OMTEX AD 2

Measuring Weight with Non-Standard Units | 3rd Grade Maths Term 2 Unit 3 Measurements

Measuring Weight with Non-Standard Units | 3rd Grade Maths Term 2 Unit 3 Measurements

அளவைகள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு

திட்டமற்ற அலகுகள் கொண்டு பொருள்களின் எடையை அளத்தல்

செயல்பாடு 1

எளிய தராசின் ஒரு தட்டில் உங்கள் கணித உபகரணப் பெட்டியை வைத்தும் மற்றொரு தட்டில் பின்வரும் பொருள்களை வைத்தும் அதன் எடையைக் கணக்கிடவும். 1) புளியங்கொட்டைகள் 2) கற்கள் / கூழாங்கற்கள் மற்றும் 3) அழிப்பான், நீங்கள் கண்டறிந்த எடையை அட்டவணை படுத்தவும்.

கணித உபகரணப்பெட்டி மற்றும் திட்டமற்ற அலகுகளுடன் தராசு

பொருள்கள் : எடை (திட்டமற்ற அளவைகள்)

கணித உபகரணப்பெட்டி இலகுவானது புளியங்கொட்டைகள்

கணித உபகரணப்பெட்டி கனமானது கற்கள் / கூழாங்கற்கள்

கணித உபகரணப்பெட்டி இலகுவானது அழிப்பான்

தொடர் செயல்பாடு

கணித உபகரணப்பெட்டிக்குப் பதிலாக மதிய உணவுப் பாத்திரம் (lunch box) யை வையுங்கள். வேறு பொருள்கள் வைத்தும் இதை நீங்கள் முயற்சி செய்யலாம்.

மதிய உணவுப் பாத்திரம் மற்றும் திட்டமற்ற அலகுகளுடன் தராசு

பொருள்கள் : எடை (திட்டமற்ற அளவைகள்)

உணவுப் பாத்திரம் (lunch box) இலகுவானது புளியங்கொட்டைகள்

உணவுப் பாத்திரம் (lunch box) கனமானது கற்கள் / கூழாங்கற்கள்

உணவுப் பாத்திரம் (lunch box) இலகுவானது அழிப்பான்

முடிவு

புளியங்கொட்டைகள் – கற்கள் / கூழாங்கற்கள் மற்றும் அழிப்பான்களைக் கொண்டு அளக்கப்பட்ட பொருள்களின் எடை வெவ்வேறாக இருக்கும், ஏனெனில் அவை திட்டமற்ற அளவைகள். எனவே, நாம் திட்டமான எடை கருவியான எடைக்கற்களைப் பயன்படுத்துகிறோம்.

திட்டமான எடைக்கற்கள்