந்த நா. முத்துசாமி அவர்களின் பணி போற்றுதலுக்குரியது.
(அல்லது) ஆ). நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு -நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் "மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்" என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
44.
அ). 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
துணைப்பாடம்: புதிய நம்பிக்கை (மேரி மெக்லியோட் பெத் in)
  • முன்னுரை: கல்வியின் முக்கியத்துவத்தை மேரி மெக்லியோட் பெத் in அவர்களின் வாழ்க்கை வரலாறு மூலம் அறியலாம்.
  • திருப்புமுனை: மேரி சிறுவயதில் பருத்தி வயலில் வேலை செய்தபோது, ஒரு வெள்ளைக்காரச் சிறுமி அவளிடமிருந்து புத்தகத்தைப் பிடுங்கி, "உனக்குப் படிக்கத் தெரியாது" என்று அவமானப்படுத்தினாள்.
  • கல்வி வேட்கை: அந்த அவமானமே மேரிக்குக் கல்வி கற்க வேண்டும் என்ற வெறியை உண்டாக்கியது. பல தடைகளைத் தாண்டி பள்ளி சென்றாள்.
  • சாதனை: விடாமுயற்சியால் படித்து, கல்லூரியை நிறுவி, அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆலோசகராக உயர்ந்தாள்.
  • முடிவுரை: "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற வாக்கியத்திற்கு இலக்கணமாக மேரி திகழ்ந்தார். கல்வி ஒருவரின் வாழ்க்கையை எப்படி உயர்த்தும் என்பதற்கு இவர் வாழ்வே சான்று.
(அல்லது) ஆ). அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்' சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
45.
அ). குறிப்புகளைப் பயன்படுத்தி "விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
தலைப்பு: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
  • முன்னுரை: இந்தியப் பெண்மணிகளில் விண்வெளிக்குச் சென்ற முதல் வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார்.
  • இளமைப் பருவம்: ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே விமானங்களின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
  • கல்வி: பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விண்வெளிப் பொறியியல் பயின்றார். பின் அமெரிக்கா சென்று முதுகலைப் பட்டம் பெற்றார்.
  • விண்வெளிப் பயணம்: 1997-ல் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். 2003-ல் கொலம்பியா விண்கலத்தில் இரண்டாம் முறை பயணம் மேற்கொண்டார்.
  • விண்வெளி சாதனைகள்: விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். இளைஞர்களுக்குக் கனவு காணச் சொன்னார்.
  • முடிவுரை: பூமிக்குத் திரும்பும் போது விண்கலம் வெடித்துச் சிதறியதில் மறைந்தார். இருப்பினும், அவரது சாதனை என்றும் அழியாது.
(அல்லது) ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு கட்டுரைக்குக. சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.