Grade 3 Maths Term 1 Unit 6: Information Processing - Listing All Ways

3 ஆம் வகுப்பு கணக்கு: முதல் பருவம் அலகு 6 - தகவல் செயலாக்கம்

தகவல் செயலாக்கம் - அனைத்து வழிகளையும் பட்டியலிடுதல்

அலகு 6: தகவல் செயலாக்கம்

தகவல் செயலாக்கம் அலகு 6 தலைப்பு

முறையான பட்டியல்

அனைத்து வழிகளையும் பட்டியலிடுதல்

கவின் சுற்றுலாவில் அணிய 2 கால் சட்டைகள் மற்றும் 3 மேல் சட்டைகளையும் எடுத்து சென்றான். அவற்றை அணியாக கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பட்டியலிடுக.

எடுத்துக்காட்டு:

சட்டை மற்றும் கால் சட்டை சேர்க்கைகள் எடுத்துக்காட்டு

படம் 1-ல் கொடுத்திருப்பது போல், அதில் 1 சட்டை மட்டும் 2 கால் சட்டைகளை அணிய வழிகள் உள்ளன.

இதே போன்று மீதமுள்ள 2 சட்டைகளை கால் சட்டைகளுடன் படம் 2 மற்றும் 3-ல் இருப்பதுபோல 4 வழிகளில் அணியலாம்.

எனவே 2 கால் சட்டைகளை 3 சட்டைகளுடன் 6 வழிகளில் பட்டியலிடலாம்.

பழம் மற்றும் காய்கறி சேர்க்கைகள்

காவியா ஒரு நாளில் 1 பழமும் 1 காய்கறியும் சாப்பிட விரும்புகிறாள் பழங்களில் ஆப்பிளும், ஆரஞ்சும், காய்கறிகளில் கேரட்டும், வெள்ளரியும் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒரு பழம் மற்றும் ஒரு காயினை உண்னும் வழிவகையில் பூர்த்தி செய்க.

பழம் மற்றும் காய்கறி சேர்க்கை அட்டவணை

மூன்றிலக்க எண்களை அமைத்தல்

எடுத்துக்காட்டு:

4, 5 மற்றும் 7 ஆகிய 3 எண்களை கொண்டு அமைக்கக்கூடிய அனைத்து மூன்றிலக்க எண்களையும் பட்டியலிடுக.

சாத்தியமான கூறுகள்

4, 5, 7 எண்களைக் கொண்டு அமைக்கப்படும் மூன்றிலக்க எண்கள்

பயிற்சி செய்

1. கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களை ஒரே முறை மட்டும் பயன்படுத்தி அமைக்கக்கூடிய அனைத்து மூன்றிலக்க எண்களையும் பட்டியலிடுக.

a. 9, 6, 8

b. 3, 2, 0

c. 1, 5, 4

சாத்தியமான கூறுகள்

a. 986 968 698 689 896 869

b. 320 302 230 203 032 023

c. 154 145 415 451 541 514

மூன்றிலக்க எண்கள் பயிற்சி

2. a, e, t என்ற எழுத்துக்களை ஒரே முறை மட்டும் பயன்படுத்தி இணைக்கக்கூடிய அனைத்து வார்த்தைகளையும் கண்டறிக.

சாத்தியமான கூறுகள்

a, e, t எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகள் அமைத்தல்

செயல்பாடு 1: வில்லைகளுக்கு வண்ணம் தீட்டுவோம்

நீலம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள 4 வில்லைகளை வண்ணம் தீட்டுவதற்கான வாய்ப்புகளையும் கண்டறிக. உங்களுக்காக ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.

வில்லைகளுக்கு வண்ணம் தீட்டும் செயல்பாடு

செயல்பாடு 2

கொடுக்கப்பட்டுள்ள வில்லைகளில் உள்ள வெற்றிடத்தை ஒன்று விட்டு ஒன்று மாறுபடுமாறு வண்ணமிட்டு, அதன் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க.

வண்ணமிடப்பட்ட வில்லைகள்

1. மொத்த வில்லைகளின் எண்ணிக்கை 2

2. இளஞ்சிவப்பு வில்லைகளின் எண்ணிக்கை 4

3. பச்சை வில்லைகளின் எண்ணிக்கை 6

4. 2 மற்றும் 4ம் வரிசையில் உள்ள இளஞ்சிவப்பு வில்லைகளின் எண்ணிக்கை. 1 & 2

5. இளஞ்சிவப்பு வில்லைகளை விட பச்சை வில்லைகள் எவ்வளவு அதிகமாக உள்ளன? 2

அனைத்து வாய்ப்புகளையும் பட்டியலிடுக

எடுத்துக்காட்டு:

R என்ற ஆங்கில எழுத்தினைக் கொண்டு ஆரம்பிக்கும் 3, 4 மற்றும் 5 எழுத்துக்கள் கொண்ட அனைத்து சொற்களையும் பட்டியலிடுக.

R எழுத்தில் தொடங்கும் வார்த்தைகள்

மேற்கண்ட வார்த்தைகளை உற்று நோக்கி வினாக்களுக்கு விடையளி

(i) 4 எழுத்துக்கள் கொண்ட சொற்களின் எண்ணிக்கை 3

(ii) 5 எழுத்துக்கள் கொண்ட சொற்களின் எண்ணிக்கை 3

(iii) பட்டியலில் 0 2 எழுத்து சொற்கள் உள்ளன.

(iv) பட்டியலில் 3 3 எழுத்து சொற்கள் உள்ளன.

செயல்பாடு 3

1. R என்ற ஆங்கில எழுத்தினைக் கொண்டு அமைக்கக்கூடிய 3 மற்றும் 4 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளைப் பட்டியலிடுக.

2. ஆங்கிலப் பெயர்களில் 4 எழுத்துக்கள் கொண்ட விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

மான் ஆடு முதலியன