3rd Grade Maths: Term 1 Unit 6 - Information Processing | Data Collection

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்

தரவு சேகரித்தல் மற்றும் குறித்தல்

தரவுகளை குறிப்பதற்கு படங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தலாம். தரவுகளை எளிதாக புரிந்து கொள்ள இவை பயன்படுகின்றன.

தரவு சேகரித்தல் மற்றும் குறித்தல்.

விளக்கப்படத்தில் குறித்தல்

தரவுகளை குறிப்பதற்கு படங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தலாம். தரவுகளை எளிதாக புரிந்து கொள்ள இவை பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து தேவையான தரவுகளை நிரப்புக.

விலங்குகளுடன் தொடர் வண்டி

1. எத்தனை யானை உள்ளன?

3

2. எத்தனை ஒட்டகச்சிவிங்கி உள்ளன?

5

3. அதிக எண்ணிக்கையில் உள்ள விலங்கினை வட்டமிடுக?

அதிக எண்ணிக்கையில் உள்ள விலங்கு

4. குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்கினை வட்டமிடுக.

குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்கு

5. விலங்குகளின் அதிக மற்றும் குறைந்த எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டினைக் காண்க.

2

6. தொடர் வண்டியில் உள்ள மொத்த விலங்குகளின் எண்ணிக்கை

14

எந்த விலங்கு அதிகமாக வளர்கிறது? நியாயப்படுத்து

எடுத்துக்காட்டு:

பின்வரும் படம் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட பழங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

பழக்கடை விற்பனை விளக்கப்படம்

மேலுள்ள படத்தினைப் பார்த்து, தேவையான தகவல்களை நிரப்பவும்.

1. அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பழம் எது?

அன்னாச்சிப்பழம்

2. குறைவாக விற்பனை செய்யப்பட்ட பழம் எது?

வாழைப்பழம்

3. கடையில் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை

30

4. கடையில் விற்பனை செய்யப்பட்ட வாழைப்பழங்களின் எண்ணிக்கை

5

5. விற்பனை செய்யப்பட்ட அன்னாசி மற்றும் ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு

30

பயிற்சி செய்

1. உங்கள் பள்ளியில் உள்ள 40 நபர்களின் விருப்ப உணவுகளைப் பற்றி தகவல் சேகரித்து, அவற்றினை விளக்க படத்தில் குறிப்பிடவும்.

விருப்ப உணவு அட்டவணை

2. ஒரு வாரத்தில் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளின் எண்ணிக்கை படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனிப்புகள் விற்பனை அட்டவணை

மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

1. வியாழக்கிழமை விற்கப்பட்ட இனிப்புகளின் மொத்த எண்ணிக்கை

40

2. விற்பனை அதிகமாக இருந்த நாள்

திங்கள்கிழமை

3. விற்பனை குறைவாக இருந்த நாள்

சனிகிழமை

4. செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் விற்பனை சமமாக இருந்தன

5. ஆறு நாட்களில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளின் மொத்த எண்ணிக்கை

180