2வது கணக்கு : பருவம்-1 அலகு 2 : எண்கள் - இட மதிப்பு
பயணம் செய்வோம்
சின்னு, மின்னு
எனது வலப்பக்கம் 10 கேரட்டுகள் கொண்ட கட்டுகள் உள்ளன.
சின்னு, மின்னு 42 கேரட்டுகள் கொண்டு வாருங்கள்
எனது இடப்பக்கம் கேரட்டுகள் உதிரிகளாக உள்ளன.
நான் 4 கட்டுகளும் 2 உதிரிகளும் எடுத்துள்ளேன்.
நான் 2 கட்டுகளும் 4 உதிரிகளும் வைத்துள்ளேன்.
யார் எடுத்தது சரி?
நான் 42 எடுத்தேன்.
இல்லை, நான் தான் 42 எடுத்துள்ளேன்.
ஆசிரியருக்கான குறிப்பு
மேலே உள்ள சூழலைப் பற்றிக் கலந்துரையாடி அதில் பல்வேறு எண்களை மாற்றி இடமதிப்பினை விளக்கலாம்.
கற்றல்
மேலே உள்ள சூழலில் இருந்து 42இன் இட மதிப்பை அறிவோம்.
இடமதிப்பு என்பது எண்களில் அவ்வெண் இருக்கும் இடத்தைப் பொறுத்தது ஆகும்.
செய்து பார்
கொடுக்கப்பட்ட எண்களுக்குப் பத்துகளாகவும் ஒன்றுகளாகவும் மணிச்சரங்கள் வரைக.
கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.
முயன்று பார்
அட்டவணையை நிரப்புக
செயல்பாடு
எண் 0 முதல் 9 வரை கொண்ட 2 சோடி எண் அட்டைகள் எடுத்துக்கொள்ளவும்.
கரும்பலகையில் 'பத்துகள்', 'ஒன்றுகள்' என எழுதி அதன் எதிரே அட்டைகளை வைக்கவும்.
மாணவர் இருவரை அழைத்துப் 'பத்துகள்', 'ஒன்றுகள்' எழுதிய இடத்தில் நிற்க வைக்கவும்.
இருவரும் தனித்தனியே எண் அட்டைகளை எடுக்க வேண்டும்.
'பத்துகள்' அருகே நிற்பவர் 'நான்தான் 2, 'பத்துகள்' இடத்தில் இருப்பதால் என்னுடைய இடமதிப்பு 'இருபது' எனக் கூறிவிட்டு இருபது மணிகளைக் காண்பிக்க வேண்டும்.
'ஒன்றுகள்' அருகே நிற்பவர் நான்தான் 4, 'ஒன்றுகள்' இடத்தில் நிற்பதால் என்னுடைய இடமதிப்பு 4 'ஒன்றுகள்' எனக் கூறிவிட்டு 4 மணிகளை எடுக்கவும். எனவே, எங்கள் எண் 24 எனக் கூற வேண்டும்.
வெவ்வேறு ஈரிலக்க எண்ணைக்கொண்டு ஆசிரியர் இச்செயல்பாட்டைத் தொடரலாம்.
மகிழ்ச்சி நேரம்
விடைகளுக்கு வண்ணமிடுக
பத்துகளும் ஒன்றுகளும் சமமாக உள்ள கட்டங்களுக்கு மட்டும் நீல வண்ணமிடுக.
மேலே உள்ள எண்ணட்டையை உற்றுநோக்கி விடையளிக்க.
ஒன்றின் இடமதிப்பு அல்லது பத்தின் இடமதிப்புகளில் 7 இடம்பெறும் எண்களை எழுதுக.
7, 17, 27, 37, 47, 57, 67, 70, 77, 87, 97
பத்தின் இடமதிப்புகளில் 6 உள்ள அனைத்து எண்களையும் எழுதுக.
60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69
ஒன்றின் இடமதிப்புகளில் 8 உள்ள அனைத்து எண்களையும் எழுதுக.
8, 18, 28, 38, 48, 58, 68, 78, 88, 98
பத்துகள் மற்றும் ஒன்றுகளின் இடமதிப்புகளில் 9 உள்ள எண் எது?
99