Class 2 Maths: Term 1 Unit 2 - Number Names | Numbers in Tamil

Class 2 Maths: Term 1 Unit 2 - Number Names | Numbers in Tamil

எண் பெயர்

2வது கணக்கு : பருவம்-1 அலகு 2 : எண்கள்

எண்களுக்கு எதிராக எண் பெயர்களை எழுதி முடிக்கவும்.

2 ஆம் வகுப்பு கணக்கு புத்தகம் - எண்கள்

பயணம் செய்வோம்

பாட்டுப் பாடுவோம்

ஒன்னு ஒன்னு ஒன்னு

பூமிக்குச் சூரியன் ஒன்று

ரெண்டு ரெண்டு ரெண்டு

போடும் காலணி இரண்டு

மூனு மூனு மூனு

சிறப்பான கனிகள் மூன்று

நாலு நாலு நாலு

நமக்குத் திசைகள் நான்கு

அஞ்சு அஞ்சு அஞ்சு

ஒரு கை விரல்கள் ஐந்து

ஆறு ஆறு ஆறு

நாவின் சுவைகள் ஆறு

ஏழு ஏழு ஏழு

சப்த சுவரங்கள் ஏழு

எட்டு எட்டு எட்டு

சிலந்திக்குக் கால்கள் எட்டு

ஒன்பது ஒன்பது ஒன்பது

மதிப்பான ரத்தினங்கள் ஒன்பது

பத்து பத்து பத்து

இரண்டு கைவிரல்கள் பத்து

கற்றல்

குதிரையைப் பராமரிப்பவர் தன்னுடைய 20 குதிரைகளை ஓர் அணி வகுப்புக்கு அழைத்துச் செல்கிறார். குதிரையின் மீதுள்ள எண் மற்றும் எண் பெயர்களை உற்றுநோக்குக.

குதிரைகள் அணிவகுப்பு

செய்து பார்

பொருத்தமான எண் பெயரை எழுதி அட்டவணையை நிறைவு செய்க.

எண் பெயர் அட்டவணை

1 - ஒன்று

2 - இரண்டு

3 - மூன்று

4 - நான்கு

5 - ஐந்து

6 - ஆறு

7 - ஏழு

8 - எட்டு

9 - ஒன்பது

10 - பத்து

11 – பதினொன்று

12 - பன்னிரண்டு

13 - பதின்மூன்று

14 - பதினான்கு

15 - பதினைந்து

16 - பதினாறு

17 - பதினேழு

18 - பதினெட்டு

19 - பத்தொன்பது

20 – இருபது

செய்து பார்

எண்களுடன் எண் பெயரைப் பொருத்துக

11
15
13
14

முயன்று பார்

கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் ஒளிந்திருக்கும் 11 முதல் 20 வரையிலான எண் பெயர்களைக் கண்டறிந்து வட்டமிடுக.

எண் பெயர் வார்த்தை தேடல்

செயல்பாடு

எண் பெயரைக் கண்டுபிடி.

• புளிய "விதைகள்" சிலவற்றையும் எண்பெயர் "1" முதல் 20 வரை எழுதிய எண்ணட்டைகளையும் எடுத்துக்கொள்க.

• ஆசிரியர் 2 மாணவர்களை அழைத்து ஒருவரின் காதில் மெதுவாக ஓர் எண்ணைக் கூற வேண்டும்.

• அந்த மாணவர் அந்தந்த எண்ணுக்கேற்ப புளிய விதைகளை எண்ணி எடுத்து அடுத்த மாணவரிடம் கொடுத்தல் வேண்டும். (எண்ணைக் கூறக் கூடாது)

• அடுத்த மாணவர் புளிய விதைகளை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைக்கு உரிய எண் பெயர் எழுதிய அட்டையை எடுக்க வேண்டும்.

• அனைத்து மாணவர்களும் எண் பெயர்களை நன்றாக அறியும் வரை ஆசிரியர் இச்செயல்பாட்டைத் தொடரலாம்.