Standard Units of Measurement | Class 3 Maths Term 1 Unit 4 | Samacheer Kalvi

தேவையான தரப்படுத்தப்பட்ட அலகுகள் | அளவீடுகள் | 3 ஆம் வகுப்பு கணக்கு

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : அளவீடுகள்

தேவையான தரப்படுத்தப்பட்ட அலகுகள்

செயல்பாடு 1

ரகு அவனுடைய வகுப்பறை மேசையை திட்டமில்லா அளவைகளால் அளந்து அவற்றை பட்டியலிட்டுள்ளான் நீங்களும் உங்கள் நண்பர்களோடு சேர்ந்து உங்கள் வகுப்பறை மேசையை அளந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.

வகுப்பறை மேசையை அளக்கும் அட்டவணை

திட்டமில்லா அலகுகளால் எடுக்கப்பட்ட அளவுகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். இந்த வேறுபாட்டிற்கான காரணத்தை யூகிக்க முடியுமா?

செயல்பாடு 2

ஒரு ரிப்பனின் நீளத்தை ‘சாண்' மூலம் அளக்கவும்.

ரிப்பனை சாண் மூலம் அளத்தல்

மணி - _______________ சாண்கள்

நீலா - _______________ சாண்கள்

ராமு - _______________ சாண்கள்

ரவி - _______________ சாண்கள்

தரப்படுத்தப்படாத அகாவை உபயோகப்படுத்தியதால் அனைத்து அளவுகளும் சமமாக இல்லை.

மேசையை அளக்க மாணவர்கள் தங்கள் விரல் கடை, சாண் மற்றும் முழங்கை உபயோகப்படுத்தினர். ஆனால், அவர்களுக்கு வெவ்வேறு விடைகள் கிடைத்தது. ஏன்?

நம்மைச் சுற்றியுள்ள பொருள்களின் நீளத்தை எளிய பொருள்களைக் கொண்டு அளந்து அறிதல்.

செயல்பாடு 3

கொடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு. கரும்பலகையின் நீளத்தை ஐந்து மாணவர்களை கொண்ட குழுவால் அளக்க வேண்டும்.

பென்சில், அழிப்பான், அளவுகோல் மற்றும் நோட்டுபுத்தகம்.

பொருட்களை கொண்டு கரும்பலகையை அளக்கும் அட்டவணை

கலாவும் அவளின் தோழிகளும் அளந்த அளவுகள் அனைத்தும் ஒன்றா என்பதை நீ கவனித்தாயா?

நீட்டல் அளவை
தரப்படுத்தப்பட்ட மற்றும் தரப்படுத்தப்படாத அளவுகள்

தரப்படுத்தப்படாத அலகுகள்

1. விரல் கடை

2. சாண்

3. முழம்

4. தப்படி

5. காலடி

(அளவீடு நபருக்கு நபர் மாறுபடும்)

தரப்படுத்தப்பட்ட அலகுகள்

1. மில்லிமீட்டர்

2. சென்டி மீட்டர்

3. மீட்டர்

4. கிலோ மீட்டர்

(அளவிடும் அலகுகள் மாறாதது)

ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர், தரப்படுத்தப்படாத அலகுகளை பயன்படுத்தி பொருள்களின் நீளத்தை கண்டறிய குழந்தைகளுக்கு உதவ வேண்டும்.