2வது கணக்கு : பருவம்-1 அலகு 2 : எண்கள்
எண்களை ஒப்பிடுதல்
எண்களை ஒப்பிடுதல்
எள்ளுருண்டைகள் நெல்லிக் கனிகளை விடக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. நெல்லிக்கனிகள் எள்ளுருண்டைகளை விட அதிக எண்ணிக்கையில் உள்ளன.
நினைவு கூர்க
அதிகம் மற்றும் குறைவு
எள்ளுருண்டைகள் நெல்லிக் கனிகளை விடக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.
நெல்லிக்கனிகள் எள்ளுருண்டைகளை விட அதிக எண்ணிக்கையில் உள்ளன.
கற்றல்
பூக்களின் எண்ணிக்கையை ஒப்பிடுக
மஞ்சள் தொட்டியில் 9 பூக்களும் நீலத் தொட்டியில் 5 பூக்களும் உள்ளன. நீலத்தொட்டியில் உள்ளதைவிடமஞ்சள் தொட்டியில் அதிக எண்ணிக்கையில் பூக்கள் உள்ளன.
9 என்பது 5 ஐ விடப் பெரியது.
மஞ்சள் தொட்டியில் உள்ளதை விட நீலத் தொட்டியில் குறைவான எண்ணிக்கையில் பூக்கள் உள்ளன. 5 என்பது 9 ஐ விடச் சிறியது.
நீலத் தொட்டியில் 5 பூக்களும் பச்சைத் தொட்டியில் 5 பூக்களும் உள்ளன.
இரண்டு தொட்டிகளிலும் சமமான எண்ணிக்கையில் பூக்கள் உள்ளன. 5 என்பது 5க்குச் சமம்.
செய்து பார்
பொருள்களை எண்ணிக் கட்டங்களை நிரப்புக. வலப்புறத்திலும் இடப்புறத்திலும் உள்ள எண்களை ஒப்பிட்டுப் பார்த்து, கொடுக்கப்பட்டுள்ள மூன்று கூற்றிலிருந்து சரியான ஒன்றை வட்டமிடுக.
கற்றல்: எண்களின் ஒப்பீடு
ஓரிலக்க எண்ணோடு ஈரிலக்க எண்ணை ஒப்பிடுவோம். எடுத்துக்காட்டு 9 மற்றும் 15
15 என்பது 9 ஐ விடப் பெரியதாகும்
இரண்டு இலக்க எண்ணோடு, ஓரிலக்க எண்ணை ஒப்பிட்டால் எப்பொழுதும் இரண்டு இலக்க எண்ணே பெரியதாகும்.
1. வெவ்வேறு பத்துகள் கொண்ட ஈரிலக்க எண்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். 25 மற்றும் 35
இரு எண்களின் பத்தின் இடமதிப்பை மட்டும் ஒப்பிட்டால் போதுமானது.
25 இல் 2 பத்துகள் உள்ளன.
35 இல் 3 பத்துகள் உள்ளன.
2 பத்துகள் என்பது 3 பத்துகைள விடச் சிறியது.
எனேவ 25 என்பது 35 ஐ விடச் சிறியது.
35 என்பது 25 ஐ விடப் பெரியது.
2. ஒரே பத்துகள் மற்றும் வெவ்வேறு ஒன்றுகள் கொண்ட ஈரிலக்க எண்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். எடுத்துக்காட்டு 27 மற்றும் 24.
இங்கு பத்தின் இடமதிப்புகள் சமம்
எனேவ, ஒன்றுகைள ஒப்பிடுவோம்.
27 - இல் 7 ஒன்றுகள் உள்ளன.
24 - இல் 4 ஒன்றுகள் உள்ளன.
7 ஒன்றுகள் 4 ஒன்றுகளை விடப் பெரியது.
எனேவ, 27 என்பது 24 ஐ விடப் பெரியது
24 என்பது 27 ஐ விடச் சிறியது.
ஆசிரியருக்கான குறிப்பு
வெவ்வேறு பத்துகள் கொண்ட ஈரிலக்க எண்களை ஒப்பிடும்போது பத்துகளை மட்டும் ஒப்பிட்டால் போதுமானது எனவும் ஒரே பத்துகள் கொண்டிருக்கும் எண்களை ஒப்பிடும்போது ஒன்றுகளை ஒப்பிட வேண்டும் எனவும் ஆசிரியர் மாணவர்களுக்கு வலியுறுத்தலாம்.
செய்து பார்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதை வட்டமிடுக
(i) 75ஐ விடச் சிறிய எண்
71 85 98 75
(ii) 40ஐ விடப் பெரிய எண்
25 49 39 40
(iii) 56 இக்குச் சமமான எண்
60 65 56 57
முயன்று பார்
சரியானவற்றிற்கு (✔) குறியிடவும். தவறானவற்றிற்கு (X) குறியிடவும்.
(i) 3 பத்துகள் 4 ஒன்றுகள் என்பது 2 பத்துகள் 3 ஒன்றுகளை விடப் பெரியது. (✔)
(ii) 6 பத்துகள் 5 ஒன்றுகள் என்பது 2 பத்துகள் 3 ஒன்றுகளை விடச் சிறியது. (X)
(iii) 5 பத்துகள் 3 ஒன்றுகளுக்குச் சமமானது 53. (✔)
(iv) 55 என்பது 56க்குச் சமம். (X)
(v) 65 என்பது 64 ஐ விடப் பெரியது. (✔)
(vi) 74 என்பது 47 ஐ விடச் சிறியது. (X)